இரண்டாவது நாளாக இன்று தமிழக அரசின் ஆரோக்கியம் சிறப்பு திட்டம் விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமில் கபசுரகுடிநீர் மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி வழங்கினார். ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது அதன் அடிப்படையில் வேலுர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்வாறு, கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் ஜுனியர் ரெட்கிராஸ், காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் இரண்டாவது நாளாக 27.06.2020 அன்று வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி வழங்கினார். பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முகாமில் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் ஆலோசனையின் படி மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி முகாம் பணியில் ...