Posts

வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா...

Image
வேலூரில் அமையப்பெற்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா மற்றும் ஆற்காடு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா  ஆகிய இரண்டு விழாக்களும்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்  ஏ.பி.சாஹி அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக  நடைபெற்றது. தலைமை நீதியரசர் அமரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். அவ்வுரையில் கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் கீழமை நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதியரசர் எம் சத்தியநாராயணன் வேலூர் மாவட்ட நீதிபதி நீதியரசர் எஸ்எம் சுப்பிரமணியம் வேலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மாண்புமிகு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும்  நீதியரசர் எம் டி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ் விழாவில்  செல்வசுந்தரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வேலூர் மாவட்டம் அவர்கள் வரவேற்புர...

குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா...

Image
பெண்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும்! ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்! வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்  இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊட்டச்சத்து குறித்த ஆட்டோ பிரச்சாரத்தை துவக்கி வைத்து ஊட்டசத்து பெட்டகங்களை  வழங்கியும், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.வி.வளர்மதி மற்றும் காட்பாடி ரோட்டரி சங்கம் தலைவர் ஆர். வினாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய வளரிளம் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் தாய்மார்கள், ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் நலனை பொறுத்தே அமைகிறது என  ஊட்டச்சத்து  மாத விழாவில் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க செப்டம்பர் மாதம் முழுவதும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத...

04.10.2020-ம் தேதி காலை - பிற்பகல் யு.பி.எஸ்.சி.தேர்வு...

Image
 04.10.2020 அன்று நடைபெற உள்ள யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 04.10.2020 ஆண்டு நடைபெற உள்ள யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியத் துறை அலுவலர்கள் 9 தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள் துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேற்படி தேர்வு காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை நடைபெற உள்ளது. மேற்படி தேர்வு வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறுகிறது மொத்தம் 24 36 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலூர்.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்.

Image
 இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ சிகிச்சைகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மரு.யாஸ்மின், துணை இயக்குனர் திரு. மணிவண்ணன் (சுகாதாரப்பணிகள்), துணை இயக்குனர் (குடும்ப நலம்) திரு. நெடுமாறன், சுகாதார அலுவலர் திரு. வேல்முருகன், அரசு மருத்துவமனை அனைத்து மருத்துவர்கள், வட்டார மருத்துவமனை அலுவலர்கள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

சீமை கருவேல் மரங்களை அகற்றி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம் தினேஷ் சரவணன்.

Image
வேலூர் மாநகராட்சி வார்டு 21 ஏறியூர் பாறை அருகில் உள்ள குளம் 10 வருடங்களாக பராமரிப்பின்றி இருந்து வருகிறது. அதனை சீரமைத்து தர அந்த பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.  அதன்படி குளத்தை சுற்றியுள்ள சீமை கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றி குளத்தை சுற்றி கரை எழுப்பி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம். மேலும் குளத்தை அழகு படுத்த இருக்கிறோம்.  

வறுமையில் தவித்து வந்துள்ள திருமதி நிர்மலா அவர்களுக்கு தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவியுள்ளார் தினேஷ் சரவணன்.

Image
வேலூர் மாநகரம் பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திருமதி நிர்மலா தனது கணவருடன் வறுமையில் தவித்து வந்தார். தனது ஒரே மகளும் திருமணத்திற்கு பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 இளநீர் கொண்டு தனது தொழிலை தொடங்கியுள்ள இவருக்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் வேண்டும்.  கடை வைத்த 10 வது நிமிடத்தில் ஒருவர் 100 ரூபாய்க்கு இளநீர் வாங்கி சென்றார்.

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி அவர்களை வாழ்த்துகிறோம்...

Image
வாழ்த்துகிறோம்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான ஆசிரியர்  முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன். ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் திரு. G. சேகர் அவர்களை வாழ்த்துகிறோம்.

Image
வாழ்த்துகிறோம்   தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான. திரு. G. சேகர், ஆங்கில பட்டதாரி. ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...  

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் திரு. M. ராஜா கஸ்பார் அவர்களை வாழ்த்துகிறோம்.

Image
வாழ்த்துகிறோம்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான. திரு. M. ராஜா கஸ்பார்  கணித பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...  

முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் மற்றும் பொருளாருக்கு  மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் பாராட்டு.

Image
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் கரோனா நோய் தடுப்பணிகளை சிறப்பாக செயலாற்றியதற்காக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து  நினைவுப் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சண்முகசுந்தரம், இஆப  அவர்கள் பாராட்டினார். வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.  நிகழ்வுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுத்து பேசினார்.   வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஆண்டாள், பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி,  மண்டல நன்னடத்தை அலுவலர் ஹஜாகாமாலுதீன்,  செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன்,  திருமாமறன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். கரோனா ந...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

Image
போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வாகை சூடி உள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. அதேநேரம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி,  தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்லர் , ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் ஸ்மித் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , டேவிட் மில்லர் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே ...

முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள்...

Image
முன்னாள் சிறைவாசிகளுக்கு 2.25 இலட்டசம் நலதிட்ட உதவிகள் சிறைத்துறையினருக்கு முக கவசம், கைசுத்திகரிப்பான், கையுறைகள், மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இஆப வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் சிறையிலிருந்து விடுதலையான 9பேருக்கு இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நலதிட்ட உதவிகளையும் சிறைதுறைக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை ஆகியவற்றை வேலூர் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளுக்கும் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப  அவர்கள் வழங்கினார்.      இவ் விழா மாவட்ட அலுவலகத்தில்  21.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.  நிகழ்வுகளை செயலாளர் செ.நா...

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்...

Image
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக  5068 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான  நடவடிக்கைகளை ரத்து செய்ய  சட்டமன்ற உறுப்பினரிடம் மனு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கையை  வலியுறுத்தி தமிழக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக       முதலமைச்சருக்கு  முறையீட்டு  மனு  அனுப்பப்ப தீர்மானிக்கப்பட்டது.  வேலூர் அதன் அடிப்படையில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார் அவர்களிடம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ஜி.டி.பாபு  ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.. தமிழகத்தில்  ஜனவரி 2019 -ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக  5068 அரசு ஊழியர்கள...

கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகள்.

Image
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஆகியவை தென்படலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 78,399 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,702, 595ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 77.88ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை வெ...

வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Image
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.