டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்செந்தூர்: தமிழக மக்களால் “சின்னய்யா” என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் பத்மஸ்ரீ, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை ஆகிய 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சாதனைகள் காலத்தால் மறக்க இயலாதவை. சாதி, மதம் கடந்து தன்னலமற்ற வகையில் இந்த 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சேவைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர செய்தன. கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் துறைகளில் அவர் செய்த மகத்தான சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கின. மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி பெருமைப்படுத்தியது. காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான ஆன்மீக பெரியவர்களும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்ந்து உள்ளனர். இத்தகைய சிறப்புடைய டாக்டர் பா.சிவந்தி ஆதி...