ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி போடும் நிகழ்வினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் நிமிலி வட்டம் புன்னை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் COVID Shield Vaccine துவக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அதிகப்படியாக 100 நபர்கள் வீதம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது 4300 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 750 வீதம் மூன்று இடங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது
இதில் முதற்கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது தனியார் மருத்துவமனை மற்றும் இதர தனியார் சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசி போட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
மொத்தம் 2200 சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் சுகாதார பணியாளர்கள் மருத்துவ பணியாளர் களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போட உள்ளது
இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் COVIN செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment