Posts

வேலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குடியாத்தம் இடை தேர்தலுக்காக முதல்நிலை சரிப்பர்க்கும் பணி.

Image
வேலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குடியாத்தம் இடை தேர்தலுக்காக முதல் நிலை சரிப்பர்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், துணை ஆட்சியர் திருமதி.பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் திரு,ஸ்ரீராம் உள்ளனர்.   

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம்.

Image
அம்ருத் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.

வேலூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதந்திர ஆய்வுக்கூட்டம் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.

தனது வாழ்க்கையில் முதன் முதலில் கேக் செய்த விராட் கோலி...

Image
முதன் முதலில் கேக் செய்த விராட் கோலி

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Image
மதுரையில் நடக்கவுள்ள தனுஷ் - அக்‌ஷய்குமாரின் பாலிவுட் பட ஷூட்டிங் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது. பின்னர் தில்லி, மும்பையில் அக்‌ஷய்குமாரை வைத்து ஷூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் ரிலீசாக வேண்டிய இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ...

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு...

Image
சென்னை - 1,138 செங்கல்பட்டு -448 திருவள்ளூர் -474 காஞ்சிபுரம் -362 தூத்துக்குடி - 349 விருதுநகர் - 338 கோவை - 313 தேனி - 280 ராணிப்பேட்டை - 273 தி.மலை - 267 மதுரை - 249 குமரி -239 க.குறிச்சி-238 நெல்லை-191 சேலம்-190 திருச்சி - 188 வேலூர் - 184 விழுப்புரம் - 139 திண்டுக்கல்- 133 தஞ்சை-115 தென்காசி-112 கடலூர்-109 புதுக்கோட்டை-98 திருவாரூர்-67 கிருஷ்ணகிரி-60 ராமநாதபுரம்-54 திருப்பத்தூர்-53 சிவகங்கை-48 அரியலூர்-48 திருப்பூர்-39 நீலகிரி -39 நாமக்கல் -38 தர்மபுரி - 32 ஈரோடு -27 நாகை-22 பெரம்பலூர் - 21 கரூர்-7  

தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் ...

Image
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது!

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு ...

Image
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும் நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும் செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்

தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ...

Image
தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது .தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,20,716-ஆக உயர்வு .தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,249-ஆக உயர்வு .தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 3,571. கொரோனா பாதித்த 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வலிமை இந்தியாவை கொடுப்பது  அவர் கனவுங்க-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
A.P.J.அப்துல் கலாம் நினைவு தினம் (மெட்டு....கொடுத்ததெல்லாம் கொடுத்தான்) ஒற்றுமையை வளர்த்தார்...மக்கள் உயர்வு தன்னை மதித்தார். திறமைகள் வளர்த்திடவே...நல்ல அறிவியல் தான் படைத்தார்.                    (1) இளைஞருக்கு பிடித்தவராம் இந்தியாவை ஆண்டவராம் ஆக்கம் தரும் அறிவியலை உயிர் மூச்சாய் படித்தவராம்                      உலகெங்கும் வாழும்                       தமிழர் வளம் காண                       அறிவு விவசாயம்                       செய்தவராம்  (ஒற்று)                   (2) அமைதி ஒன்றே ஆதாரம் அன்பு அதன் மூலதனம் மாணவர்கள் விழித்துக் கொள்ள வலிமை சொல்லின் ஆதாரம்                      அறிவு வழிகாட்டி         ...

CMC மருத்துவமனையில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டு.

Image
வேலூர் CMC மருத்துவமனையில் 'நாண் இன்வேசிவ் ரெஸ்பிரேட்டரி சப்போர்ட்' என்ற பிரத்தியேக முறையில் கோவிட் 19ஆல் கடுமையாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு. கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அர்ப்பணிக்கப்பட்ட மையங்களை ஏற்படுத்தி நம் தேசத்தின் இந்த போராட்டத்திற்கு வேலூர் CMC மருத்துவமனை பெருவாரியாக ஆதரவளித்து வருகிறது. கோவிட் 19 ஆல் அடிப்படையாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிந்த ஒன்றாகும். நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தால் வெண்டிலேட்டர் மூலம் பிராணவாயு (ஆக்சிஜென்) வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதை செய்யும் போது நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்து, தொண்டை வழியாக ஒரு குழாய் செலுத்தப்படுகிறது. உலகளாவிய ஆராய்ச்சி முடிவுகளின் பிரகாரமாக இத்தகைய சிகிச்சையை பெரும் பெரும்பாலான நோயாளிகள் சரிவர தேறி வருவதில்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபமாக அறியப்பட்ட தகவலின்படி, இத்தகைய நோயாளிகளுக்கு  'நாண் இன்வெசிவ் வென்டிலேஷன்' NIV என்ற முறையின்படியே சிகிச்சை அளிக்கபடலாம் என்று தெரியவந்துள்ளது. தொண்டையில் குழாய் மூலம் பிராணவாயு செல...

இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார்...யூகிக்க முடிகிறதா யார் அந்த கவிஞர் என்று.

Image
கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது! அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது! மரம் வளர்த்தேன் இரண்டும் வந்து விட்டது ! இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார் ஒரு மிகப்பெரிய கவிஞர்! உங்களால் யூகிக்க முடிகிறதா யார் அந்த கவிஞர் என்று? மக்கள் குடியரசுத் தலைவர் என மக்களால் போற்றப்படும் நம்மைய்யா டாக்டர் ஏபிஜே ஏபிஜே அப்துல் கலாம்தான் அந்தக் கவிஞர்! பாரத நாடு பழம்பெரும் நாடு என பாடி வைத்தான் பாரதி ! பாரதம் 2020இல் வல்லரசு நாடாக வேண்டும் என கனவு கண்டு, 1998 ஆம் ஆண்டே எழுதிவைத்த எம்மான் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு ஈடாக இன்னொரு தலைவரை நம்மால் உதாரணம் சொல்லவே முடியாது! 15-10-1931ல் தெற்கின் கடை கோடியாம் ராமேஸ்வரத்தில் பிறந்து, 27-7-2015 ல் வடக்கின் கடைக்கோடி யாம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ,ஓர் நொடி நேரத்திற்குள்  நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்! அவரை ஏவுகணை நாயகன் என்பதா? எழுச்சிமிகு எழுத்தாளர் என்பதா? விஞ்ஞானி என்பதா? மெய்ஞானி என்பதா ? அறிஞர் என்பதா? ஆசான் என்பதா? சான்றோன் என்பதா ?சரித்திர நாயகன் என்பதா? மக்கள் தலைவர் என்பதா? மனித நேய இமயம் என்பதா? எளிமையின் சின்னம் என்பதா?நேர்மையின் வடி...

வீரனை நினைத்துப் பாரடா...நீ - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
கார்கில் போர் நினைவு தினம் (சின்னப்பயலே....பாடல் மெட்டு) கார்கில் போரை/கார்கில் போரை நினைத்துப் பாரடா! கார்கில் போரில் உயிர் தந்த வீரனை நினைத்துப் பாரடா...நீ நினைத்துப் பாரடா!      (கார்கில்)                 (1) மலையில்/மழையில்/குளிரில்/நின்று போரிட்ட கணங்கள்! தாய்/தாரத்தை பிரிந்தே சென்று களம் கண்ட தினங்கள்! நாளும் நொடியும் பாடம் தந்த இராணுவத்தின் பயிற்சி!...அவன் இரத்தத்தோடு தான் கலந்தே நின்றது வெற்றி பெறும் உணர்ச்சி!       (கார்கில்)                      (2) இந்தியனாக வாழ்ந்திட வேணும் நினைப்புக் கொண்டானே...அதிலே உறுதி கண்டானே! எதிரி பாகிஸ்தானி மோத பகைமை முறித்தானே!...அவனை ஓட வைத்தானே! தாய்நாடு தகைமை காக்க டைகர் மலையைப் பிடித்தானே!..தேசியக் கொடியும் நட்டானே! ஒற்றுமை பலமென்று  உலகத்துக்கே தான் சொல்லி சென்றானே!...நமக்கும் உரைக்கச் சொன்னானே!    (கார்கில்) முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுநிலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை...632513 9940739728....

கார்கில் போரில் உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் தினம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
கார்கில் போர் முடிந்த தினம் கார்கில் விஜய் திவாஸ்.. மலையில்/மழையில் வெயிலில்/குளிரில் புதரில்/குழியில் தங்கியே /போராடி தன்னுயிர் தந்து நாட்டின் மானம் காத்த கார்கில் போரில் உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் தினம்! வருடத்தில் ஆறு மாதம் மூடியிருக்கும்பாதை! செங்குத்து மலைசரிவு மேலேற...போர்கருவி/மருந்து பொருள்/ மலையேறும் கருவி/உணவு பொருளென 20 கிலோ சுமத்தல்/எதிரி தாக்க வர/ ஓடி ஒளிய இடமில்லாத நிலை! உறைகடி பனியும் மரணம் கிட்டும் நிலை! இத்தனையையும் மீறி தாய்நாட்டுக்கு உழைத்த தங்க மகன்களுக்கான நினைவு தினம்! 1999- மே முதல் ஜூலை வரை இந்தியா - பாகிஸ்தானுக்கிடையில்  நடந்த தொடர் 84 நாட்கள் நடந்த போர்! ஜம்மு/காஷ்மீர் மாநிலம் கார்கில் நகரம் டைகர் மலையில் நடந்த போர்! கார்கிலை மீட்க  இந்திய அரசு மேற்கொண்ட விஜய் நடவடிக்கை கண்ட போர்! பாகிஸ்தான் படை பின்வாங்க இந்தியா கார்கிலை கைப்பற்றிய போர்! பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீர் போராளிகளும் கட்டுப்பாட்டுக்  கோட்டை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு காரணமாயின! காஷ்மீர் போராளிகள் மீது பழி போட கிடைத்த ஆவணங்கள் பாகிஸ்தான் தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமை...

அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு...

Image
அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்த மருந்துகள் நல்ல பயனளிப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரி மற்றும் வியாசர்பாடியில் உள்ள அம்தேகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ளார்.