காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவியர் சேர்க்கை துவங்கியது. தலைமையாசிரியர் கோ.சரளா, தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.ஆனந்தன் முன்னிலையில் உதவித்தலைமையாசிரியை டி.என்.ஷோபா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வருகை தந்து மாணவிகளுக்கு பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் பெற்று சேர்க்கை துவங்கியது. 11ஆம் வகுப்பிற்கான மாணவியர் சேர்க்கை அரசு அறிவித்துள்ள படி மாணவிகள் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வருமாறும் பள்ளியில் சமூக இடைவெளியினை பின்பற்றி சேர்க்கை நடைபெற்றது. கணிதம், அறிவியல்,வணிகவியல், புவியியல், தொழிற்கல்வி கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் ஆகிய பாடப்பிரிவுகளில் 70 மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. செ.நா.ஜனார்த்தனன், தொழிற்கல்வி ஆசிரியர் & செயலர் ஜுனியர் ரெட்கிராஸ்