நன்மைகளை தரும் துளசி இலையில் மருத்துவம்.....
இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது? தினமும் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும். இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் துளசி கசாயத்தை தான் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றர். தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரையாவது காய்ச்சலுக்கும், சளி மற்றும் இருமலுக்கும் துளசி கசாயத்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொன்னால், ஏளனமாக சிரித்து கிண்டலடிப்பார்கள். உண்மையிலேயே அதை பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் அதன் மருத்துவ மகத்துவம் தெரியும். இதனால் தான் துளசி செடியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். துளசியின் மருத்துவ குணம் துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்ட...