Posts

Showing posts with the label உலக செய்திகள்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை...

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதை அடுத்து விமான நிலைய பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் ஸடான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலூர் CMC யை சார்ந்த மருத்துவர்கள்.

Image
  அமெரிக்காவின் ஸடான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலூர் CMC யை சார்ந்த மருத்துவர்கள். உலக அளவில் அவர்கள் ரான்கிங் குறிப்பிடப்பட்டுள்ளது

அமெரிக்க தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அதிபர் டொனால்டு டிரம்பை வலியுறுத்தி உள்ளார்.

Image
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வழக்கு தொடரும் டிரம்ப், ஜோ பைடன் தவறாக தன்னை வெற்றியாளர் என அடையாளம் காட்ட வேண்டாம் என கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே டிரம்பின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அவரை சமாதானம் அடைய செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியது. தற்போது மெலனியாயும், வெள்ளை மாளிகையில் டிரம்பை தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார் என தெரியவந்து உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகள்.

Image
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஆகியவை தென்படலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 78,399 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,702, 595ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 77.88ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை வெ...

முகத்தில் கலையாத சிரிப்பு -பெ.தமிழ்ச்செல்வி.

Image
ஆசான்களுக்கு கடன்பட்டவள் நான்!                     (1) கங்காதரா நடுநிலைப்பள்ளி...... பெற்றோரின் கை விடுத்து, அழுதபடி திரும்பித் திரும்பி பார்த்து, துவங்கிய முதல்வகுப்பு கல்விப்பயணம் துவக்கமது! "காந்தி டீச்சர்" அரிச்சுவடியை.... அ னா/ஆ வன்னாவை... மணலில்/புளியங்கொட்டையில் கற்றுத் தந்த திறமையுடன்! முகத்தில் கலையாத சிரிப்பு கோபப்பட்டு பேசாத நளினம் அலட்டல் இல்லாத ஆளுமை மனம் புண்படாத கடிதல்.... இத்தனையும் என் குருபக்தியாய் மனதுள் நிறைந்த  கடன் பட்ட நெஞ்சத்துடன்!                      (2) A for apple/B for ball இதனை மூன்றாம் வகுப்பில்  அண்டைமொழியென அறிய வைத்த, மருவினை உதடு மேல் கொண்ட "மனோன்மணி ஆசிரியை"! உணர்வோடு உறைந்த கடமை காலந் தவறாமை.....பாடத்தைப் பாடலாக மனனம் செய்வித்த திறமை, அத்தனைக்கும் சொந்தமான, M.A. ஆங்கிலம் நான் படிக்க  தூண்டுகோலான வழிகாட்டிக்கு, ஆத்மார்த்தமான கடன் பட்டவளாக!                           ...

வகுப்பறை பயணத்தில் -பெ.தமிழ்ச்செல்வி.

Image
ஆசிரியர்கள் வகுப்பறை பயணத்தில் பாட நேரக் கழனியில் பகலெல்லாம் பாடுபடும் விவசாயி! பச்சைமண் சிறுவனை பக்குவமாய் வனைகின்ற தொழிலாளி! வழி மாறிச் செல்பவனை வழிகாட்டி அழைத்துப் போகும் அன்பின் தோணி! சிகரத்தில் ஏற்றி விட்டு இறுமாந்து பூரிக்கும் தன்னலமற்ற மனித ஏணி! நீதி/நேர்மை/ஒழுக்கம் இணுக்கு விடாமல் எடுத்து, மாணவனை நெய்யும் நெசவாளி! காலத்தால் பாதிக்காத கல்வி தந்தே ஞாலத்தை வழி நடத்தும் மெய்ஞ்ஞானி! கற்பித்தலில் வேற்றுமை காட்டாமல் /மாற்றுருவாய் ஜகம் கண்ட கலைவாணி! சாதனைகள் பல புரிய இதயத்தை நெறிப்படுத்தும் அறிவுக்கேணி! அரிச்சுவடி/வாய்ப்பாடு கற்றுத் தந்தவர் அன்றாடம் நாம் வணங்கும் தெய்வமே! அறிவுரைகள் பின்பற்றி நாம் செல்ல அவனியில் நம் வாழ்வு உயர்ந்திடுமே! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன், வாலாஜாப்பேட்டை.

என் கருத்து விதைகள் எங்குமே சுதந்திரம் காணும் -பெ.தமிழ்ச்செல்வி.

Image
என் அம்மா என் ஐந்தரை அடி உயரத்திற்கு பக்குவமென்ற பதம் தந்தவள்! வாழ்க்கையின் அத்தனை  நெளிவு சுளிவுகளையும்  அறிய வைத்த குருவானவள்! சிறு வயதில் என்னுடைய மல ஜலம்/சளி/வாந்தி அகற்றியதில் முகம் சுளிக்காத தாதியானவள்! அவளின் மொத்த அன்பினையும் அணு அணுவாய் ரசிக்க மடி தந்தவள்! நகம் கடித்து/முகம் தடவி/முடி கோதி/ என்னை அள்ளியும் ஸ்பரிசித்து  அவளை ரசிக்க நளினமாக்கியவள்! பதவிகள் தகுதியாக /படிப்பு தந்து/ மகுடம் சூட /என்னை அழகுபடுத்தியவள்! என் எழுதுகோல் பல துறைகளில் உழுதுகோலாக தன்னம்பிக்கை உரம் தந்து மெருகேற்றியவள்! பருவத்தே சபலங்களில் சிக்கி சறுக்கிடாமலிருக்க /சாதுர்யமாக வழிகாட்டி /மிடுக்குடன் வாழ்வில் வளைய விட்டவள்! என் கருத்து விதைகள் எங்குமே சுதந்திரம் காணும் கழனியானவள்! என் மீதான அஸ்திரங்களை கிழித்தே/ ஜகத்து வஸ்திரமாக யோசித்தே/ நேர்த்தியாக்கிய தையலவள்! என் மிடுக்கான தலைமைப்பண்பு வளம்  வரும் நாற்றங்காலானவள்! என்னை பிறந்த வீட்டு ராணியாக/ புகுந்த வீட்டு தேனியாக  புடம் போட்டவள்! என் சிந்தனையின் முன்னேற்ற மணிகளின் அறுவடையில் முதல் ரசிகையானவள்! அலையென துன்பம் அடிக்கையில் தாங்கிடும...

அனிச்சப் பேச்சில் அனைவரும் ருசிக்க -பெ.தமிழ்ச்செல்வி.

Image
கலைப் பொக்கிஷம்  என்.எஸ்.கிருஷ்ணன் அதிராத வார்த்தைகளில் அகிலம் ரசிக்க நகைச்சுவை! அனிச்சப் பேச்சில் அனைவரும் ருசிக்க வில்லுப்பாட்டு! உற்சாகப் பார்வையில் உலகம் சீர்பட கதாகாலட்சேபம்! உளம் மகிழ்ந்து உதவுதலில் MGR க்கே வழிகாட்டிய கொடைவள்ளல்! தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின்! காந்திஜிக்கு நினைவுத்தூண் எழுப்பி மானுட இதயத்தில் நிலை கண்டவர்! சொல்லாடல் ஜதி மன்னன் புகழ் நடராஜா கல்வி கழக கல்வெட்டாகி கலைவாணர் பட்டமென மகுடமானது! எழுத்து மை வடிவ எழுதுதலில் தொடும் மைகளென.... பொறுமை/பொறாமை/தற்பெருமை/ பழமை/நேர்மை/புதுமை சொல்லி, தொடக் கூடாத மைகளென.... மடமை/கயமை/பொய்மை/ வேற்றுமைகளை உணர்த்தி, நீங்க வேண்டிய மைகளென... வறுமை/ஏழ்மையை எழுத்தாளர்களுக்காக எடுத்துரைத்த எண்ணம் நிறைந்தவர்! தீண்டாமை/மதுவை எதிர்த்து, நிலம் அனைவருக்குமான பங்கீடுடன் மாற்றாரை மதிக்கும் மனிதநேயம், எதிர்கால அறிவியல்/விஞ்ஞானம் கணித்து பாடலிலே வகுத்த ஞானியவர்! கலைஞரிடம் பற்றுடன் சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் தந்தவர்! பச்சையப்பன் கல்லூரி  மாணவரிடையே மகிழ்வில் நாயும் வாலாட்டும்...மனிதன் மட்டுமே நல்ல மனசிருந்து சிரிப்பவன் என பேசி சிரிப்...

அத்தனையும் நலமாகும் என உரைக்கும் சிம்ம மாதமிது -பெ.தமிழ்ச்செல்வி.

Image
ஆவணியும் சிறப்புகளும் ஆடி போக  ஆவணி வர அத்தனையும் நலமாகும் என உரைக்கும் சிம்ம மாதமிது! மாதங்களுக்கு அரசனென அர்த்தம் கொண்டு.... வேங்கை மாதமென சித்தர்களால் சிறப்புற அழைக்கப் பெறும் மாதம்! ஆவணி ஞாயிறில் சூரிய ஹோரை இருப்பாக.. ஆவணி பிறப்பு குழந்தை ஆன்மீக அறிவோடு வளரும்! தேச நலனுக்கு ஆவணி ஞாயிறு சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்திட நாட்டு நலம் செழிப்புடன் அமையும்! ஆவணி  கிரகப்பிரவேசம் கிரகலட்சுமியை நிரந்தர குடியிருப்பில் நிறுத்தி குடும்பத்தை நிலைப்படுத்தும் மாதம்! ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஆவணியில்... கண் போல பயிரை பாதுகாத்து, வேளாண் மக்கள் ஓய்வெடுக்கும் மாதம்! சஞ்சலமாகஇருந்த அர்ச்சுனனுக்கு ஆத்ம பலமளித்து கீதை உபதேசம் செய்திட கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினம்  வரும் பெருமை மிகு மாதம்! நெடிய உருவ திருவிக்கிரமன் மூவடி இடம் கேட்டு மகாபலிக்கு மோட்சம் அருள ஆவணி மாத  திருவோண நட்சத்திரத்தில் வாமன அவதாரம் எடுத்த மாதம்! காஞ்சி காமாட்சியின் தீர்த்தத்தில் ஆவணி மூலத்தில் நீராட புனிதனாக்கி/மோட்சம் கிட்ட பாதை காட்டும் மாதம்! இளையான்குடி நாயனார்/ குலச்சிறையார்/அதிபத்தர்/ திருநீலகண்டர் .......

குளிர் வாட்டிய மயிலுக்கு போர்வை வழங்கிய பேகனிடம் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பும் மனிதமும் அன்பே பிரதானமென கை கோர்த்து இது தான் நேசமென பறை சாற்றும் உளமுள்ள மனிதமே மகானாகும்! அன்பு மனிதமானது..... வழி தடுத்த முல்லைக்கு தேர் அளித்த வேள்பாரியிடம்! குளிர் வாட்டிய மயிலுக்கு போர்வை வழங்கிய பேகனிடம்! மூப்பின்றி நீள்நாள் வாழ ஔவைக்கு நெல்லி ஈந்த அதியமானிடம்! தாய்ப்பசு நீதி காண தேர்க்காலுக்கு மகனை வைத்த மனுநீதியிடம்! பன்றிக்கறி படைத்ததோடு சிவனுக்கு தன் கண் அப்பிய திண்ணனிடம்! புறாவின் எடைக்கு நிகராக பருந்துக்கு தன் சதை தந்த சிபியிடம்! மும்மாரி மழை கேட்டு ரங்கனுக்கு தன்னை அர்ப்பணித்த ஆண்டாளிடம்! மண்ணுயிர் காக்க தன்னுயிர் மறந்து சேவைகளாற்றும் மருத்துவர்/காவலர்/ செவிலியர்/துப்புரவாளரிடம்! தெருவோர தொழுநோயாளிகளை  அரவணைத்த தெரசாவிடம்! பசித்த வயிற்றுக்கு புசிக்க உணவளித்த வள்ளலாரிடம்! 6000 பள்ளிகள் திறந்து கல்விக்கண் திறந்த காமராசரிடம்! சுற்றம் ஒதுக்கிய குழந்தை/முதியோர் நெறிவாழ்வு காணும் இல்லங்களிடம்! விழிகளுக்குள் அன்பிருக்கும் வரை... இரக்கம்/கருணை/ஜீவகாருண்யம்/ பந்தம்/பாசம்/விசுவாசம்/காதல்/ பக்தி/அருள்/அபிமானம்...எனும் அத்தனை வடிவிலும் மனிதம் பரிணமிக்கும்! மானுடம்  வ...

பிரயாணம் எனும் சொல்லுக்கு செலவு எனும் பொருள் தந்தவர் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
வாழ்வின் இலக்கணமான திரு.வி.க! திரு.வி.கல்யாணசுந்தரனார்.... பழமையின் பிரதிநிதி....ஆனாலும் புதுமையின் சங்கநாதம்! கொச்சை சொல்/வசைக் குறிப்பற்ற தீஞ்சுவைப் பேச்சாளர்! மேடைப்பேச்சுக் கலையின் வித்தகர்! தேசபக்தன்/நவசக்தி  இதழ்களின் நாயகனாகி... 50 நூல்கள் படைத்த எழுத்துச்சிற்பி! தமிழ்மொழி வளர்ச்சிக்கு வித்தானவர்! படித்த அறிவாளி/ஏடறியாத் தொழிலாளர்களை கவர்ந்த  செழுந்தமிழ்ப் பாவலர்! இலக்கியம்/இலக்கணம்/அரசியல்/ சமயம்/சமரசம்....அனைத்தும் அடங்கிய மூன்றெழுத்தானவர்! தொட்டவற்றை பொன்னாக்கும் எழுத்தாளராக கோல்ட்ஸ்மித்தால் புகழ்மகுடம் கண்டவர்! மனைவி ஆறாண்டில் மரணம் காண மறுமணம் நாடாத உறுதியோடு.... பெண்ணின் பெருமை மதித்தவர்! சாந்தத்தின் வடிவமாகி, நல்லன கொண்டு தீயன விலக்கும் நோக்கம் தரித்தவர்! பிரயாணம் எனும் சொல்லுக்கு செலவு எனும் பொருள் தந்தவர்! திராவிடரும் காங்கிரசும்...அரசியல் கன்னிப் பேச்சுக்கு தலைப்பாக்கியவர்! தன் பெயர் முதல் ஈரெழுத்தை கல்கியின் பெயரில் தானமானவர்! தமிழனாகப் பிறந்து  இந்தியனாக வாழ்ந்த திரு.வி.க.வின் புகழ் தரணியிருக்கும் வரை  தளர்வு காணாமல் உலவிடும்! முனைவர்.பெ.தமிழ்ச்செல...

வாடிய பயிரைக் கண்டு வாடியது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பின் வழியது சைவக்குரவர் நால்வர் சித்தமெல்லாம் சிவமயமானது வசியமான அன்பு! இறைவனுக்கு தன் கண்ணை அப்பியது கண்ணப்பனின் திவ்யமான அன்பு! மறுபிறப்பிலும் மறவாதமனம் கேட்டது காரைக்காலம்மை பக்தியான அன்பு! 63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள் நெக்குருகியது சரணாகதியான அன்பு! செம்புலப்பெயல் நீரென நெஞ்சமானது குறுந்தொகை கண்ட காதலான அன்பு! உலக உயிர்கள் உய்ய மும்மாரி கேட்டது ஆண்டாளின் பரோபகரமான அன்பு! தனி மனிதனுக்கு உணவு மறுக்க /ஜகம் அழிவு பாரதியின் சூளுரையான அன்பு! வாடிய பயிரைக் கண்டு வாடியது வள்ளலாரின் வாஞ்சையான அன்பு! முல்லைக்கு தேர்/ஔவைக்கு கனி கடையேழுவள்ளலின் ஈகையான அன்பு! மானிணைவு கலையாமல் தேரோட்டும் கட்டளை அகநானூறின் விழும அன்பு! 100 புரிதல்/1000 போராட்டங்கள், ஒற்றை நம்பிக்கை/பல பேராசையோடு முகங்கள்/முகவரி தேவைப்படாத, அருகிலிருக்க உயிரது இயங்கி, தொலைவு காண என்புதோல் உடலாகி, இன்பம் மட்டும் கூட்டி/ இதய ராகம் மீட்டும் அன்பென்ற ஒரு எழுதுகோலால் வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்க முனைந்திடுவோம்! அன்பின் வழி கண்டு அதன் வழி நடக்கும் உத்வேகத்துடன்.... முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வா...

மழை தரும் சாறல் தரும் சுகமாக, நினைவுகளை அசை போடும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
இனி எல்லாம் சுகமே சீனா/இத்தாலி அதிபர்கள் கூட்டமே கூடாதென சொல்ல/அம்மக்கள் கேட்க/ கொரானா அங்கே கட்டுக்குள் அடங்கிட, தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள் செய்திட, ஏடிஎம் மைய தொடும் எண் பலகையை கிருமிநாசினியால் பாதுகாவலர் துடைக்க, குப்பை/கழிவுநீர் அகற்றி சுகாதாரம் காண, சாலையோர உணவகம் சுத்தம் பேண, புகையிலை/எச்சில் துப்புதல்/ மூக்கு சிந்துதலில் வாஷ்பேசின் துணையுடன் விழிப்புணர்வினை மக்கள் பெற்றிட, இருமல்/தும்மலில் வாய் பொத்திட, மருந்தகங்கள் இடைவெளி கடைபிடிக்க, முட்டை/இறைச்சி வேகவைத்து உண்ண/ வன விலங்கருகே பாதுகாப்புடன் செல்ல, ரூபாய் நோட்டு பிளவுஸுள் வைக்காத, அரசு பள்ளியில்.... விலை மதிப்பில்லா கல்வியை விலையில்லாமல் பெற்றிட, கொரானா முன்....புத்தகம்/நோட்டு/ அறுசுவை உணவு/நூலகம்/சீருடை/ மிதிவண்டி/முப்பருவ திட்டம்/வகுப்பறை/ கொரானா பின்.....ஆன்லைன் வகுப்பு/ மடிக்கணினி பாடம்/புத்தகம்/ அரிசியுடன் பருப்பு விநியோகம் ஆரோக்கிய சமுதாயம் இப்படி அமைந்திட, மழை தரும் சாறல் தரும் சுகமாக, நினைவுகளை அசை போடும் நிதர்சன சுகம் அமைய, யாதுமாகி தெரியும் இறைவனருளிலே இனி எல்லாம் சுகமே! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ...

கண் முன்னே தோன்றினாள் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
கலைச் சொற்களில் பெண் கண் முன்னே தோன்றினாள் என் நிஜமான கிழத்தி! அண்ணாந்து தான் பார்க்கணும் கரும்புல் உயரம் என் தேவதை! நான் துயர் படும் போது அவள் நுவல் எனக்கு மந்திரம்! இருப்போர்க்கும் இல்லாதவர்க்கும் தக்கடைப் போல நியாயம் தான்! கூட்டம் தான் எங்கும் கூடும் அவளின் கருத்து ஓர்ப்ப! பார்த்துக் கொண்டே இருக்கலாம் பிழம்பு....அழகோ அழகு பார்க்க பார்க்க சலிக்காது! குழலியின் மகிமை போல் பூஜைக்கு உகந்தவள்... கடவுளின் அம்சம் தான்! வண்ணம் கொண்ட பிடியலவள் அவளுக்கு நிகர் அவளே! பெரும் கும்பலின் மத்தியில் அவளோ என்றுமே தமி! சுற்றத்தார் அனைவரின்  நல்வாழ்விற்கு சூழ்வு செய்வாள்! இதுவரை எங்கும் நுகைதல் அவளிடத்தில் கண்டதில்லை...இனி காணப் போவதும் இல்லை! இப்படைப்புகளை கொண்ட இவளை சுளகத்தில் வைத்து கொண்டாடுவேன்! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை...632513. 9940739728.

ஓடுதலும்/குதித்தலும் ......நதிகளின் விடுதலை - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
விடுதலை யாருக்கும் அடிபணியாமல் கவிழ்தலும்/விடிதலும் .....வானத்தின் விடுதலை! யாரையும் உள்ளங்கையில் தாங்குவதும்/அதிர்வதும் .....நிலத்தின் விடுதலை! அலைகளால் கரையை நித்தமும் தொடுவதும்/விலகுவதும் .....கடலின் விடுதலை! யார் வந்தாலும் நிழல் தந்து பூப்பதும்/காய்ப்பதும் .......தாவரங்களின் விடுதலை! அருகம்புல்லில் அழகாக துயில்வதும்/கதிரவன் வர மறைவதும் ......பனித்துளிகளின் விடுதலை! ஓடுதலும்/குதித்தலும் ......நதிகளின் விடுதலை! அடங்குதலும்/உயர்தலும் .......குளம்/ஏரிகளின் விடுதலை! குவிதலும்/விரிதலும் .......பூவிதழ்களின் விடுதலை! கொல்லுதலும்/கொல்லப்படுதலும் .......மிருகங்களின் விடுதலை! சுயமாக சிந்தித்தலும் சிந்தித்ததை அச்சமின்றி வார்த்தைகளால் செயல்படுத்தலும் மனிதனுக்கான விடுதலை! ஆனால்..... சுயமாக சிந்திக்காத வரை மனிதா....! உனக்கும்/விடுதலைக்கும் இடைவெளி அதிகமே! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை....632513 9940739728

தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில் புரிதலும்/சமாதானமும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
இப்படி இருந்தால் எப்படி!? காலத்தோடு கண்விழித்து பள்ளி/கல்லூரி சென்று  பாடம் படித்து திறமை வெளிக்காட்டுவது கண்ணாமூச்சியாக மாறி காணொளி கல்வியாகி... காலங்கள் இப்படியிருந்தால் மேற்படிப்பு நீட் தேர்வுகள் எப்படியோ? நாட்டிலேயே 26 வது இடத்தில் குஜராத்தின் கல்வி நிலையிருக்க/ புதிய இந்தியா கனவு நிலை எப்படியென இப்படி ஒரு  கேள்வி கேட்கிறார் ராகுல்காந்தி! தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில் புரிதலும்/சமாதானமும் மறைந்து ஊடல்களும்/கூடல்களும்  இல்லாத நிலை வந்திடவே வசந்தமாகும் வாழ்விற்கு வழி எப்படி வரவேற்பாகும்? விமான ஓடுபாதை முடிந்து கட்டுக்குள் விமானம் வரும்   புல்பாதை பரப்பின் நியதி  கோழிக்கோட்டில் காலாவதியாக /19 பேரின் உயிர்ப்பலி இப்படித்தானே அமைந்திடும்! கன்னத்தில் அறைந்து சொல்லும் கொரானா பாடம் மறந்து இருசக்கரவாகனத்தில்  மாஸ்க் இன்றி மூவர் போக எப்படி மரணம்  வாசல் அழைப்புமணியை அடிக்காமல் போகும்? அரசாங்கம் தந்த வீடுநிரப்பு போராட்டம்/ வாழ்வாதாரம் 4 மாதங்களாக கேள்விக்குறி நிலைமையாக/ வயிற்றுக்குச் சோறிடல் எப்படியென ஆதங்கமான கோபம் இப்படியாகுமா? எதற்கும்/எவருக்கும் அஞ்சோமென ...

யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு உறவாடி -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அண்ணா இலக்கு யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு                                                   உறவாடி, வேர் விட்டு பரந்த தமிழின உணர்வு                                                        கிளறி, திக்கெங்கும் இனவிடுதலை உணர்வு                                                 எழச்செய்து, தேர்தல் வெற்றியாக அறுவடை                                                   செய்தவர்! தேர்தல் அரசியலை இலக்காக்கி, அடைய முடியாதென்ற திராவிட தேசிய                 ...

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்...

Image
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.   இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 28 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.   வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 863 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-   அமெரிக்கா       -  பாதிப்பு - 59,99,577, உயிரிழப்பு - 1,83,639, குணமடைந்தோர் - 32,96,299 பிரேசில்       -    பாதிப்பு - 37,22,004, உயிரிழப்பு - 1,17,756, குணமடைந்தோர் - 29,08,848 இந்தியா...

நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
சிவசக்தி லீலை தந்தை தட்சன் யாகத்திற்குச்  செல்ல பதி நுகல் கேட்க தவறினாள் சக்தி! தாய் வீடளித்த அலட்சியம் தக்கடையாக ...தவறுணர்ந்தாள்  சிவனின் இல்லக் கிழத்தி! தன் பேச்சு ஓர்ப்ப மறந்த மனைவி மன்னிப்பு கேட்டும் நுகைதல் காண மறந்தனன் கைலாசநாதன்! நெட்ட கரும்புல்லென மலைத்தே கணநேரம் பரமேஸ்வரி நின்றிட வாழ்வங்கே கேள்விக்குறியோடு சுளகம் நெல்லிக்கனியுமானது! குழலியணிந்தவன் தங்கையவள் சூலமேந்திய கணவனால்   தமியான வேதனை கொண்டாள்! நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன் நல்வாழ்வுக்கு சூழ்வு காண, பிழம்பின் அழகு சேர, எடுத்த கால் எடுப்பினில் ஜதி கூட, பிரளயம் அதிர ஆடுகிறாள்  யுகத்திற்கே தாயான ஜகதாம்பிகை! சிவதாண்டவம் அரங்கேற தட்சனின் செருக்கங்கே முக்கண்ணன் இரையானது! நமசிவாய! சிவாயநம! என ஓதும் கலைச்சொற்களுடன்... முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை....632513 9940739728.

இவர்களிடமெல்லாம்.... நாட்கள் மலர்வது சாத்தியம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பிற்கும் உண்டோ  அடைக்குந்தாழ்? அன்பு.... முரண்பாடுகளின் கதவுகளை                    யதார்த்தமாக திறக்கும்..... புத்துணர்வூட்ட உடலுள்                                 குருதியாக ஓடும்..... அன்பெனும் பிடியுள் அகப்படும்                மலையென வள்ளாலாரிடம்! அன்புடையோர் என்றும் உரியர்          பிறர்க்கெனும் வள்ளுவனிடம்! அடியார்க்கு நல்லமுது அளிக்கும்                                 திலகவதியிடம்! உணவில்லையேல் ஜகமழிக்கும்                                       பாரதியிடம்! கண் பெயர்த்து அப்பிய                                    திண்ணனி...