Posts

ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா...

Image
ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா ஆற்காட்டில் நகரில் நடைபெற்றது இவ்விழாவிற்கு தேசிய தலைவர் வீர வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் வாலாஜா டோல்கேட் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் ஆற்காடு நகரில் அண்ணா சிலைக்கு தேசியத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்காடு நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் ராமு தேசிய அமைப்பு செயலாளர் சாது உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர் முனி வேல் இளைஞர் அணி மகளிர் அணி தேசிய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் தேசிய தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது நாங்கள் மதசார்பற்ற கட்சியை துவங்கியுள்ளோம் எங்களது இந்திய தேசிய ஜனநாயக கட்சி பெண்களுக்கும் முழு பாதுகாப்பும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் கட்சியாக...

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்கள்.

Image
 இந்த வரைவு வாக்குச்சாவடி  பட்டியலை அனைத்து  கட்சியினர்களும்  பெற்றுக்கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர். இளம்பகவத் அரக்கோணம் கோட்டாட்சியர். பேபிஇந்திரா,  தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) கோ.தாரகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தே. இளவரசி, (பொறுப்பு) தேர்தல் தனிவட்டாட்சியர். ஜெயக்குமார், இராணிப்பேட்டை அனைத்து வட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

தேர்வு மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு...

Image
தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவராக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த செ.நா.ஜனார்த்தனன் தேர்தெடுக்கப்பட்டார்.  இவ்வமைப்பின் 34ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில்  நடைபெற்றது.  மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நாகை என்.ரவி வரவேற்று பேசினார்.   மாநில கௌரவத்தலைவர் த.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயல்பாடுகளை விளக்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது… தமிழகத்தில் கடநத் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு புதியதாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை மேலும் கடந்த 10 ஆண்டுகளாக காலி ஏற்பட்டுள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை இதனால் மாணவர்கள் தொழிற்கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசு தொழிற்கல்வி பாடங்களை தற்கால தேவைக்கேற்ப மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது எனவே அனைத்து மேனிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை ...

அன்று அது நியாயம் இன்று இது நியாயம் -தா.கவிசெல்வி.

Image
 மாயக் கீர்த்தனைகள்   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   அன்று அறுபதில்  அந்நிய மாகி வனத் தினில் புண்ணிய மாதல் வனப்பிரஸ்தம்- நியாயம்!   இன்று அறுபதில் அந்நியப் படுத்தலே அந்நியாயம்!   அங்கே அறுபதில் துறவு நியாயம்!   இங்கே அறுபதில் உறவே நியாயம்!   உணர்ச் 'சீ'களை உதறிப் பார்க்க மானுடம் முயலவில்லை! உணர்வு களை உருவிப் பார்க்க  இன்னும் பயிலவில்லை!   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   ஞாலத் தின் நியாயப் பரிவர்த்தனைகள் காலத்தின் மாயக் கீர்த்தனைகள்!   இது கலி யுக போர்க் கணைகள்!   நடுநிலை நழுவா நம் வர்த்தனைகளே சுழிநிலை உழலா நேர் சுனைகள்! வாழ்க்கைப் படகின்  நேர் சுனைகள்!   வாழ்க்கை முறை மாறலாம் வாழும் முறைமை மாற லாமா?   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   நேற்றோ  நண்பனாய்..- சொன்ன தெல்லாம் நியாயம்   இன்றோ எதிரி யாய்..- செய்வ தெல்லாம் அநியாயம்!   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   ஞாலத்தின் நியாயப் பரிவர்த்தனைகள்! காலத்தின் மாயக் கீர்த்தனைகள்!   அன்று உழைப் பில்லா  ம...

பந்த லிட்டு பந்தி விரித்தாள் - தா.கவிசெல்வி.

Image
மலை மகள்   நீண்டு வளர்ந்த மலைமுக ராணியே மீண்டு உயர்ந்த கவி யுக தோணியே   மலை யேற்றம் மது வேற்றமா?   உனைத் தீண்டும் சுகம் மூண்டு -உன் அகம் பூண்டு தரிசனம் காண்டு   மலையடி நீண்டு வழித்தடம் போந்து உயிர்த்  தடம் மீண்டோர் பலர்   மலை யேற்றம் மது வேற்றமா?   வழித் தடம் தாண்டையிலே உயிர்க் குடம் சீண்டையிலே மெய் தடம் மாண்டோரோ இன்னும் பலர்!   என்ன தான் எத்தளிக்குது உன்னில்! அதைத் திண்ணதான் தத்தளிக்குது எம்மில்?   பச்சை முக மேனி யில் இச்சை சுக காணி நீ!   நீலம் சொட்டு தே! நீ எனை வீழக் கொட்டும் தேனீ   மண் ணிற முன் னகமோ எனைப் பின்னிடும் சுண் ணகமோ!   கல் லாய்  நீ நின்று சொல் லாய் நிதம் வந்து கவியை செய்தாய் பண் ணில்   பிள் ளாய் என வந்து வில் லாய் வளை வித்து அம் பாய் மொய் தாய் என்னில்!   அண் ணாந்து பார்த் தே அக மாய்ந்து போ னேன்   எண் ணார்ந்த கற்பனை யில் எனில் ஆய்ந்து போனேன்   வெட்ட வெளி வான் உடன் - நீ தொட்ட துளி சாலப் பொருத்தம்   மழைக் கொட்டும் விண் ணின் வீழ்ச்சி யில் அலை முட்டும் உன் னின் புணர்ச்சி யோ அழகு நிறுத்தம் ...

வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா...

Image
வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா முன்னிட்டு மூன்றாம் நாளாம் இன்று திங்கட்கிழமை 19-10-20 ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம்நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் பகுதி கழக செயலாளர்கள் எம். ஏ. ஜெய்சங்கர் குப்புசாமி ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஏ. ஏ. தாஸ். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் வகுப்பறை...

Image
வேலூர் நடைபாறை அரசு ஆதி திராவிடர் நல ஆரம்ப பள்ளியின் சுமார்ட் வகுப்பறையை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் நேரில் வந்து திறந்து வைத்தார். முன்னதாக அடையாளமாக மரக்கன்று நடப்பட்டது.  மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் சுவர் முழுதும் வண்ண ஓவியங்கள், மேல்தளம் grid ceiling செய்யப்பட்டு, projector and projector screen, pen drive, two speakers, woofer center screen போன்ற வசதிகளுடன் உள்ளே நுழைந்ததும் தியேட்டர் உணர்வை கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி துணை ஆணையர், மண்டலம் 2 சுகாதார அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் இருந்தனர்.

பெண் காவலரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஆலங்குளம் காவல்துறையினர்.

Image
தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு. S.முருகன் IPS அவர்களின் உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினருக்கும் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி,அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று ஆலங்குளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் 2312 திருமதி. முருகேஸ்வரி அவர்களின் பிறந்தநாள் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னிவளவன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.காவல்துறையினரின் பணிச்சுமை களுக்கிடையே இவ்வாறு காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விடுமுறை அளிப்பது காவல்துறையினருக்கு மன மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக  தெரிவித்து வருகின்றனர்.

கடன் தவணை செலுத்துவதில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படாது ...

Image
உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாத தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும், வட்டிக்கான வட்டியை ரத்து செய்ய உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், 2 கோடிக்கும் குறைவான கடனுக்கு மட்டும் 6 மாத தவணை சலுகைக்கு வட்டி மீதான வட்டி ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடன் தவணை செலுத்த மேலும் காலஅவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதில் விலக்கு அளிப்பது தொடர்ந்தால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், பணப்பரிவர்தனையில் சுணக்கம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவம்...

Image
வரும் 16-ம் தேதி முதல் திருப்பதி மலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை மாட வீதிகளில் நடத்தவும், 300 ரூபாய் முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாட வீதிகளில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில், குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில்...

Image
விரைவில் 130 கி.மீ வேகமாகச் செல்லும் ரயில்களில் ஏசியில்லாத பெட்டிகள் கிடையாது - ரயில்வே அமைச்சகம் 130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேதுறையில் வரவுள்ள மாற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நரேன், ‘எல்லா ஏசியில்லாத ரயில்பெட்டிகளும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தற்போது, பெரும்பாலான வழித்தடங்களில் அதிகபட்ச வேகம் 110 கி.மீட்டராக இருந்துவருகிறது. சிறப்பு ரயில்களான ராஜதானிஸ், சதாப்தி, துரந்தோ ரயில்கள் மட்டுமே 120 கி.மீ வேகத்துக்கு இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சில ரயில்கள் 130 கி.மீட்டருக்கு மேல் வேகமாக இயக்குவதற்கு தகுதிவாய்ந்தவை. 130 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு ஏ.சி பெட்டிகள் அவசியமானவை. டிக்கெட் கட்டணம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும். ரயில்வே துறையை அதிவேகமாக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டுவருகிறது. 110 கி.மீட்டருக்கு குறைவான...

சேண்பாக்கம் ராகவேந்தர் மடத்தில் ஓமம் ஆரம்பம் ஆகி உள்ளது...

Image
சேண்பாக்கம் ராகவேந்தர் மடத்தில் உலக மக்களின் நன்மைவேண்டி  ஓமம் ஆரம்பம் ஆகி உள்ளது.

விவசாயிகளுக்கு சொத்து அட்டை...

Image

வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி...

Image
புதிய தண்ணீர் தொட்டி வைத்து, மோட்டார் பழுது சரி பார்த்து, புதிய குழாய்கள் மாட்டி, சிமெண்ட் மூலம் தொட்டியை சுவரில் நிரந்தரமாக பொருத்தி, எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து 2 வருடங்களாக பயனற்று இருந்த தண்ணீர் தொட்டியை 8 மணி நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.

வெங்காயத்தில் இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி ஒன்று கண்டறிந்துள்ளது.

Image
வெங்காயத்தில் வழக்கமான வெங்காயங்கள் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள வெங்காயங்கள் என இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி ஒன்று கண்டறிந்துள்ளது. தனது அங்காடியில் உள்ள வல்லா- வல்லா என்னும் ஒருவகை வெங்காயத்துக்கான விதைகள் குறித்து ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்த முயற்சி செய்தபோதே இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, வெங்காயத்தின் விதைகள் குறித்த விளம்பரம் "ஆபாசமாக" உள்ளதாக கூறி அதை ஃபேஸ்புக் நிராகரித்துள்ளது. இந்த நிலையில், தனது தானியங்கி தொழில்நுட்பம் செய்த இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் தானியங்கி தொழில்நுட்பத்தால் நிராகரிக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், அதிக எடை மற்றும் இனிப்பு சுவைக்காக அறியப்படும் வல்லா வல்லா வெங்காயங்கள் மரக்கூடையில் பல வெட்டப்படாமலும், சில வெட்டப்பட்ட நிலையிலும் உள்ளதை போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. தங்களது விளம்பரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிவதற்கு சிறிதுநேரம் பிடித்ததாக அந்த அங்காடியின் மேலாளர் ஜாக்சன் மெக்லீன் கூறுகிறார். அதன் ப...