Posts

மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம்

Image
வேலூர் நேத்தாஜ் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் மண்டலம். இரண்டாம் மண்டலத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்த தொகை ரூபாய் -3700.

இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்...

Image
இன்று காலை வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது, முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது, அபராதம் கட்டாத வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது...

Image
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் உத்தரவு பேரில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்று காலை  குரூப்-1 தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது, மேலும் தேர்வு எழுதப் படும் அறைகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, தேர்வு எழுத வரும் நபர்களை காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பப்பட்டது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு  முக கவசம் அணிந்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை.....கவிதாயினி தா. கவிசெல்வி.

Image
வா, வாழலாம்!   எப்படியும் வாழ புலன்கள் புலம்பும் உடல் கலன்கள் அலம்பும் மனம் தளும்பும் அறிவு மழுங்கும்   கிறுக்கல்கள் ஒழுங்க லானால் அழகு சித்திரம்   புலன் சறுக்கல்கள் ஒழுங்க லானால் வாழ்வின் அத்திரம்! மனிதா உன் வாழ்க்கை பத்திரம்!!   நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை நாதி மேல தேவை யில்லை ஓதுவது வாகையில்லை ஒழுகுவதோ என் வகை யில்லை என ஓடும் மனிதா உண்மையில் உனக்கு பதிலோ என்னிடமில்லை!!   நானும் கண்ட தில்லை நீதி சொல்பவனை,   நானும் கேட்ட தில்லை நல் தீர்ப்பு பெற்ற வனை,   நானும் விண்ட தில்லை நாதி யுடனே சென்ற வனை,   ஆனால், நான் அறிவேன் நீ யறிவாய் ஊர் அறியும் உல கறியும்!   களை பிடுங்க கை களுண்டு என் பதனை!!!   மரணம் யாரிடமும் மரணித்த தில்லை! மரணம் வரும் வழியி னமும் யாருக்   கும் புலனித்த தில்லை!!   எனில் நீதி சொல்ல? நல் தீர்ப்பு எழுத?? நாதிபேறு???   சிந்தி! - உன் அறிவை சிந்தி சிந்தி...

விருட்ச தேவதையே சுபிட்ச மேதகையே....கவிதாயினி தா. கவிசெல்வி.

Image
விருட்ச தேவதை   சிலை மேனி சித்தி ரத்தில் இலை தேனி பத்தி ரத்தில்   உறங்கும் உயிர் ஏணியே உல காணியே!..   கிளை தாங்கி எத் தணிக்க உயிர் கூடு தித் திணிக்க   உதவிய உர மேடே கர வீடே!..   காற் றோடு கை சேர்த்து பாட் டோடு கிளை யாட   ஊற் றோடும் உன் அன்பில் உயிர் கூடு ஊஞ் சலாட   பூக் கூட்டம் அதி லாட தேன் மூட்டம் விழி மூட   வான் முட்டும் வழி ஓட கார் சொட்டும் மொழி பாட!   குடை யாய் விரிந் தாலும் அடை யாய் வரிந் தாலும்   ஒற்றை சடை யாய் நின் றாலும் மடை யாய் மன தினிலே   விருட்ச தேவதையே! சுபிட்ச மேதகையே!..   பச்சை யிலே உர மூட்டி நீ தச்ச இலை தழை யாக   இச்சை யிலே தேன் கூட்டி நீ வச்ச கனி மிச்ச மாக உயி ரின் எச்ச மாக   மிச்ச தண்டு கிளை யெல்லாம் நிழலின் பட்சமாக வகை யூட்ட வீட்டில் சட்டமாக தொகை கூட்ட   மொத்தத் தையும் நீ தந்து உலகின் விட்டமாக நின்ற தென்ன?   சாலையிலே இரு மருங்கும்...