நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை.....கவிதாயினி தா. கவிசெல்வி.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbDS_IfzKvdmPUG2qp8zghm6gsTPKHM7_nP16v0KQCNab5hNlnsmAnOoZkYh5sdw8Rsnm-CCqiS4Q70qvuzeaCyxzHZuL0WMy1OnNkUSxpjbYoKwgWoBMI8q8sLuKvptjQYGKs_np30nM/s320/Untitled.jpg)
வா, வாழலாம்! எப்படியும் வாழ புலன்கள் புலம்பும் உடல் கலன்கள் அலம்பும் மனம் தளும்பும் அறிவு மழுங்கும் கிறுக்கல்கள் ஒழுங்க லானால் அழகு சித்திரம் புலன் சறுக்கல்கள் ஒழுங்க லானால் வாழ்வின் அத்திரம்! மனிதா உன் வாழ்க்கை பத்திரம்!! நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை நாதி மேல தேவை யில்லை ஓதுவது வாகையில்லை ஒழுகுவதோ என் வகை யில்லை என ஓடும் மனிதா உண்மையில் உனக்கு பதிலோ என்னிடமில்லை!! நானும் கண்ட தில்லை நீதி சொல்பவனை, நானும் கேட்ட தில்லை நல் தீர்ப்பு பெற்ற வனை, நானும் விண்ட தில்லை நாதி யுடனே சென்ற வனை, ஆனால், நான் அறிவேன் நீ யறிவாய் ஊர் அறியும் உல கறியும்! களை பிடுங்க கை களுண்டு என் பதனை!!! மரணம் யாரிடமும் மரணித்த தில்லை! மரணம் வரும் வழியி னமும் யாருக் கும் புலனித்த தில்லை!! எனில் நீதி சொல்ல? நல் தீர்ப்பு எழுத?? நாதிபேறு??? சிந்தி! - உன் அறிவை சிந்தி சிந்தி...