Posts

Showing posts with the label மாநில செய்திகள்.

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை...

Image
டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் தொடங்கிவைக்கிறார் . விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித் தொகையை இன்று விடுவிக்கிறது மத்திய அரசு. 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்படுகிறது.

கடன் தவணை செலுத்துவதில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படாது ...

Image
உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாத தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும், வட்டிக்கான வட்டியை ரத்து செய்ய உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், 2 கோடிக்கும் குறைவான கடனுக்கு மட்டும் 6 மாத தவணை சலுகைக்கு வட்டி மீதான வட்டி ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடன் தவணை செலுத்த மேலும் காலஅவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதில் விலக்கு அளிப்பது தொடர்ந்தால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், பணப்பரிவர்தனையில் சுணக்கம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சொத்து அட்டை...

Image

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Image
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குழந்தைகளின் நலனை பாதிக்கும் என கூறியுள்ளனர். 

தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...

Image
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். "விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு" ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆய...

பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ் (Kissan Credit Card) கடன் பெற விரும்பும் மீனவ மக்களின் கவனத்திற்கு.

Image
பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ், மீன் வியாபாரம் செய்யும் மீனவ மகளிருக்கு ரூ.33,000/-, சைக்கிள் மூலம் மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.33,000/-, கருவாடு வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.35,000/-, இரு சக்கர வாகனத்தில் குளிர்சாதன பெட்டியை வைத்து மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.1,15,000மும், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பயனாளிகள் ஒரு ஆண்டிற்குள் அவர்கள் வாங்கிய கடனை செலுத்தினால் 4% வட்டியும், ஒரு வருடத்திற்கு மேல் கடன் தொகையை செலுத்தினால் 7%  வட்டியும் செலுத்த வேண்டும்.   இக்கடன் திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் சென்னை மாவட்ட மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பங்களை இராயபுரத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளளாம்.  இந்த கடன் விண்ணப்பத்தை பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம்.  இந்தக் கடனை பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் யாராவது அணுகினால், அவர்களைப் பற்றிய தகவலை 93848 24245/93848 24340 என்ற அலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கவும்.  அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ ...

உச்சத்தில் தங்கம் விலை...

Image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.42,808க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.5,351க்கு விற்பனை.

அயோத்தியில் வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது...

Image
உத்திரப்பிரதேசம் : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு .அயோத்தியில் வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது..

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து...

Image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 99 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 301 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 4 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாக, மார்ச் 23ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 352 ஆக இருந்த நிலையில் தற்போது 42 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் இந்த ஊரடங்கு நாட்களில் கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து பண்டிகை நாட்களும் நெருங்கி வருவதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   

Shareit செயலியை விட வேகமாக இயங்கும் ‘File Share Tool’...

Image
சீன நிறுவனத்தின் Shareit செயலியை விட வேகமாக இயங்கும் ‘File Share Tool’ என்ற செயலியை ஜம்மு காஷ்மீர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார். கல்வான் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் வலுக்க ஆரம்பித்தது. இதனையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை தடை செய்வதாக விளக்கம் அளித்திருந்தது.  தடை செய்யப்பட்ட செயலிகளில் Shareit-ம் ஒன்று. ஒரு செல்போனில் இருந்து மற்றொரு போனுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை வேகமாக பகிர்வதற்கு இந்த செயலி பயன்பட்டது. இந்தியாவில் இதனை ஏராளமானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த திப்பு சுல்தான் வானி என்ற இளைஞர் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுவும் Shareit போல் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு செயலிதான். ஆனால் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது Shareit ஐ விட அதிக வேகம் கொண்டது. ஒரு நிமிடத்திற்கு 40 MB வேகத்தில் இதில் கோப்புகளை ப...

21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்...

Image
  20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது - பிரதமர். அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும் .வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும். கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது. இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம். கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன - பிரதமர். மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் . கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம். 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம். கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம். பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை . நம் குறை...

2024 - ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டில் அனைத்து கிராம புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும்.

Image
2024 - ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டில் அனைத்து கிராம புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு, ஆயிரத்து 185 குடியிருப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 749 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக மணிப்பூர் மாநிலத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் காணொலி வழியாக, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவின் இந்த நெருக்கடியில் கூட, நாடு நிற்கவில்லை,நிறுத்தப்படவில்லை என்பதற்கு இன்றைய திட்டம் ஒரு எடுத்துக்காட்டு என கூறினார். தடுப்பூசி வரும் வரை, கொரோனாவுக்கு எதிராக நாம் கடுமையாக போராட வேண்டியிருக்கும், என்றும், அபிவிருத்தி பணிகளை முழு பலத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 592 உயர்வு...

Image
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 592 உயர்வு காலையில் கிராமுக்கு ரூ. 42 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 32 உயர்வு ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 74 உயர்வு மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 38,776 க்கு விற்பனை.

வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா...

Image
கொரோனா பயத்தால் குளிர்பானங்களை தவிர்த்த மக்கள்... வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொகோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்பனை 16 % அளவுக்குக் குறைந்துள்ளது.  கொகோ கோலா நிறுவனத்துக்கு இந்தியாதான் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாகும்.  இந்தியாவில் கோடைக்காலமான, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில்  குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையாகும்.  ஒவ்வொரு ஆண்டும் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை விகிதம் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டமாகிய இரண்டாவது காலாண்டில் பல மடங்கு அதிகரிக்கும்.  ஆனால், இந்த ஆண்டு கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் கொரோனா அச்சத்தால்  குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  இதனால்,  ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் விற்பனை 12 % சரிந்துள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டு அறிக்கையில், உலகளவில் கொரோனா...

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு...

Image
 சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 -க்கு விற்பனை. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280. வெள்ளியும் விலையும் கணிசமாக உயர்வு... ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனை.

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி..

Image
தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை, வீட்டிலிருந்தபடியே பணிபுரிய மத்திய தொலைதொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.  முதலில் ஏப்ரல் மாதம் மட்டும் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, பணியும் தடையின்றி நடைபெறுவதால் இந்த நடைமுறையைத் தொடர தொழில்நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன.  அதன்படி, மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் அக்டோபர் வரையில் இந்த நடைமுறையை நீட்டித்துள்ள நிலையில், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஆண்டு இறுதி வரையில் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி வழங்கின. இந்த சூழலில் அனைத்து மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், கொரோனா பரவலின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்...

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள்...

Image
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கம் சிறப்பு விமானங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை - 4, மதுரை - 2 விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அரசு

Redmi Note 9 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்.

Image
Redmi வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த Redmi Note 9 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள Redmi ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அம்சங்களை உள்ளடக்கிய புதிய சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் Redmi Note 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 9 மாடல் அறிமுகம் செய்யப்படாமல் இருந்து வந்தது.  இந்நிலையில் கொரோனாவால் துவண்டுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் Redmi Note 9 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் இன்று செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சிகர தோற்றத்துடன் காணப்படும் இந்த ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்களையும் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.  வகைகள் - விலை: Redmi Note 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வகைகளாக...

இன்றய கொரோனா பாதித்த மொத்த மாவட்டங்கள் விவரம்...

Image
தமிழ்நாட்டில் இன்றய கொரோனா பாதித்த மொத்த நிலவரம் 

பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி...

Image
வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடி மலரஞ்சலி!!