டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு ...அமெரிக்கா விலகல்.
வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார மையம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக அந்த அமைப்பு இயங்கியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால், உலக சுகாதார மையத்துடன் உள்ள அனைத்து உறவையும் முறித்துக் கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் வாழும் சீன ஆராய்ச்சியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விலகியதால் உலக சுகாதார மையத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.