Posts

தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள்.

Image
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வரும் சூழலில் தமிழக முதல்வர் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும்பட்சத்தில் சமூக ஆர்வலர்கள் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு, மளிகை பொருட்கள் உதவி செய்து வரும் பட்சத்தில் இன்று  தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்  சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்: நடமாடும் ஏடிஎம் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.

Image
திருப்பத்தூர் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார் கொரோனா வைரஸ் காரணமாக திருப்பத்தூர் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிவித்தார் இதனையொட்டி வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது இதனையொட்டி  பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி வேலூர் மண்டல மேலாளர் சேதுமுருகதுரை தலைமை வகித்தார் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ரிப்பன் வெட்டியும் கொடியசைத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்தும் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் முதன்மை மேலாளர் செல்வராஜ் மண்டல அலுவலகம் முதன்மை மேலாளர் செல்வக்குமார் வங்கி சேவை மேலாளர் பாலமுரளி துணை மேலாளர் உட்பட அனைத்து வங்கி கிளை மேலாளர் கலந்துகொண்டனர் இந்த ஏடிஎம் எந்திரம் மூலம் பணத்தை எடுக்கவும் பணத்தை போடவும் வங்கி கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதையும் பணத...

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் மத்திய அரசு பாராட்டு...

Image
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. எனவே மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று 29-4-20 வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனை அருகில் உணவு வழங்கப்பட்டது.

Image
வேலூரில்29 -4 -20அன்று  மதியம்  விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் அடுக்கம்பாறை மருத்துவமனையில் உணவு வழங்கப்பட்டது மாவட்டகமிட்டியில் உள்ள தூயமனிஜி, திருமால் ஜி, Online பிரபாகரன் ஜி தாமோதரன்ஜி பிரபாகர் அட்வகேட் ஜெயவேல்,கலையரசன் கருனாகரன, ராஜசேகர் மற்றும் இயக்க சகோதரர் கள் கலந்துகொண்டணர்.

வைத்தியம் பார்க்க நீ வர வேண்டும் வீரராகவப் பெருமாளே... 37-ஆம் நாள் யுத்தம் - கவிஞர் ச.லக்குமிபதி.

Image
37-ஆம் நாள் யுத்தம்.  வைத்தியம் பார்க்க நீ வர வேண்டும் வீரராகவப் பெருமாளே!!     நரகனை ஒழித்த துவாராக கண்ணனை போல் கோவிட்டை அழிப்பதில் மும்முரமாக யுத்தகளத்தில் நம் நாட்டின் பிரதமர் முன்னேறி நிற்கிறார்! அவர் கேதார்நாத் சர்வேஸ்வரனிடம் சக்தி பெற்ற மகா பலசாலி அல்லவா!அன்னை ஹீராபென் அவணிக்கு அளித்த ஹீரோ அவர் அல்லவா! அவர் சொல்லும் அரிய யோசனைகளை எல்லாம் அப்படியே கேட்டு தமிழ் நாட்டு நலம் கருதி அல்லும் பகலும் அயராது உழைக்கிறார் தமிழக முதல்வர்! நெருக்கடி காலத்தில் நெஞ்சம் தளர்வுறாது பணியாற்றும்  கொங்கு நாட்டு தங்கம் அவர்! தேனியை ப்போல் சுறு சுறுப்பாய் இருக்கின்றவர்! முதல்வருடன் இணைந்தபடி முத்தான பணிசெய்கின்றவர்!அம்மா வின் நல்அன்பை பெற்ற ஆற்றல் மிகு துணை முதல்வர்.  உற்ற துணையாய் சலிப்பு ஏதுமின்றி களத்தில் நிற்கும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்! அவருக்கு பக்க பலமாய் நாட்டு நலம் காக்கும் செயலாளர் பீலா ராஜேஷ். வாழும் தெய்வங்களான மருத்துவர்கள் வற்றாத ஜீவநதிகளாய் களம் காணும் மருத்துவ பணியாளர்கள்! மக்களை கவசமாய் இருந்து காத்து வரும் காவல்துறை தெய்வங்கள்! அஞ்சாத சிங்கங்களாய் ஆட்சித்த...

 காகம் சிவகணங்களில் ஒன்றான அற்புதமான கதை.

Image
இறைவன் மீது பக்தி  செலுத்துவதில், மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும், அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும். சிவ வழிபாட்டை பொறுத்தவரை, அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ வழிபாடு ஒன்றுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட தன்மை உண்டு. வானரம் ஒன்று சிவலிங்கத்தின் மீது இலைகளை போட்டு விளையாடி அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததும், சிவாலயம் ஒன்றில் அணையவிருந்த விளக்கின் திரியை தன்னையுமறியாமல் தூண்டிவிட்ட காரணத்தால் மூஷிகமானது அடுத்த பிறவியில் நாடாளும் மகாபலிச் சக்கரவரதியாக பிறந்ததும் இதற்கு உதாரணம். அப்படிப்பட்ட பட்டியலில் காகம் ஒன்றும் உள்ளது. அதுவும் நம் அவிநாசி தலத்துடன் தொடர்புடைய ஒன்று. சிவானுக்கிரகத்தை பெற இந்த காகம் என்ன செய்தது? கொங்கு நாட்டில் காவிரியும், பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் ‘வதரிகாசிரம்’ என்ற ஒரு வனம் உள்ளது. அது தவசிகளுக்...

ஜோதிகாவின் பேச்சுக்கு சூர்யா விளக்கம்.

Image
மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌" என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌" என்று ஜோதிகாவின் பேச்சுக்கு சூர்யா விளக்கம் தந்து ஆதரவு அளித்துள்ளார்.. அந்த கருத்தில் இருந்து தாங்கள் பின்வாங்க போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டையும் முன்வைத்துள்ளது பலதரப்பினரால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது! பெரிதாக எந்த விவகாரத்திலும் சர்ச்சையிலும் சிக்காத ஜோதிகாவை... மதரீதியான பிரச்சனையில் சிக்கவைக்க முயற்சிகள் நடந்தாலும் அதனை துணிச்சலுடன் கடந்து வெளியே வந்துள்ளார் என்பதே உண்மை. இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்.. இதில் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தது நடிகர் எஸ்விசேகர் தான்... ஜோதிகா 100% மெச்சூரிட்டி இல்லாத பேச்சு... கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று... இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்... உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்" என்று பதிவிட்டார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்...

முக்கியசெய்தி. தமிழகம் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கானொலி மூலமாக முதல்வர் ஆலோசனை...

Image
தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கானொலி காட்சி மூலமாக ஆலோசனை.... தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.               மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை.இதனை உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.           காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்.     முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3ஆக பிரித்து பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கு...

வேலூர் சித்தமருத்துவர் பாஸ்கரன் மாவட்ட ஆட்சியரிடம் மூலிகை முகக்கவசங்கள் வழங்கினார்..

Image
  கொரோனா உள்ளிட்ட வற்றில் இருந்து பாதுகாக்க மூலிகை முகக்கவசங்கள் தாயாரித்து அசத்திய சித்தமருத்துவர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சண்முகசுந்தரம் அவர்களிடம் 1700முகக்கவசங்கள் வழங்கிய போது எடுத்த படம் .                    உடன் டிஆர் ஒ. பார்த்தீபன் அவர்கள் உள்ளனர்.            இந்த முகக்கவசம் வேலூர் சத்துவாச்சாரிஸ்ரீபுற்று மகரிஷி சித்தமருத்துவமனை சார்பில்  பாராம்பரிய முறைப்படி மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது .                      செய்தி :வேலூர் நண்பன் இதழ் 

முத்தரையர் சமுதாய அறக்கட்டளைக்கு சேர்த்து வைத்த பணத்தை நிதி வழங்கிய குழந்தைகள்...

Image
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் சரவணன் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வரும் பட்சத்தில் இன்று எனது வீட்டு குழந்தைகள் P. விக்கா ஶ்ரீ மற்றும் P.தேவதார்ஷன் தங்களது சேமித்து வைத்திருந்த ரூபாய் 5000/ பணத்தை அறக்கட்டளை நிவாரண நிதிக்கு அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜெ.சரவணன் அவர்களிடம் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்றும் அன்புடன் உங்கள் ஜெ.சரவணன் அறக்கட்டளை நிறுவன தலைவர். செய்தி. வேலூர் நண்பன் இதழ் 

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனிமைபடுத்தப்பட் பகுதிகளில் ஆய்வு .

Image
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தனிமைபடுத்தப்பட்ட சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா, பொதுமக்கள் சமூக இடை வெளியை பின்பற்றுகிறார்களா, மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப., மற்றும் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளின் பொறுப்பு அலுவலர்கள் உள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சி.எஸ். ஐ.பேராயர்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் பேராயர் சர்மா நித்யானந்தம் அவர்கள் தனது ஒருமாத சம்பளம் ரூ.37 ஆயிரத்திற்கான 245-ற்க்கான காசோலையினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களுடன் வழங்கியபோது எடுத்தப்படம்.

பத்தும் செய்யும் பனம்பழம்...

Image
பாரம்பரியம் ‘விதைக்க வேண்டியதுமில்லை... வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனைமரம். ஆனால் நுங்கு, பதநீர், கருப்பட்டி என்று அது தரும் பயன்களோ ஏராளம். இவற்றைப் போலவே பனை மரத்தின் பழமும் எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது.  கிராமப்புற மக்கள் சுவையான உணவு என்ற கோணத்தில் பனம்பழத்தை உண்பது வழக்கம். அதன் சத்துக்களை முழுமையாக அறிந்தால் எல்லோருமே உண்ண விரும்புவார்கள்’’ என்கிற யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா, அதன் மருத்துவப் பலன்களைப் பட்டியலிடுகிறார்.  பனை மரத்தை பொறுத்தளவு பனை சுளை, பனங்கள் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கருப்பட்டி, பதநீர் போன்றவை மேலும், பனங்கிழங்கு போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதேபோல பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பழமே பனம்பழமாகும்.  பனை மரத்தில் சுளைக்காக வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் காய் முற்றி பழமாக பழுத்துவிடும். இது உருவத்தில் தேங்காயை விட பெரிதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.  பழம் கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும். தலையில் அதாவது மேல்பகுதியில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும்.  பனம்பழத்தின் உள...

ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் வழங்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி முக கவசம் வழங்கும் எந்திரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி,இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. ஜெயச்சந்திரன். அலுவலக மேலாளர் திரு.பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் காட்பாடி தூய்மை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்இந்தியன் ரெட்கிராஸ்.

Image
தூய்மை தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள்  இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை சார்பில் துணை ஆட்சியர் சே.கணேஷ் வழங்கினார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலூர் மாநகரம் காட்பாடி வட்டம் 14வது வார்டு தூய்மை தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு முக கவசம் முதலிய நிவாரண பொருட்கள் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை வழங்கியது.  காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.  வேலூர் மாநகர 14வது வார்டு தூய்மை  தொழிலாளர் 30 குடும்பத்தினருக்கும் காட்பாடி செங்குட்டையில் உள்ள தினக்கூலியினர் 20பேருக்கும் வேலூர் துணை ஆட்சியர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் தலைவர் சே.கணேஷ் நிவாரண பொருட்களை வழங்கினார்.   இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை செயலாளர்  செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி  அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  வி.காந்திலால்படேல், எ.ஶ்ரீதரன், ஆனந்தகுமார்,  ஜி.செல்வம், செல்வமணி, தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், தினேஷ்குமார், மோனிகா டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் குடிய...