Posts

Showing posts with the label விளையாட்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

Image
போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வாகை சூடி உள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. அதேநேரம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி,  தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்லர் , ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் ஸ்மித் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , டேவிட் மில்லர் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே ...

துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை...

Image
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்த ஆண்டு துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 46 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி, நவம்பர் 3ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக முதலில் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், பின்பு துபாயில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட எட்டு அணிகளும் கடந்த மாதம் துபாயை சென்றடைந்தன. கடந்த ஒரு வாரமாக, அனைத்து அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அனைத்து போட்டிகளும் அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறுமென்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்ப...

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை...

Image
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியீடு . முதல் போட்டி செப். 19 ல் சென்னை, மும்பை இடையே அபுதாபியில் நடைபெறும் .கொரோனா ஊரடங்கு காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

13வது ஐபிஎல் போட்டித் தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்படும்.

Image
13வது ஐபிஎல் போட்டித் தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ,  போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸூக்கும் - 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் என தெரிகிறது. 

ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல்-இல் இருந்து விலகல்..

Image
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல்-இல் இருந்து வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார் ஹர்பஜன்.

ரெய்னா இந்தியா திரும்பியதாக காரணம்...

Image
துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காத‌தால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல் .தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் விளம்பர ஒப்பந்த‌த்தை ரத்து செய்த‌து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்...

Image
சீனாவின் விவோ நிறுவனத்துடனான ஐபிஎல் விளம்பர ஒப்பந்த‌த்தை ரத்து செய்த‌து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

தனது வாழ்க்கையில் முதன் முதலில் கேக் செய்த விராட் கோலி...

Image
முதன் முதலில் கேக் செய்த விராட் கோலி

செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்...

Image
செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் - ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தகவல் .நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் போட்டி நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் .

Image
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் . ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் .போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்.

ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு...

Image
ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு. கொரோனா தொற்று காரணமாக முடிவு . ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது டி 20 கிரிக்கெட் தொடர்.

இந்தியா அணியை பார்த்து கற்றுக்கொண்டோம் வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம்.

Image
இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த எடுத்த முயற்சியை கண்டு தான் தாங்கள் திருந்தியதாக வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். இணையம் வாயிலாக நடைபெற்ற உரையாடலில் கலந்து கொண்ட அவர், விராட் கோலி உடல் தகுதியை மேம்படுத்த எடுத்த பயிற்சியை கண்டு தம் மீதே தமக்கு கோவம் வந்ததாக கூறினார். இந்திய வீரர்களை கண்டு தான் உடல்தகுதியை மேம்படுத்த வங்கதேச வீரர்கள் முயற்சி எடுத்ததாக தமீம் இக்பால் கூறினார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் ஒத்திவைக்க வாய்ப்பு...

Image
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு. டி20 உலகக்கோப்பை இந்தாண்டு அக்.18 முதல் நவ.15 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது; ஒத்திவைப்பு பற்றி ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.