Posts

இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணையை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Image
அதன்படி, வரும் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, அக்டோபர் 14-ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தமிழக  மாணவர்களுக்கு வழக்கமான நேரடி முறையில் தேர்வு நடைபெறும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், கோரிக்கை விடுத்தால் அவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார்.

Image
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில். மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை முதல் ரயில் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

13வது ஐபிஎல் போட்டித் தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்படும்.

Image
13வது ஐபிஎல் போட்டித் தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ,  போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸூக்கும் - 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் என தெரிகிறது. 

செப். 12 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்...

Image
சென்னை - டெல்லி, சென்னை - சாப்ரா(பீகார்), திருச்சி - ஹவுரா(மேற்கு வங்கம்) இடையே செப். 12 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் .ரயில்களுக்கான முன்பதிவு செப்.10 காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு.

இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும்.

Image
நாளை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் .இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், பேருந்துகளை கவனமாக இயக்க அறிவுறுத்தல். 5  மாதங்களாக ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும் .நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடத்துநர்கள், ஓட்டுநருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - போக்குவரத்து கழகம்.

முக கவசம் அணிவதில் தளர்வு இல்ல...

Image
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு .தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை .பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.  காய்ச்சல், வாந்தி அறிகுறி இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது .ஆம்புலன்சுகள் 1005 ஏற்கனவே உள்ளன. புதிதாக 500 ஆம்புலன்சுகள் உள்ளன .கொரோனா நோயாளிகளுக்காக நடமாடும் ஆம்புலன்சுகளில் அவசர சிகிச்சை பிரிவு

பிறந்தநாள் காணும் தியாகி தலைவி அன்னை சோனியா காந்தி...

Image

வேலூர் மாவட்டம் - இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் துவக்கி வைத்தது -மாவட்ட ஆட்சித்தலைவர்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு 1௦8 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து துவக்கிவைத்தார்கள்.

வேலூர் மாவட்டம் -கணியம்பாடி வட்டாட்சியர் மறைவையொட்டி திருவுருவ படத்திற்கு மலர்அஞ்சலி.

Image
வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டாட்சியர் திரு.முரளி அவர்கள் மறைவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கபட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

வேலூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்.....

Image
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி வேலூர் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வந்த பிரவேஷ்குமார் IPS தருமபுரி எஸ்.பி யாக   பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அவருக்கு மாற்றாக திருப்பூர் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றி வந்த செல்வகுமார் வேலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் அவருக்கு ஏடிஎஸ்பி மதிவாணன் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிறவி உதவி ஆய்வாளர் நாகேந்திரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்...  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

ஒரே நேரத்தில் இரண்டு  உலக சாதனை நிகழ்வு...

Image
தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் 12 வது மற்றும் 13வது  உலக சாதனை முயற்சி!   உலக  தோண்டு  தினம் மற்றும் தேசிய ஆசிரியர்கள்  தினமான இன்று நம் அன்றாட வாழ்வில் தேவையான உணவு, உடை, இடம் சார்ந்த பொருள்களின் மூலம் "வேர்ல்டு சாரிட்டி டே" என்ற வாசகத்தில் நம் நாட்டின் வறுமையை ஒழிக்க வலியுறுத்தியும் மற்றும் Dr. ராதா கிருஷ்ணன் அவர்களின் உருவம் பொறித்த 150 A4 படங்கள் மூலம் "ஹேப்பி டீச்சர்ஸ் டே" என்ற வாசகத்துடன் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளி, வேலூரில்  ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தோம். சுமார் 2 மணி நேரம் இருபது நிமிடத்தில் 7  தன்னார்வலர்கள் மூலம் இந்த சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.  இந்த நிகழ்வு ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் திரு டிராகன் ஜெட்லி காணொளி காட்சி மூலம் உறுதி செய்து மாபெரும் இரட்டை உலக சாதனையாக அறிவித்தார். அதற்கான சான்று மற்றும் கெடியம் இரண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் கரங்களால், தி பிரிட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள் பெற்று கொண்டார். தன்னார்வலர்கள்  அனைவருக்கும் நிகழ்வு இறுதியில் மெடல் வழங்கப்பட்டது.  இந்த...

காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் படம் திறப்பு...

Image
  இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டகிளையின் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் மறைவினை அடுத்து அவரது திருஉருவ படத்தினை காட்பாடி ரெட்கிராஸ் அலுவலகத்தின் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு துணைத்தலைவர் மத்திய அரசு வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் தலைமை தாங்கினார்.  செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவருமான டி.எம்.விஜயராகவலு அவர்கள் மறைந்த அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் திருஉருவ படத்தினை திறந்து வைத்து பேசினார். துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அவரின் மகன் மற்றும் கல்வி உலகம் நிதிஉதவி உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, காட்பாடி ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எ.ஶ்ரீதரன், எம்.பிரபு, டாக்டர்.வீ.தீனபந்து, எம்.ரமேஷ்குமார் ஜெயின், ஜி.செல்வம், வாழ்நாள் உறுப்பினர்கள் வி.காந்திலால்படேல், எ.ஆனந்தகுமார்  தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகபிரியன் ...

அஇஅதிமுக முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என் .சண்முகம்   மரணம் அடைந்தார்.

Image
 காவேரிப்பாக்கம் செப்டம்பர்5 ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி  ஒத்தவாடை தெரு வைச் சேர்ந்த எம்ஜிஆர் மாமன்றம் மாவட்டச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் சோளிங்கர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என் சண்முகம் அவர்கள்  செப்.4.வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார்  செய்தி அறிந்த அதிமுகவினர் முக்கியப் பிரமுகர்கள் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. செல்வகுமார்  அவர்கள்...

Image
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. செல்வகுமார்  அவர்கள் நேற்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆற்காடு நகர டிஜிட்­டல் பிளக்ஸ் பேனர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் காமாட்சி நடவடிக்கை...

Image
ஆற்காடு நகரத்தில் இயங்கிவரும் ஜெஜி ஆர் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், கோவிந்த் ஆர்ட்ஸ், கணபதி ஆர்ட்ஸ், விஜய் ஆர்ட்ஸ், பிளக்ஸ் பேனர் கடைகளை ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி குழு அமைத்து ஆய்வு நடைபெற்றது.  ஆய்வின் போது பணி ஆணைபதிவேடு பராமரிக்காமல் மற்றும் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர் கடையிலிருந்து கைப்பற்றப்பட்டு ஆறு கடைகளுக்கு சீல் வைத்து மூடப்பட்டது. உடன் வருவாய் ஆய்வாளர் அமுத வல்லி. கிராம நிர்வாக அலுவலர் சங்கரநா ராயணன் ஆகியோர் இருந்தனர்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...