குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம்
குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம் ➖➖➖➖➖➖➖➖➖ கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் கோட்டை சுவர் போன்று வளர்ந்து நிற்கும் ஆலமரங்களுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அழகு முத்தையரனாரப்பன் ஆலயம் மற்றும் அழகு சித்தர் ஜீவ சமாதி ஆகியவை அமைந்துள்ளன. தல வரலாறு சிவன், விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) அவதார புத்திரனாக பிறந்தவர் ஐயனார். புராண வரலாறுபடி சிவன் விஷ்ணு திருவிளையாடல் நடைபெற்றது புதுவை கீழ்புத்துப்பட்டு ஐயனார் கோயில் என்றாலும், இந்த தென்னம்பாக்கத்தில் தான் ஐயனார் வளர்ந்து தக்க பருவத்தை அடைந்து வீரதீர செயல்கள் புரிந்து அதன் மூலம் பூரணி பொற்கலையை மணந்தார் என்று கூறுப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் அழகு முத்தையனாரப்பன் பூரணி மற்றும் பொற்கலையை மணந்து தம்பதியர் சமேதராக அமர்ந்தபடி ஊரை பாதுகாத்து வருகின்றார். இவருக்கு வலது பக்கத்தில் காவலாளியாக கம்பீர பலத்துடன் வீரபத்திர சுவாமி அமர்ந்துள்ளார். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சீட்டாக எழுதி ஐயனாரின் கத்தியில் கட்டி வேண்டிக்கொள்வதன் மூலம் அவை நிறைவேறி வருவதாக கூறுகின்றன...