Posts

விருட்ச தேவதையே சுபிட்ச மேதகையே....கவிதாயினி தா. கவிசெல்வி.

Image
விருட்ச தேவதை   சிலை மேனி சித்தி ரத்தில் இலை தேனி பத்தி ரத்தில்   உறங்கும் உயிர் ஏணியே உல காணியே!..   கிளை தாங்கி எத் தணிக்க உயிர் கூடு தித் திணிக்க   உதவிய உர மேடே கர வீடே!..   காற் றோடு கை சேர்த்து பாட் டோடு கிளை யாட   ஊற் றோடும் உன் அன்பில் உயிர் கூடு ஊஞ் சலாட   பூக் கூட்டம் அதி லாட தேன் மூட்டம் விழி மூட   வான் முட்டும் வழி ஓட கார் சொட்டும் மொழி பாட!   குடை யாய் விரிந் தாலும் அடை யாய் வரிந் தாலும்   ஒற்றை சடை யாய் நின் றாலும் மடை யாய் மன தினிலே   விருட்ச தேவதையே! சுபிட்ச மேதகையே!..   பச்சை யிலே உர மூட்டி நீ தச்ச இலை தழை யாக   இச்சை யிலே தேன் கூட்டி நீ வச்ச கனி மிச்ச மாக உயி ரின் எச்ச மாக   மிச்ச தண்டு கிளை யெல்லாம் நிழலின் பட்சமாக வகை யூட்ட வீட்டில் சட்டமாக தொகை கூட்ட   மொத்தத் தையும் நீ தந்து உலகின் விட்டமாக நின்ற தென்ன?   சாலையிலே இரு மருங்கும்...

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை...

Image
டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் தொடங்கிவைக்கிறார் . விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித் தொகையை இன்று விடுவிக்கிறது மத்திய அரசு. 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்படுகிறது.

என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழப்பு...

"என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழப்புக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்" தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் பரபரப்பு தகவல் "அனல்மின் நிலைய பாய்லர்களில் பணியாற்றுபவர்கள் கொதிக்கலனை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்" "பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே கொதிக்கலனை தூய்மை செய்ய பயன்படுத்தி இருக்க வேண்டும்" "கொதிக்கலனை சரிவர கையாள தெரியாத ஊழியர்களை அப்பணியில் ஈடுபடுத்தியதால் விபத்து"

பணிநிறைவு பெற்ற பெல் நண்பர்களுக்கு பாராட்டு...

Image
பாரத மிகு மின் நிறுவனமான பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டு விழா பெல் வளாகத்தில் நடைபெற்றது.   இவ்விழாவிற்கு துணை பொது மேலாளர் எம்.தேசிகன் தலைமை தாங்கினார்.  முன்னதாக ஓய்வுபெற்ற துணை பொது மோலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி.ரத்தினம் வரவேற்று பேசினார். பெல் நண்பர்கள் சங்க தலைவர் சி.மனோஜ்குமார் முன்னிலை வகித்தார்.   மேற்பார்வையாளராக பணியாற்றி பணிநிறைவுபெற்ற  ஆர்.கண்ணன், முதுநிலை பொறியாளர்கள் ஜி.ராஜகோபால், ஜெ.குப்பன், தொழில்நுட்ப வல்லுனர் ஜி.பஞ்சாட்சரம், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை ஜனார்த்தனன், கலச.ராமலிங்கம் ஆகியோர்  வழங்கி பாராட்டினர். பெல் துணை பொது மேலாளர் நாகராஜ், சுரேஷ்குமார், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.வி.கோபாலாச்சாரி, மக்கள் நெஞ்சம் ஆசிரியர் கலச.இராமலிங்கம், சந்திரசேகராச்சாரி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஆர்.ஜி.நாகலிங்கம் நன்றி கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் ஜி.ரத்தினம் உணவு ...

தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்...

Image
மதுரை: தென் மேற்கு ரெயில்வே, பயணிகளின் வசதிக்காக மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரெயில் சேவையை கால நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வ.எண்.06236) அடுத்த மாதம் 30-ந்தேதி வரையிலும், மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரெயில் (வ.எண்.06235) அடுத்த மாதம் 31-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ரெயில்களின் நேர அட்டவணையில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக 6.35 மணிக்கு புறப்படும். மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், மணியாச்சியில் இருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக 10 மணிக்கும் புறப்படும். இந்த ரெயில் தூத்துக்குடிக்கு காலை 11.10 மணிக்கு சென்...

கியாஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி ஆர்ப்பாட்டம்.

Image
ஆர்ப்பாட்டம் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- அ.தி.மு.க.வினர் பதவியை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்று செயல்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு இந்தி திணிப்பு, நீட் தேர்வு கொண்டு வந்த போதும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த போதும் அதனை ஏற்று வரவேற்கின்றனர். மத்திய அரசை எதிர்த்து எழக்கூடிய முதல் குரல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரல்தான். மக்களுக்கு துரோகம்: மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியது. அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள். எதையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாக மத்திய அரசு உள்ளது. அவர்களுக்க...

புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை...

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு ...

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் - உமேஷ் சின்ஹா. தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். ஒரேகட்டமாகதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். 

வேலூர் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் அவர்கள் லாங்கு பஜார் பகுதியில் மேற்பார்வை...

Image
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் லாங்கு பஜார் பகுதியில் தெருவோர வியாபாரிகளை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது, கொரோனா காலத்தில் தெருவோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கருதி அரசு அவர்களுக்கு வியாபாரத்தை மேம்படுத்த அவர்களுடைய வங்கியில் லோன் மூலம் கடன் உதவி வழங்க இருப்பதால் அனைவரையும் கணக்கெடுக்கப்பட்டு வருவதை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் அவர்கள் மேற்பார்வை செய்தனர்.

எழுத்தாணி தமிழ்க் கலை இலக்கிய சங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

Image
திருவள்ளூர் தமிழ்ச்சங்கம்,தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்ற முப்பெரும் சங்கங்கள் இணைந்து முப்பெரும் விழாவாக  சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் பெரும்புலவர் செம்மங்குடி துரையரசன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் வரவேற்புரையாளராக கவிமாமணி,பாவலர் எழுத்தாணி சேவூர்அரிராசு  அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் சொல்லின் செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆவடிக்குமார் அவர்களுக்கு தமிழ்மனச்  செம்மல் என்ற உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.  இதில்  தமிழ்ப் பெரும்புலவர்களால் தமிழன் வடிவேலாகிய எனக்கு "தமிழ்ச் சுவடி" என்ற உயரிய விருதையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்த முப்பெரும் விழாவில்  முனைவர் கா.மு.சேகர் (மேனாள் இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) புலவர் தாமரை பாண்டியன். (துணை இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)  சமூக சேவையை திருமதி சிவகாமி,பேராசிரியர் சாந்தகுமாரி ,பாவலர் ராமச்சந்திரன், மருத்துவர் ஜீவரேகா தலைவர் தென் சென்னை தமிழ் சங்கம்) சேக்கிழார் அப்பாசாமி தலைவர் (தமிழ்ப் பட்டறை) பொதுநலச் சேவகர் தாம்பரம் அரிச்...

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:  சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் அறிவித்த 2,000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்படுகின்றன. சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. கிராமப்புறம் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன.மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். கிளினிக் காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும். கிளினிக்கில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம்

மெரினா கடற்கரையில் நாளை முதல் அனுமதி.

Image
சென்னை :  8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர் செல்ல அனுமதி இல்லை.