Posts

ரத்த சோகை குறைபாடுடைய கர்பிணி தாய்மார்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கிய காட்சி...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரத்த சோகை குறைபாடுடைய கர்பிணி தாய்மார்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டு களைவழங்கினார். உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கோமதி உள்ளார்.

பயிற்சி காவலர் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதி வழங்கிய காட்சி...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம்  தமிழ்நாடு சிறப்பு காவல்படை 15-வது அணி பயிற்சி காவலர் திரு.கு.மதன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியாக ரூ.2௦ ஆயிரத்து 5௦௦ காசோலையினை வழங்கினார். உடன் காவல் பயிற்சி அலுவலர்கள் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் :கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்திட, குடிமராமத்து பணிகளை விரைந்து முடித்திட ஆய்வுக்கூட்டம்.

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கொரோனா பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட சர்க்கரைநோய், இரத்த அழுத்தம், இருதய கோளாறு, சிறுநீரகம்,கல்லீரல் பாதிப்பு உள்ளவர் களையும் மற்றும் அதிக உடல் பருமன் உள்ளவர்களையும் வீடுகளுக்கு நேரடியாக சென்று போர்கால அடிப்படையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு நிதியுதவி...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கொரோனா பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட சர்க்கரைநோய், இரத்த அழுத்தம், இருதய கோளாறு, சிறுநீரகம்,கல்லீரல் பாதிப்பு உள்ளவர் களையும் மற்றும் அதிக உடல் பருமன் உள்ளவர்களையும் வீடுகளுக்கு நேரடியாக சென்று போர்கால அடிப்படையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார். 

நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
சிவசக்தி லீலை தந்தை தட்சன் யாகத்திற்குச்  செல்ல பதி நுகல் கேட்க தவறினாள் சக்தி! தாய் வீடளித்த அலட்சியம் தக்கடையாக ...தவறுணர்ந்தாள்  சிவனின் இல்லக் கிழத்தி! தன் பேச்சு ஓர்ப்ப மறந்த மனைவி மன்னிப்பு கேட்டும் நுகைதல் காண மறந்தனன் கைலாசநாதன்! நெட்ட கரும்புல்லென மலைத்தே கணநேரம் பரமேஸ்வரி நின்றிட வாழ்வங்கே கேள்விக்குறியோடு சுளகம் நெல்லிக்கனியுமானது! குழலியணிந்தவன் தங்கையவள் சூலமேந்திய கணவனால்   தமியான வேதனை கொண்டாள்! நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன் நல்வாழ்வுக்கு சூழ்வு காண, பிழம்பின் அழகு சேர, எடுத்த கால் எடுப்பினில் ஜதி கூட, பிரளயம் அதிர ஆடுகிறாள்  யுகத்திற்கே தாயான ஜகதாம்பிகை! சிவதாண்டவம் அரங்கேற தட்சனின் செருக்கங்கே முக்கண்ணன் இரையானது! நமசிவாய! சிவாயநம! என ஓதும் கலைச்சொற்களுடன்... முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை....632513 9940739728.

வாணியம்பாடி அருகே பாலாற்றில் மழை நீர் வெள்ளம். பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு...

Image
பொதுமக்கள் மகிழ்ச்சி....  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி ஆகிய பகுதியில் உள்ள பாலாற்றில் மழை நீர் வெள்ளம் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது. பாலாற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை காரணமாக ஆங்காங்கே சுமார் 50 அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள நீர் ஒவ்வொரு பள்ளம் நிரம்பி வருவதால் வெள்ளத்தின் வேகம் சற்று குறைவாக காணப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு சரிவர மழை பெய்யாததால் நிலத்தடி ஆயிரம் அடியில் இருந்து சுமார் 1500 அடிக்கு சென்றுள்ளது. குடிநீருக்காக மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் பாலாற்றில் வரும் வெள்ளத்தால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் வெள்ள நீரைகற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....

ரூ.24கோடியே 5லட்சம் கடன் வழங்கும் பணிகளை துவக்கிய மாவட்ட ஆட்சியர்...

Image
காட்பாடி காந்திநகரில்  மாவட்ட  முன்னோடி வங்கியான  இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள்  குத்து விளக்கேற்றி  திறந்து வைத்தார்!  ரூ.24கோடியே 5லட்சம் கடன் வழங்கும் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக 15 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்! இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணா ராஜ், முன்னோடி வங்கி மேலாளர்  ஜான் தியோடசியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்!   இந்த வளாகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகமும், சிறுகடன் மற்றும் தொழில் முனைவோர் கடன் வசதி மையம் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறப்புக் கிளை ஆகியன ஒருங்கே அமைந்துள்ளது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அவர்களால் சாலையோர வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்கான தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டது. இதில் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ. 16 கோடியே 2 லட்சமும், சாலை வியபாரிகளுக்கு மொத்தம் ரூ.16 லட்சமும், பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு  கடனாக ரூ. 7 கோடியே 89 லட்சம் என மொத்தம்  ரூ.24 கோடியே 5 லட்சம் கடன் வழ...

சமூக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் என தீயணைப்பு வீரர்களின் பயிற்சி முகாமில் டி.ஐ.ஜி. சைலேந்திர பாபு பேச்சு.

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் தேர்வாகும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில்  வாலாஜா அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது இம்முகாமில் வேலூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வான 58 பயனாளிகளுக்கு பயிற்சியை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது அடுத்த மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறும் இப்பயிற்சியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார் பயிற்சி பெரும் தீயணைப்பு வீரர்களிடம் களப்பணியில் செய்ய வேண்டிய பணிகள் சமூக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுதல் கடமையை சரியாக செய்தால் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தினார் தொடர்ந்து பயிற்சி பெறும் புதிய பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார் வடக்கு மண்டல துணை இயக்குனர் சத்ய நாராயணன் மற்றும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை... தலைமைச் செயலாளருடன்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களுடன் காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர்  சண்முகசுந்தரம். மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார். ஆகியோர் பங்கேற்றனர்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

ராணிப்பேட்டை நகரில் உள்ள ஆட்டோ நகரில்  அனைத்து இந்திய வாகன ஓட்டுநர் பேரவை அலுவலகம்  திறக்கப்பட்டது...

Image
ராணிப்பேட்டை நகரில் உள்ள ஆட்டோ நகரில்  அனைத்து இந்திய வாகன ஓட்டுநர் பேரவை அலுவலகம்  திறக்கப்பட்டது இதில் நிறுவனத் தலைவர் குணசேகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் சரவணன் மாவட்டச் செயலாளர்  பூபாலன் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்...

Image
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவியர் சேர்க்கை துவங்கியது. தலைமையாசிரியர் கோ.சரளா, தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.ஆனந்தன் முன்னிலையில் உதவித்தலைமையாசிரியை டி.என்.ஷோபா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வருகை தந்து மாணவிகளுக்கு பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் பெற்று சேர்க்கை துவங்கியது. 11ஆம் வகுப்பிற்கான மாணவியர் சேர்க்கை அரசு அறிவித்துள்ள படி மாணவிகள் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வருமாறும் பள்ளியில் சமூக இடைவெளியினை பின்பற்றி சேர்க்கை நடைபெற்றது.  கணிதம், அறிவியல்,வணிகவியல், புவியியல், தொழிற்கல்வி கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் ஆகிய பாடப்பிரிவுகளில் 70 மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. செ.நா.ஜனார்த்தனன், தொழிற்கல்வி ஆசிரியர் & செயலர் ஜுனியர் ரெட்கிராஸ்

நான் மட்டுமே நூலகர் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்து விடுவேன் - கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
அள்ளட்டுமா?மொள்ளட்டுமா? 1970களில் அன்றாடம் அருகில் இருக்கும் அணைக்கட்டு என்னும் பேரூருக்கு யாம் போய் வருவது வழக்கம்! வயதில் மூத்தவரான வாத்தியார் பரமசிவமும் ,என் சக வயது நண்பர் ராமலிங்கமும் என்னுடன் வருவது வழக்கம்!! அணைக்கட்டில் காந்தி டீக்கடையில் அருமையான கீரை போண்டாவும் ,சூடான டீயும் அருந்திவிட்டு, பக்கம் இருக்கும் நூல்நிலையம் போவது எம் அன்றாட பழக்கம்!! மற்ற இருவரும் நூல்நிலையம் நுழைந்தவுடன் , அன்றாட செய்தித்தாள்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி, அந்த பகுதியில் அமர்ந்து விடுவார்கள்!! நான் மட்டுமே நூலகர் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்து விடுவேன்,! அலமாரியில் இருக்கும் புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்து வாசிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம்!! அங்கே அப்போது நூலகர் பழனி! நல்ல மனிதர்! புதியதாய் வந்திருந்த ஒரு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை என்னிடத்தில் கொடுத்தார் வாசிக்க! ஓரிடத்தில் ஒரு பாட்டை வாசித்து அப்படியே மெய்மறந்து நின்று விட்டேன்! அள்ளட்டுமா ?மொள்ளட்டுமா? அடிமடியில் காட்டட்டுமா ?குச்சிக் கட்டி,காக்கட்டுமா? குணமயி லே உன்  தடத்தை? என்று என்று அந்த நாட்டுப்புறப் பாடல் தொடர்கிறது!! ச...

இவர்களிடமெல்லாம்.... நாட்கள் மலர்வது சாத்தியம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பிற்கும் உண்டோ  அடைக்குந்தாழ்? அன்பு.... முரண்பாடுகளின் கதவுகளை                    யதார்த்தமாக திறக்கும்..... புத்துணர்வூட்ட உடலுள்                                 குருதியாக ஓடும்..... அன்பெனும் பிடியுள் அகப்படும்                மலையென வள்ளாலாரிடம்! அன்புடையோர் என்றும் உரியர்          பிறர்க்கெனும் வள்ளுவனிடம்! அடியார்க்கு நல்லமுது அளிக்கும்                                 திலகவதியிடம்! உணவில்லையேல் ஜகமழிக்கும்                                       பாரதியிடம்! கண் பெயர்த்து அப்பிய                                    திண்ணனி...

ஸ்ரீபுரம் பொற்கோவிலின்-13ஆம் ஆண்டு விழா...

Image
ஸ்ரீபுரம் சிருஷ்டித்த தெய்வீக ஞான குரு  அருள்திரு  ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீ்புரம் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோவிலின் 13 ஆம் ஆண்டு விழா. இன்று 24 .8. 2020 காலை 8 மணி முதல் 11 மணி வரை யாகம் நடைபெறுகிறது .அதைத் தொடர்ந்து அம்மா அவர்களின் தெய்வீக திருக்கரத்தால் அன்னை ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும் நம் இந்திய திரு நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் பொற்கோவிலில் ஆன்மீகம், கல்வி ,மருத்துவம், என பல பரிமாணங்களை கொண்டதால் நம் வேலூர் மண்ணிற்கு மிகவும் பெருமை சேர்க்கிறது .அத்துடன் அருள்திரு அம்மா அவர்கள் வேலூர் மக்களுக்கு பொது நலன் கருதி பல நலத்திட்டங்களை செய்வதால் அவர்களுக்கு வேலூர் பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் வேலூர் நண்பன் நாளிதழ் மற்றும் வெப்சைட்டிலும்  அம்மாவின் நலத்திட்டங்கள்  அனைத்தையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. அன்புடன்,  கோ சேகர்  ஆசிரியர் , வேலப்பாடி , வேலூர்.

சுதந்திரம்... இச்சை கொண்ட நிமிஷமே  நிச்சயம் சுதந்திரம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை நினைவு தினம் தேசிய கவிஞர்/காந்திய கவிஞர்/ அரசவை கவிஞர்/காங்கிரஸ் புலவர்/ சமூக சீர்திருத்தவாதி/எழுத்தாளர்/ பத்திரிக்கை ஆசிரியர்/விடுதலை வீரர்...எனும் பெருமை வாய்ந்த நாமக்கல். வெ.ராமலிங்கம்  பிள்ளையின் நினைவு தினம்! . கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது...தேசபக்தி பாடலை பாடி/தேசியம்/காந்தியம் போற்றி/காந்தியக் கவிஞரானவர்! பாலகங்காதர திலகரின்  தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்! காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டு/ஐக்கியமானவர்! அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலை பெற முடியுமென்ற முடிவுக்கு வந்தவர்! வெங்கட்ராமன் - அம்மணியம்மாள் தம்பதிக்கு 8 வது மகனாக/ 7 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் சென்று வேண்ட ராமலிங்கம் என அழைத்து/ நாமக்கல்லில் 19.10.1888 ல் பிறந்தவர்! தந்தை...மோகனூர் காவல்துறை பணி தாயார்....பக்தி மிக்கவர்! பள்ளிபடிப்பு...நாமக்கல்/ கோயம்பத்தூரில்! 1909 ல் திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரியில் மேல்படிப்பு! நாமக்கல் தாசில்தார்  அலுவலகத்தில்  எழுத்தாளர் பணி! பின்னர் தொடக்கப்பள்ளி  ஆசிரியப்பணி! நாவன்மை மிக்கவர்! திருச்சி ...