Posts

நன்மைகளை தரும் துளசி இலையில் மருத்துவம்.....

Image
இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது?  தினமும் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்   புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும். இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் துளசி கசாயத்தை தான் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றர். தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரையாவது காய்ச்சலுக்கும், சளி மற்றும் இருமலுக்கும் துளசி கசாயத்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொன்னால், ஏளனமாக சிரித்து கிண்டலடிப்பார்கள். உண்மையிலேயே அதை பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் அதன் மருத்துவ மகத்துவம் தெரியும். இதனால் தான் துளசி செடியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். துளசியின் மருத்துவ குணம் துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்ட...

இராணிபேட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பில் எஸ் பி அவர்களிடம் முககவசம் வழங்கப்பட்டது

Image
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் துறையினர் அரும்பாடுபட்டு மக்களுக்காக இரவு, பகலாக சேவை செய்து வருகின்றனர்.  முக கவசம் தட்டுப்பாடு உள்ளதால், காவல் துறைக்கு *மக்கள் இயக்கத்தின் முதல்வர் தளபதி உத்தரவின் பெயரில் மாநில பொறுப்பாளர் எங்களின் நிரந்தர வழிகாட்டி புஸ்ஸி N.ஆனந்த் ex.mla அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக* இன்று 200 முக கவசங்கள் மற்றும் 500 குடிநீர் பாட்டில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பூக்கடை மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத், வாலாஜா ஒன்றிய தலைவர் தீனா வழங்கினார் வாலாஜா ஒன்றிய செயலாளர் கமல் பொருளாளர் திலீப் இளைஞரணி பொருளாளர் சஞ்சய் ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் ஒன்றிய கௌரவத் தலைவர் மணி உடனிருந்தனர்  . செய்தி வேலூர் நண்பன் இதழ் 

சித்தமருத்துவர்களுடன் பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சு...

Image
இன்று காலை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மூலம், வீடியோ கான்பிரன்சில் பிரதமரிடம் நேரடியாக விவாதிக்க அழைப்பு வந்தது. நேற்று இரவு பிரதமர் அலுவலக அதிகாரி அவசர அழைப்பாக தகவல் அனுப்ப, காலை 11.30 மணிக்கு மத்திய ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு வரச்சொல்லி பணித்திருந்தார்கள். நாடு முழுவதில் இருந்தும், 12 மூத்த ஆயுஷ் துறை பேராசிரியர்களை நபர் " ஒருவர் 3-4 நிமிடங்கள் தங்கள் துறை மூலம் என்ன செய்யலாம்,"என பிரதமர் அலுவலகம் பேசச் சொல்லியிருந்தனர்.  மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர். கனகவல்லி அவர்கள், மாநில மருந்து உரிமை வழங்கும்  அதிகாரியும் பேராசிரியருமான மரு. பிச்சையா குமாருடன், முக்கிய சித்த மருத்துவ பயிற்சியாளர் எனும் அடிப்படையில் எனக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எங்களது கலந்துரையாடலுக்குப் பின்னர், சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான புது. செயப்பிரகாச நாராயணன் அவர்கள், சித்த மருத்துவர்கள் சார்பாக பிரதமரிடம் நேரடியாக உரையாற்றினார்.  இப்போது உருவாகியுள்ள இக்கட்டான சூழலில் "...

வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது ..

Image
அனைத்து பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பெயரில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி உதவி ஆணையாளர் மதிவாணன் அவர்கள் பணியாளர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கினார் உடன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ரவி உடனிருந்தனர். செய்தி . வேலூர் நண்பன் இதழ்  

வேலூரில் இரண்டாம் மண்டலம் சார்பில் உணவு வழங்கப்பட்டது...

Image
வேலூர் மாநகராட்சியில் தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்ற வெளி மாநில தாருக்கு மாநகராட்சி மூலம் இலவசமாக காலை மாலை இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது இன்று சுமார் 500 கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி இரண்டாம் மண்டலம் சார்பில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் உணவு வழங்கப்பட்டு உள்ளது.செய்தி வேலூர் நண்பன் இதழ்  

வேலூர் தோட்டப்பாளையத்தில் லைசால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது...

Image
வேலூர் மாநகரில் ஆங்காங்கே கொரோனா  வைரஸ் கிருமிகள் தொற்றாமல் இருக்க லைசால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது .மாநகராட்சி மண்டலம் 2சார்பில் ஒவ்வொரு பகுதியாக நிர்வாகிகளை பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதின் படி தோட்டப்பாளையம் பகுதியில் பாண்டியன் மேற்பார்வையில் லைசால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பொது மக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் முதல்வர் அவர்கள் அறிவுறுத்தலின் படி வெளியே வராமல் முடிந்த அளவு இந்த கொடூர கொரோனா வை செயல் இழந்து போகும் படி நாம் வணங்கும் தெய்வங்களை தீபம் ஏற்றி  வழிபட்டால் கண்டிப்பாக நம்மை படைத்த இறைவன் கண்டிப்பாக அருள் தருவார் சுகம் தருவார். செய்தி வேலூர் நண்பன் இதழ். படம். பிர சாந்த்  

ஐந்தாம் நாள்....எங்கள் எதிரியான கொரோனா வை அழித்து விரட்டி விடு முருகா.....

*ஐந்தாம் நாள் யுத்தம்*.     வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை என்று நம்பிக்கை ஊட்டுகின்றார் மலைமீது இருந்து அந்த பழனிச்சாமி! விழித்திரு! விலகி  இரு! வீட்டில் இரு! என்று நோய் தடுக்க நம்பிக்கை ஊட்டுகின்றார் கோட்டையிலிருந்து ஐயா பழனிச்சாமி! கொடும் சூரனை சூரபதுமனை யுத்தத்தில் சம்ஹாரம் செய்தவர் பழனிச்சாமியான சுப்பிரமணியசாமி! ஐந்தாம் நாள் யுத்தத்தில் தான் முருகனை நேருக்கு நேர் நின்று போர்தொடுக்க வருகிறான் சூரன்! அடியவர் ஆசைகளை எதுவென அறிந்து அப்படியே அருளுகின்ற ஆறுமுகசாமியே! சவால் விட்டு சகல நாடுகளையும் சண்டைக்கு அழைத்து சாகடித்து. சந்தோஷப்பட்டு கொண்டு சுற்றி திரிகிறான் கோவிட் 19 !                 தேசங்கள் எல்லாம்! திசைகளெல்லாம்!திணறிக் கொண்டிருக்கின்றன! "யாமிருக்க பயமேன்" என்று கேட்டபடியே வேல் ஏந்தி நின்று இருக்கும் வேலாயுதா! கந்தா என்றால் இந்தா என் பாயே ! இப்போது கேட்கிறோம் யாங்கள்! களத்தில் நாங்கள் நிராயுதபாணிகள் எங்கள் எதிரியை அழித்து விரட்டி விடு! எங்கோ மறைந்தான் எங்கள் பகைவன் என்று எம்மை கூத்தாட வை குமரா!! இப்படிக்கு வாரியார் ...

அவசர பயணம்...சொல்வோருக்கு....தமிழக அரசு அறிவிப்பு...

அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்: 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. *கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை, *திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம். *சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

செய்தி துளிகள் சுருக்கமான பார்க்க...

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 1,00,000ஐ தாண்டியது!                                                     ------------------------ கடந்த 24மணி நேரத்தில் 345 பேர் மரணம்!                 புதிதாக 18000 பேருக்கு கொரோனா பாதிப்பு!    சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது...                                          ------------    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஐ தாண்டியுள்ள நிலையில், இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களுக்கே தொற்று பரவி------------    *டெல்லியிலிருந...

சீரியல் தொடர் பார்க்க முடியுமா...வேதனையில் டிவி தொடர் ரசிகர்கள்.....

Image
நிறுத்தப்படும் டிவி தொடர்கள்? கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன பொதுவாக ஒரு மாதத்திற்குத் தேவையான டிவி தொடர்களை தொடரச்சியாக 10, 15 நாட்களில் எடுத்து முடிப்பார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த முடியாததால் தற்போது அந்த டிவி தொடர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.எனவே மாலை நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சீரியல் பார்க்க முடியாது என டிவி சேனல்கள் பார்க்கும் நல விரும்பிகள் நம் கவலையை கொஞ்சம் மறக்க இது மட்டும் இருந்தது. இதுவும் கட் டா..என வேதனையுடன் கூறி வருகின்றனர். 

உலக மக்கள் நன்மைக்காக ஸ்ரீவனதுர்கா பீடத்தில் பிரார்த்தனை...

Image
ஓம் நமோ வனதுர்கா இன்று (28-3-2020) வேலூர் இறைவன்காடு  ஸ்ரீ வனதுர்கா பீடத்தில்  வேல் அர்ச்சனை மற்றும் ஸ்ரீ நவாட்ஷரி மூலமந்திர ஜபம் சங்கல்பம் மற்றும் பூஜைகள்  எங்களுக்கு whatsApp மற்றும் sms  மூலம் பெயர், நட்சத்திரம் ,கோத்திரம் அனுப்பிய  அத்துனை பக்தர்களுக்காகவும் மற்றும் உலக  ஷேமத்திர்காகவும் மிக சிறப்பாக  ஜபம் மற்றும் பூஜை செய்விக்கபட்டு பிரார்த்தனை செய்யபட்டது

இப்படி தான் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.....விழிப்புணர்வு க்காக...

Image
நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்று மிக்க வாழ்க்கை யை இனிமேலாவது....தொடர்ந்தால் ..கற்றுக் கொடுத்த வர்களை ..மதித்தோமா ..இல்லை..மறந்தோமா ..இனிமையாவது  .....நினைவில்..விழிப்புனர்வு க்காக இந்த படங்கள்.. வேலூர் நண்பன் இதழ்  

இப்படி தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு....

Image
நம் முன்னோர்கள் வாழ்ந் த வரலாற்று மிக்க வாழ்க்கை யை தொடர்ந்தால்....சிந்திப்போம்..இப்படி தான் வாழ்ந்தார்கள்... வேலூர் நண்பன் இதழ் 

நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்று மிக்க....விழிப்புணர்வு படம்..

Image
நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்று மிக்க வாழ்க்கை யை தொடர்ந்தால்...சிந்திப்போம்...விழிப்புணர்வு க்காக இந்த படங்கள்..                வேலூர் நண்பன் இதழ்

நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்று மிக்க விழிப்புணர்வு தொகுப்பு படக்காட்சிகள்..

Image
நம் முன்னோர்கள் வாழ்ந்த   வரலாற்று மிக்க வாழ்க்கை யை இனிமேலாவது தொடர்ந்தால்....சிந்திப்போம்..தொகுப்பு ..படக்காட்சிகள் ..விழிப்புணர்வு ர்வு க்காக .. வேலூர் நண்பன் இதழ்