Posts

Showing posts with the label கல்வி.

2021-ல் அரசு வேலை கருடா பயிற்சி மையம்...

Image
 

பாதுகாப்பு படையில் சேருவதற்கான சிறந்த பயிற்சி மையம்...

Image
மாணவ மாணவிகள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை...

Image
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை .அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு.

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்...

Image
செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்-அண்ணா பல்கலை எச்சரிக்கை அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செப்டம்பர் 3-க்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்ம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.  செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.  செப்டம்பர் 5 வரை அபராதத்துடன் கட்டணம் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்...

Image
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு  மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா  காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு திரும்பப்பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது, அதேபோல அவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான அரியர் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு காரணமாக தேர்வு நடத்தப்படுவதாகவும், ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள்,  சகஜ நிலை திரும்பியபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும்...

Image
  தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ.  சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010ம் ஆண்டு அறிவிப்பாணை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது.  கடந்த மார்ச் மாதம், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி முழு பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...

Image
நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பபடும். நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு.

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது...மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி.

Image
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு #SupremeCourt கேள்வி மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் 4,000 பேருக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தக்கோரி வழக்கு நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை.

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு ...

Image
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும் நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும் செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை...

Image
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. விலக்கு அளிக்கக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.  எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் எனவும், ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Image
முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உறுதிபடுத்தியுள்ளார். அனைத்து மருத்தவர்களும், கொரோனா தடுப்பு பணியில் மும்முரமாக இருப்பதால், ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

கல்வி பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு...

Image
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு, கீழ்க்கண்ட பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Image
பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டபிறகு 1-9ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில்  87.42 தேர்ச்சி...

Image
வேலூர் மாவட்டத்தில் 17, 405 மாணவர்களும் 21,052 மாணவிகளும் என மொத்தம் 38,457 மாணவர்கள் பிளஸ்2தேர்வு எழுதினர். அதில் 14,386 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 19,233 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மொத்தம் 33,619 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதில் 82.65 சதவீதம் மாணவர்களும் 91.36% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மொத்தம் 87.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் 176 அரசு பள்ளிகளை சேர்ந்த 17405 மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 15714பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது  82.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)

வேலூரில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் பதிவிறக்கம் - முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு.

Image
முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே படிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து அவற்றின் மூலமாகவும் பாடங்கள் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பிளஸ்-2 மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று மடிக்கணினியில் பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று இணையதளம் மூலம் மடிக்கணினியில் வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அதில் பல்வேறு சிரமங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஒரு மடிக்கணினியில் வீடியோ தொகுப்புகள் பதிவிறக்கம் செய்வதற்கு பல மணி நேரமானது. இதுகுறி...

EET, JEE Main மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது...

Image
EET, JEE Main மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் . தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் .தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கும் உடல் நிலை சான்றிதழ் அவசியம்.

நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

Image
நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு . முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் முதல் வாரம் நடத்தப்படும் என அறிவிப்பு.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

Image
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் இன்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளார். இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படலாம் என்ற பரிந்துரையை நீதிபதி கலையரசன் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் முயற்சியில் பிரித்தாஸ்ரீ...

Image
பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ பள்ளியிலும் கல்லூரியிலும் பல சான்றிதழ்கள் பெற்றுள்ளார். மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஓவிய வகுப்பிலும் கல்லூரியிலும் மாணவிகளுக்கு ஓவிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கிறார். மேலும் தனி நபர் படைப்பு ஓவிய கண்காட்சிக்கும் இந்திய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ     படிப்பு: மூன்றாம் ஆண்டு  வணிகவியல்.                             கல்லூரி: ஆக்ஸ்லியம் கல்லூரி(தன்னாட்சி).   இடம்: அரியூர்.

பள்ளிகள் திறக்கப்படுவது போன்ற விவரங்கள் பற்றி அறிய புதிய மொபைல் ஆப் ...

Image
பள்ளிகள் திறக்கப்படுவது போன்ற விவரங்கள் பற்றி அறிய ' வகுப்பறை நோக்கி ' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை.