Posts

Showing posts with the label சினிமா.

ஹிட் அடித்த முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Image
பிரிக்க முடியாதது, தீபாவளியும், புதுப்படமும் என சொல்லலாம்... தீபாவளி புது படங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு  அளவே இருக்காது ஆனால், இந்த வருடம் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாவது சந்தேகமே...    கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதுப்பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களையும் மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் சிவாஜி, கமலின் பாபநாசம், அஜித்தின் விஸ்வாசம், விஜயின் மெர்சல், தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களும் தீபாவளி சிறப்பாக மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளது.   இதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள...

சம்பந்தப்பட்ட காட்சியில் நடிப்பவர்கள் தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்...

Image
அதன்படி,  படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிப்பவர்கள் தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கட்டாயம் கையுறை அணிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை. வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை படக்குழு உறுதி செய்ய வேண்டும் படப்பிடிப்பு தளம், மேக்கப் அறை உள்ளிட்ட இடங்களை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் மேக்கப் மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிய  வேண்டும். படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும், நுழைவாயிலில் உடல்வெப்ப பரிசோதனை செய்வது அவசியம் என்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்பு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் வெளியீடு...

Image
படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா...

Image
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - தனியார் மருத்துவமனையில் அனுமதி..

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

Image
விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ள அண்ணாத்த செய்தி என்ற பாடலை அறிவு பாடியுள்ளார். பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக சில வசனங்களை பேசியுள்ளார்,

துல்கர் சல்மான் பாடிய பாடல் வீடியோ வெளியானது.

Image
மணியா ரயிலே அசோகன்" படத்தின் உன்னிமயா என்ற பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது. "மணியா ரயிலே அசோகன்"  படத்தின் உன்னிமயா என்ற பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது. இப்பாடலை நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார்.

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Image
மதுரையில் நடக்கவுள்ள தனுஷ் - அக்‌ஷய்குமாரின் பாலிவுட் பட ஷூட்டிங் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது. பின்னர் தில்லி, மும்பையில் அக்‌ஷய்குமாரை வைத்து ஷூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் ரிலீசாக வேண்டிய இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ...

தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் ...

Image
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது!

முரட்டு சிங்கிள் தான் என கூறி உள்ளார் நடிகை ஓவியா...

Image
தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார். கொரோனா ஊரடங்கில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், தனக்கு காதலர் இல்லை, தான் சிங்கிள் என கூறி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். மேலும், வாரிசு அரசியல் தொடர்பான ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அனைத்து இடத்திலும் அரசியல் உள்ளது என லாவகமாக கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா...

Image
அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகள் ஆரத்யாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அமிதாப் குடும்பத்தில் மகன், மருமகள், பேத்தி என கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

 திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம்.

Image
இயக்குனர் பீட்டர் பால் என்பவரை நாளை(ஜுன் 27) 3வது திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர்களது திருமணம் மிக எளிமையாக வீட்டில் வைத்து நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது. சில அத்தியாயங்கள் சோகமாக இருக்கும், சில மகிழ்ச்சியாக இருக்கும், சில உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்த பக்கத்தை திருப்பி பார்க்கவில்லை என்றால், அந்த அத்தியாயத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும்", என குறிப்பிட்டு தனது பாலோயர்களுக்கு காலை வணக்கம் கூறியிருக்கிறார் வனிதா. வனிதாவுக்கு ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் தான் முடிந்தன. பீட்டர் பாலை தற்போது மூன்றாவதாக தான் வனிதா திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த வாழ்க்கையில் தனக்கு எந்த மாதிரியான அத்தியாயம் காத்திருக்கிறது எனும் எதிர்பார்ப்பு தன்னுள் எழுந்துள்ளதை தான் வனிதா சூசகமாக பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். முன்னதாக தனது அம்மாவிடம் இர...

வனிதா விஜயகுமாருக்கு கல்யாணம்...திருமண வேலைகளில் பிஸி...

Image
வரும் சனிக்கிழமை (27-06-2020) வனிதா விஜயகுமாருக்கு கல்யாணம். அனிமேஷன் கலைஞரான பீட்டர் பால் என்பவரை மணக்கிறார் வனிதா. திருமண வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன். ``வாழ்க்கை இப்ப ரொம்ப பாசிட்டிவா போயிட்டிருக்கு. நல்ல நல்ல விஷயங்களெல்லாம் லாக்டெளன்ல நடக்குது. யாரையும் மறுமணம் பண்ணக்கூடாதுனு ரொம்பத் தெளிவா இருந்தேன். ஆனா, பீட்டர் என் முடிவை மாத்திட்டார். அவர் ரொம்ப சாஃப்ட் கேரக்டர். என்னையும், என் பொண்ணுங்களையும் நல்லா பார்த்துக்குறார். ஒரு சினிமா புரொஜக்ட் விஷயமா பேசுறப்போதான் பீட்டர் எனக்கு அறிமுகமானார். நான் தொடங்கியிருக்குற யூடியூப் சேனலுக்கு நிறைய சப்போர்ட் டெக்னிக்கல் ரீதியா செஞ்சு கொடுத்திருக்கார். முதல்ல பீட்டர்தான், `கல்யாணம் பண்ணிக்கலாமா'னு கேட்டார். என் பொண்ணுங்களுக்கும் பீட்டரை பிடிச்சிருந்தது. எனக்கும் இந்த திருமணம் சரியா இருக்கும்னு தோணுச்சு. அதனால உடனே ஓகே சொல்லிட்டேன். எங்க அம்மா அப்பாவுடைய திருமண நாள் ஜூன் 27. அதனாலதான், இந்தத் தேதியை நான் செலக்ட் பண்ணேன். என் வீட்டுல ரொம்ப சிம்ப்பிளா எங்க திருமணம் நடக்கப்போகுது. ரொம்ப ஆடம்பரமா திருமணம் பண்றதுல எனக்கு எப்பவும் பெரு...

அவரின்றி நான் இல்லை - தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் அட்லீ...

Image
  தொடக்க காலத்தில் பிரபல இயக்குநர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குநகராக பணியாற்றி பின் பிரபல இயக்குநராக உருமாறியவர் தான் அட்லீ. 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் தான் இவர் சங்கர் உடனான தனது பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு தளபதி நடிப்பில் வெளியான நண்பன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். 2013ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார் அட்லீ குமார். இதுவரை இவர் நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் மூன்று திரைப்படம் தளபதி விஜய்யுடன் ‘தெரி', ‘மெர்சல்' மற்றும் ‘பிகில்' ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார், மேலும் இருவரும் சேர்ந்து ஒரு திட்டத்தில் கையெழுத்திட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தளபதி விஜய் தனது வாழ்த்துக்களை கூறியுள்ள அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "என்னோட அண்ணன், என்னோட தளபதி, என்னை நேசிப்பதை விட நான் அவரை அதிகமாகந...

இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது...விஜய்யின் ஹாஸ்டேக்.

Image
நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூகவலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #HBDTHALAPATHYVijay என்ற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக தயாராக உள்ளது.

Image
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக தயாராக உள்ளது. இதற்கான அறிவிப்பை, இயக்குனர் ஷாமிக் மவுலிக் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு, கொலையா? தற்கொலையா என்று பெயர் வைத்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங்குக்கு இழைத்த அநீதிகளையும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்த படம் இருக்கும் எனவும், ஷாமிக் மவுலிக் தெரிவித்துள்ளார். நிகில் ஆனந்த் என்ற மற்றொரு இயக்குனரும் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் மனதை கொள்ளையடிக்க வருகிறார்...

Image
80 களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை அமலா, கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகை அமலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Image
கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா(39) பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி, மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். சிரஞ்சீவி சர்ஜாவின் தொண்டை சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா எப்போது போகும்...மாஸ்டர் எப்போது வரும்.

Image
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கொரோனா எப்போது போகும் என்ற கேள்வி எந்த அளவுக்கு இருக்கிறதோ... அதே அளவுக்கு கேட்கப்படும் கேள்வி, மாஸ்டர் எப்போது வரும்?தென்னிந்தியாவின் உச்ச நடிகரான விஜய் நடிப்பில், தரமான இயக்குனர் எனப் பெயர் எடுத்த லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பிரமாண்ட திரைப்படம்தான் மாஸ்டர். தரமான சினிமாவாகவும் ரசிகர்களுக்கு பிடித்த விஜய் படமாகவும் மாஸ்டர் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இதற்கெல்லாம் மேலே விஜய் சேதுபதி என்ற மற்றொரு நட்சத்திரமும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை பிரமாண்டமாக்கி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம்  மாஸ்டர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு திரைத்துறையையே முடக்கி போட்டுவிட்டது. தற்போது மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், திரை அரங்கங்களும் விரைவில் திறக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அப்படி திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத்தான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக செய்தி கசிந்தது. ஆனால், பட அதிபர்கள்...

TIK TOK இல் அசத்தும் காமெடி நடிகர் செந்தில்...

Image
சூர்யா டன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த காமெடி நடிகர் செந்தில் தற்போது சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த வாழைப்பழ காமெடி வசனத்தை டிக்டாக்கில் இளம் பெண்ணுடன் சேர்ந்து செந்தில் நடித்துள்ளார் செந்தில் தாடியுடன் வித்தியாசமான கெட் அப் உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சூரியின் புதிய லுக் ...

Image
தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம்...