Posts

மகரவிளக்குபூஜை

Image
தைதிருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரவிளக்குபூஜை   சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தை வந்தடையும்.  இதன் பின்னர் திருவாபரணங்களை பூட்டி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும். அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.  மகரவிளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ வன துர்கா பீடத்தில்...

Image
வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வன துர்கா பீடத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீ மஹா சரஸ்வதி முலமந்திர பூஜையில் ஸ்ரீ விஜய் மேல்நிலை பள்ளியின் தேர்வு திருவிழாவில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற மாணாக்கர்களுக்கு பூஜை செய்த எழுதுகோள் கொடுத்து அம்மாவின் ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " பொங்கல் விழா "

Image
12.01.2020 அன்று வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " பொங்கல் விழா " நடைபெற்றது. சங்கத்தலைவர் லயன்.ச.மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா  சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், கோலப்போட்டி, பொங்கல் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் கலைமகள்.சு.இளங்கோ சுவாமி விவேகானந்தர் பற்றி சிறப்புரை ஆற்றினார். புலவர் வேலூர் மா.நாராயணன் பொங்கல் விழா பற்றி சிறப்புரை ஆற்றினார். தொழிலதிபர் ஆர்.ஜெயராமன் அவர்கள் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஊர் பெரியதனம் வேணுகோபால் முதலியார் பொங்கல் விழா தொடங்கிவைத்து அன்னதானம் வழங்கினார். மண்டலத்தலைவர் லயன்.ராஜு, வட்டார தலைவர் லயன்.தேவதாஸ், மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முகசுந்தரம், மனோகரன், வெங்கடேசன்,தேசி, சங்க பொங்கல் விழா சேர்மென் லயன்.எம்.ஜெயவேலு, சங்க செயலாளர் லயன்.கேசவன், சங்க பொருளாளர் லயன்.காசி  மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளியில் ஆண்டு விழா.

Image
வாணிவித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா ,வாணிவித்யாலயா பள்ளியில்48வது வாணிவர்ணஜாலம்  ஆண்டு விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜய் ரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தாளாளர் மணிவண்ணன் அவர்கள் செயலாளர்திருமதி நந்தினி மணிவண்ணன்  செய்திருந்தனர் மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி கனிமொழி மற்றும் சி.பி.எஸ்.சி முதல்வர் திருமதி மைதிலி பாணு அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சியுடன்  விழா நிறைவடைந்தது.

பாரத் வங்கி சார்பில், சத்துவாச்சாரி வள்ளலார் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா

Image
11.01.2020 அன்று IDFC FIRST பாரத் வங்கி சார்பில், சத்துவாச்சாரி வள்ளலார் நம்பிக்கை இல்லத்தில்உள்ள மாணவர்களுக்கு பகல்மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வங்கி சார்பில் ரீஜினல் மேனேஜர் பாபுரமேஷ்,டிவிஷனல்மேனேஜர் விஜயராஜ்,      CSRமேனேஜர் வினேந்திரன் , பிரான்ச்மேனேஜர் விஜய், உதவிமேலாளர் தனசேகர் ,ஆசாஅன்னதான மேலாளர் தவசீலன் நிர்வாகிகள்.  

ஓவியத்தை ஆர்வமாக வரையும் மாணவிகள் சிறப்பு படங்கள்

Image
ஓவியத்தை ஆர்வமாக வரையும் மாணவிகள் சிறப்பு படங்கள்.

ஓவியத்தில் சாதனை படைத்த வேலூர் நவக்குமார்

Image
ஓவியத்தில் சாதனை படைத்த வேலூர் நவக்குமார் வேலூரில் குழந்தைகளுக்கு ஓவியங்கள் கற்றுக் கொடுத்து பல மாணவர்களை ஓவியத்தின் சாதனையாளர்களாக உருவாக்கிய மாஸ்டர்  நவக்குமார் பல சான்றுகள், வாங்கிய படங்கள்.

தை மகள் வந்தாள் 

Image
  தை மகள் வந்தாள்  தை என்ற பெயர்க்கொண்டு. கரும்பென்ற மொழிக் கொண்டு  கண்களில் மீன் கொண்டு  கால்களில் மயில் கொண்டு  காத்திருந்த என்னைக் கண்டு  காரணத்தைப் புரிந்துக் கொண்டு   காதலியும் நானே என்று  அத்தை மகள் வந்தாள்   அத் "தை" மகள் வந்தாள் G. Sekar M.A,M.phil,B.Ed. Teacher, Velapadi, Vellore.

டிகேஎம் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா வேலூர் கலெக்டர் பங்கேற்பு

Image
டிகேஎம் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா  வேலூர் கலெக்டர் பங்கேற்பு வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டி.கே.எம் (தனபாக்கியம் கிருஷ்னசாமி) மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இனைந்து நடத்தும் பொங்கல் திருவிழா வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்    நடைபெற்றது, இவ்விழாவில் மாணவிகள் பட்டாடைகள் அனிந்தும், வீரவிளையாட்டுகள், நடனங்கள் என பல நிகழ்ச்சிகளுக்கிடையே கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொள்ள மாணவியர்களும் பேராசியைகளும் பொங்களிட்டனர். இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்,  பெண்கள் படித்துவிட்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது நல்லதல்ல, பெண்களும் வேலைக்குச்சென்றால்தான் தங்கள் குடும்பம் வாழ்வுயரும்., ஆனாதிக்கம் நிறைந்த இவ்வுலகினில் பெண்கள் அடிமைப்பட்டுகிடப்பது நல்லதல்ல என்றும், ஆணாதிக்க கொடுமையை விளக்கும் வண்ணமாக " என் மறைவுக்குப்பின் என் நினைவுகளுடன் உன் வாழ்க்கை" ஆனால் உன் மறைவுக்குப்பின் உன் தங்கையுடன் என் வாழ்க்கை" என ஆணாதிக்கத்தின் கொடுமையை கலகலப்பாக கூறினார். மேலும் இந்த காலத்திலும் பெண்கள் தங்களது படிப்புக்காக அண்ணன், தம்பி அப்பா என யாராவது ஆண்கள்  அழைத்துச்செல்ல...

சிறப்பான வாழ்வை அருளும் விரதங்கள்

Image
சிறப்பான வாழ்வை அருளும் விரதங்கள்!!  விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். உண்ணாவிரதம் இருந்தும் நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் 'உபவாசம்" என்பதாகும்.   நாம் எந்த தெய்வத்தின் அருளைப் பெற விரும்புகிறோமோ, அந்த தெய்வத்திற்கு உகந்த திருநாளில், விரதம் இருந்து பால், பழம் மட்டும் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல் கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ பிரார்த்தனை செய்வதன் மூலம், நம் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.  விநாயகப்பெருமானுக்கு சதுர்த்தியில் விரதமும்,   முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதமும்,   சிவபெருமானுக்கு சிவராத்திரியில் விரதமும்,   அம்பிகைக்கு நவராத்திரியில் விரதமும்,   பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விரதமும்,   நமது பாவபுண்ணியத்தை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனுக்கு சித்ரா பௌர்ணமி விரதமும்,   அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி விரதமும் நாம் மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம...

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா

Image
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு..வரும் பிப்ரவரி 5 ம் தேதி பெரியகோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.முக்கிய நிகழ்வாக..ஸ்ரீவிமான உச்சியில் இருக்கும் கலசம் இறக்கப்பட்டது. அதில் இருந்த பழைய தானியங்களை நீக்கி, புதுத் தானியங்களை நிரப்பி, தங்கமுலாம் பூசி மீண்டும் ஸ்ரீவிமானத்தில் ஏற்றப்பட உள்ளது.இந்தக் கலசம் எப்போ, யாரால் வைக்கப்பட்டது.?இதற்குமுன் எப்போவெல்லாம் குடமுழுக்கு நடைபெற்றது.?பேரரசன் இராஜராஜன்  தஞ்சை பெரியகோவிலை எடுப்பித்து, தன்னுடைய 25 ம் ஆட்சியாண்டில் குடமுழுக்கு செய்தார்.அதாவது கி.பி. 1010 ல் முதன் முதலாக பெரியகோவில் குடமுழுக்கு இராஜராஜனால் நடத்தப்பட்டது.பெரியகோவில் கல்வெட்டு .."இராஜராஜன் தனது 25 ம் ஆட்சியாண்டு 275 ம் நாளில், இராஜராஜனே ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் விமானக் கலசத்திற்கு மூவாயிரத்து எண்பத்துமூன்று பலம் உள்ள செப்புக்குடம் அதன் மேல் பூச இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தாரறைக் கழஞ்சு பொன்னும் அளித்து..."இந்தக் கல்வெட்டின் மூலம் கி.பி. 1010 ல் முதன் முதலாய் பெரியகோவிலுக்கு குடமுழு...

திருச்சியில் பிரம்மாண்டமான சீரடிசாய்பாபாகோயில்

Image
திருச்சியில் பிரம்மாண்டமான சீரடிசாய்பாபாகோயில் திருச்சி சமயபுரம் அருகில்  அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சீரடி சாய்பாபா கோயில் பிரமாண்டமாக கட்டி 20/01/20 அன்று கும்பாபிஷேகம் இதன் அமைப்பு சீரடியில் உள்ளது போல் இருக்கும்.

சந்திராஷ்டமம் என்றாலே சிலர் அந்த வார்த்தையை கேட்டு பயப்படுவதுண்டு.

சந்திராஷ்டமம் என்றாலே சிலர் அந்த வார்த்தையை கேட்டு பயப்படுவதுண்டு.   சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும். சந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது. மேஷம் - துவரை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட வேண்டும். ரிஷபம் - மொச்சை தானம் செய்து, மகாலட்சுமியை வழிபடுங்கள். மிதுனம் - பச்சை பயிறு தானம் செய்து, பெருமாளை வழிபட வேண்டும். கடகம் - பச்சரிசி தானம் செய்து, அம்பிகையை வழிபடுங்கள். சிம்மம் - கோதுமை தானம் கொடுத்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்யலாம். கன்னி - அவல் தானம் செய்து, கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள். துலாம் - நாட்டு சர்க்கரை தானம் செய்து அலங்காரத் தில் இருக்கும் அம்பிகையை வழிபடுங்கள். விருச்சிகம் - பருப்பு சாதம் தானம் செய்து, அங்காரகனை வழிபட வேண்டும். தனுசு - கொண்டைக் கடலை தானம் செய்து, பெரியவர்...

இந்து மதத்தின் பெருமை

இந்து மதத்தின் பெருமை வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்... 1. தாயாக = அம்மன் 2. தந்தையாக = சிவன் 3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன் 4. குருவாக = தட்சிணாமூர்த்தி 5. படிப்பாக = சரஸ்வதி 6. செல்வமகளாக = லக்ஷ்மி 7. செல்வமகனாக = குபேரன் 8. மழையாக = வருணன் 9. நெருப்பாக = அக்னி 10. அறிவாக = குமரன் 11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி 12. உயிர் மூச்சாக = வாயு 13. காதலாக = மன்மதன் 14. மருத்துவனாக = தன்வந்திரி 15. வீரத்திற்கு = மலைமகள் 16. ஆய கலைக்கு = மயன் 17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன் 18. ஊர்க்காவலுக்கு = ஐயனார் 19. வீட்டு காவலுக்கு = பைரவர் 20. வீட்டு பாலுக்கு = காமதேனு 21. கற்புக்கு = சீதை 22. நன் நடத்தைகளுக்கு = ராமன் 23. பக்திக்கு = அனுமன் 24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி 25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன் 26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன் 27. மொழிக்கு = முருகன் 28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்           ...

காஞ்சி காமாக்ஷி அம்பாள் இன்று ஆருத்ரா புறப்பாடு

Image
காஞ்சி காமாக்ஷி அம்பாள்  இன்று ஆருத்ரா புறப்பாடு