Posts

வேலூரில் தமிழக முதல்வர் சாதனை விளக்க புகைப்படம் கண்காட்சி...

Image
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தமிழக முதல்வரின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது இதில் அமைச்சர் கே சி வீரமணி நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் உடன் கலெக்டர் சண்முகசுந்தரம் ஜனனி சதீஷ்குமார் உடன் இருந்தனர்

புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் முன்னிட்டு சதுரங்க போட்டி...

Image
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் மூர்த்தி அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தபோது, உடன் வேலூர் மேற்கு பகுதி செயலாளர் நாகு(எ) நாகராஜன்,*  *மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வி எல். ராஜன் செயலாளர் ஜனனி P சதிஷ்குமார்  பொருளாளர் நித்தியானந்தம், மற்றும் பாரதி செஸ் அகாடமி தலைவர் திரு தினகரன்  RVDCA துணை தலைவரும் வேலூர் தாலுகா கழக ஒருங்கிணைப்பாளருமான திரு E சண்முகம் அவர்கள் RVDCA பொருளாளர் திரு பிரகாஷ் அவர்கள் வேலூர் தாலுகா பொருளாளர் திரு கணேஷ் அவர்கள் இணை செயலாளர் திரு G முருகன் அவர்கள் துணை தலைவர் திருமதி வசந்தகுமாரி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். U7 U9 U13 U16 U25 என மொத்தம் 5 பிரிவுகள் நடத்த பட்டது. மொத்தம் 50 கோப்பைகள் வழங்கப்பட்டது.

வேலூரில் சின்மயா மிஷன் கம்பராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது

Image
வேலூரில் இன்று சின்மயா மிஷன் வழங்கிய கம்பராமாயணம் சொற்பொழிவு தமிழில் வேலூரில் உள்ள லஷ்மி கார்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்கள் கம்பராமாயணம் "வாழ்வில் மேன்மை அடைய கவிச்சக்ரவர்த்தி கம்பன் காட்டும் மனித அறநெறி "என்ற தலைப்பில் உரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 26ஆம் தேதி வரை மாலை 6.30க்கு தொடங்கி 8மணி வரை நடைபெறுகிறது இந்நிகழ்ச்சி எந்த விதமான கட்டணம் கிடையாது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்களின் சொற்பொழிவு கேட்டு மகிழ்வோம். 

வேலூர் தோட்டப்பாளையத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் சாமி ஊர்வலம்...

Image
வேலூர் தோட்டப்பாளையத்தில் மயானக் கொள்ளை முன்னிட்டு பக்தர்கள்   வெள்ளத்தில் தேரில் சாமி ஊர்வலம் வரும் காட்சி

அறநூல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை மாணவர்கள்

Image
தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று அறநூல் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்...   தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து  காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளிக்கே நேரடியாக சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் தேவகோட்டை கிளை மேலாளர் மணிவண்ணன்,காரைக்குடி அரசு போக்குவரத்துக்கு கழக வணிக பிரிவு துணை மேலாளர்  நாகராஜன் , நடத்துனர் விஜயகுமார் ஆகியோர் வாகனம் நல்ல முறையில் வந்து சேர உதவிகள் செய்தனர்.இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்போட்டிகளில் தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலமாக தேவகோட்டையில் இருந்து காரைக்குடி சென்று பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் மாணவர்கள் மறந்து போன தமிழ் அறநூல்களான...

குப்பை எடுக்கவரும் ஊழியர்களை மதிக்கும் வகையில் விழிப்புணர்வு...

Image
  வேலூர் மாநகராட்சி மண்டலம்-2ல் குப்பை போடும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து போடும்படி வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  குப்பை எடுக்க வருபவர்களும் மனிதர்கள் தான், அதனால் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் அன்பான கோரிக்கை வைக்கப்பட்டது. கூடவே குப்பைகளை எவ்வாறு பிரிப்பது என அரசு வழிகாட்டியுள்ள துண்டு பிரசுரங்களை வழங்கினோம். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களும் உடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என தினேஷ் சரவணன் தெரிவித்தார் மேலும் அனைத்து வீட்டு உரிமையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தனர்.  

மயானக் கொள்ளை முன்னிட்டு பக்தர்களுக்கு மோர், ரஸ்னா வழங்கிய காட்சி

Image
வேலூர் பாலாற்றங்கரை அருகில் மயானக் கொள்ளையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு மோர் ,ரஸ்னா குளிர்பானம் கொடுத்து வருகின்றன. என்பத படத்தில் காணலாம்.

வேலூர் கோலாகலம் மயானக் கொள்ளை பவனி வரும் காட்சி..

Image
வேலூர் மயானக் கொள்ளை முன்னிட்டு பக்தர்களுக்கு புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கி வருகிறார்கள். டிராக்டரில்  அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு வருகிறது, தேர் திருவிழா போல் அலங்கரித்து வைக்கப்பட்டு அம்மன் வருவதை மக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி யுடன் பாராட்டு கின்றனர். மேலும் பக்தர்கள் பலரும் வித,விதமாக வேடமிட்டு அனைவரது கவனத்தையும்ஈர்த்து ரசிக்கும் வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் நீர் பாணங்கள், அன்னதானம், வழங்கி வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

வேலூரில் இன்று முதல் தற்காலிக பஸ்நிலையம்..

Image
வேலூரில் இன்று முதல் தற்காலிகமாக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது .அதன் படி தி.மலை ,ஆரணி செல்லும் பேருந்து பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும். புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக பஸ்நிலையம் செல்லியம்மன்கோயில்பின்புறம் இதில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர்  ,திருப்பதி, பெங்களூர் செல்ல பயணிகள் செல்லலாம் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ்நிலையம் புதிய பஸ் நிலையம் அமைவதை யொட்டி இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மயானக் கொள்ளை முன்னிட்டு 700போலீசார் வேலூரில் குவிப்பு...

Image
வேலூர் மாநகரில் இன்று மாசி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் மயானக்கொள்ளை வெகு சிறப்பாக நடை பெறும்.இந்த ஆண்டு மயானக்கொள்ளை ஞாயிற்றுக் கிழமை 23ஆம் தேதி நடைபெறுகிறது. விழா குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடு கடைபிடிக்க அறிவுறுத்த பட்டுள்ளது. மயானக்கொள்ளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவில் எந்த விதமான அசம்பாவிதம் நடந்து கொள்ளாத படி இருக்க வேலூர் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு பிரவேஷ்குமார் தலைமையிலான 9துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 700போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

மாசிஅமாவாசை மயான கொள்ளை வரலாற்று மிக்க தொகுப்பு....

Image
23/2/2020 அன்று ஞாயிறு வியாபார விருத்தி தரும் மாசி அமாவாசை விரதம் !மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு ! மேல்மலையனூர் கோயில் தல வரலாறு! அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன? மயான கொள்ளை விழா எப்படி உருவானது?என்ற விவரங்களும் பதிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன.     மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. அமாவாசை விரதம் கடுங்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதம் ஆகும். இந்த மாசி மாதத்தில் ஆன்...

வேலூர் கோட்டை மாநகரம் லயன்ஸ்சங்கம் நடத்திய "நேசக்கரம் நீட்டுவோம் "

Image
22.02.2020) அன்று வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கத்தின் இம்மாத சிறப்பு விருந்தினர் கூட்டம் சங்கத் தலைவர்Lion Er.S.மணிபாரதி தலைமையில் நடைபெற்றது. வேலூர் அக்சிலியம் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசியை முனைவர்.திருமதி நா.குமாரிஅவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  "நேசக்கரம் நீட்டுவோம்"  என்றதலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முசுந்தரம், லயன்.ஜா.மனோகரன், வேலூர் கம்பன் கழகசெயலாளர் கவிஞர் ச.இலக்குமிபதி, சங்க முன்னாள் தலைவர்கள் லயன்.சுமதிமனோகரன், லயன்.ஆர்.ஜீவரத்தினம், சங்க பொருளாளர் லயன்.ச.காசி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அலார்ட் தினமும். டயரின் தன்மையை அறிந்து வாகனம் ஓட்டினால் விபத்தை தடுக்கலாம்.....

Image
டயர்களையும் கவனியுங்கள் வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள் திருப்பூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பைத் தாண்டி பேருந்தில் மோதியதாகவும், லாரியின் டயர் வெடித்ததே விபத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. விபத்து செய்திகளில் அதிகளவு சொல்லப்படும் காரணம் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது என்பதே.  சாலைக்கும் வாகனத்தும் இணைப்பாக இருக்கும் டயர்கள் விபத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. முழு வாகனத்தையும் தாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் டயர்களை வாகன ஓட்டிகள் சரியாக கவனிக்கிறார்களா?  ஒரு கிரீச் சத்தம் வந்தாலே மெக்கானிக்கை பார்க்க ஓடும் வாகன ஓட்டிகள், டயர் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதன் காரணம் என்ன? பைக்கோ, காரோ, லாரியோ எந்தவித வாகனமாக இருந்தாலும் அதன் முன்பகுதி டயர்கள் மிக முக்கியம்.  வாகனத்தை முன்னோக்கி இயக்கிச் செல்லும் பெரும் பொறுப்பு முன் சக்கரங்களுக்கு உண்டு. அதனால் வாகனத்தின் முன் சக்கர டயர்கள் மீது அதிக கவனம் தேவை.  ஒருவேளை அதிக வேகத்தில் செல்லும்போது டயர்கள் வெடித்தால் வண்டியின் போக்கை சரிவர கையாள மு...

திருச்செந்தூர் இன்று கோலாகலம் தமிழக முதல்வர் பா. சிவந்திஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்துவைத்து உரையாற்றினர்

Image
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்செந்தூர்: தமிழக மக்களால் “சின்னய்யா” என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் பத்மஸ்ரீ, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்.   பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை ஆகிய 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சாதனைகள் காலத்தால் மறக்க இயலாதவை. சாதி, மதம் கடந்து தன்னலமற்ற வகையில் இந்த 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சேவைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர செய்தன. கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் துறைகளில் அவர் செய்த மகத்தான சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கின. மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி பெருமைப்படுத்தியது. காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான ஆன்மீக பெரியவர்களும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்ந்து உள்ளனர். இத்தகைய சிறப்புடைய டாக்டர் பா.சிவந்தி ஆதி...

மாநகராட்சி நடவடிக்கை. உரிமம் ,தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் .....

       உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல் உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.  உரிய கால அவகாசம் கொடுத்தும் உரிமத்தை புதுப்பிக்காமலும், தொழில் வரியை செலுத்தாமலும் இயங்கி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரியை செலுத்தும் பட்சத்தில் உடனே சீல் ஆற்றப்படும் என சென்னை மாநகராட்சி மண்டலம் 5இன், உதவி வருவாய் அலுவலர் திருப்பால் கூறினார். தொழில் உரிமத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டுமென்றும், மக்கள் வரி செலுத்தினால்தான், மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்