விருட்ச தேவதையே சுபிட்ச மேதகையே....கவிதாயினி தா. கவிசெல்வி.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwlBNBLP-duG4HJTzHYiBgMS-fUNSv985_xOwY99wn9KPsdRjS-wWboyaLM_ybHf8tvML2SWSTBLUtE3NfgdUGl1P3iYjRX-If-EtEEAfdQp-5tBl38up-aeS9RjcsMSoUM9nnSJCQiC4/s320/Untitled.jpg)
விருட்ச தேவதை சிலை மேனி சித்தி ரத்தில் இலை தேனி பத்தி ரத்தில் உறங்கும் உயிர் ஏணியே உல காணியே!.. கிளை தாங்கி எத் தணிக்க உயிர் கூடு தித் திணிக்க உதவிய உர மேடே கர வீடே!.. காற் றோடு கை சேர்த்து பாட் டோடு கிளை யாட ஊற் றோடும் உன் அன்பில் உயிர் கூடு ஊஞ் சலாட பூக் கூட்டம் அதி லாட தேன் மூட்டம் விழி மூட வான் முட்டும் வழி ஓட கார் சொட்டும் மொழி பாட! குடை யாய் விரிந் தாலும் அடை யாய் வரிந் தாலும் ஒற்றை சடை யாய் நின் றாலும் மடை யாய் மன தினிலே விருட்ச தேவதையே! சுபிட்ச மேதகையே!.. பச்சை யிலே உர மூட்டி நீ தச்ச இலை தழை யாக இச்சை யிலே தேன் கூட்டி நீ வச்ச கனி மிச்ச மாக உயி ரின் எச்ச மாக மிச்ச தண்டு கிளை யெல்லாம் நிழலின் பட்சமாக வகை யூட்ட வீட்டில் சட்டமாக தொகை கூட்ட மொத்தத் தையும் நீ தந்து உலகின் விட்டமாக நின்ற தென்ன? சாலையிலே இரு மருங்கும்...