நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை.....கவிதாயினி தா. கவிசெல்வி.

வா, வாழலாம்!

 

எப்படியும் வாழ

புலன்கள் புலம்பும்

உடல்

கலன்கள் அலம்பும்

மனம் தளும்பும்

அறிவு மழுங்கும்

 

கிறுக்கல்கள்

ஒழுங்க லானால்

அழகு சித்திரம்

 

புலன் சறுக்கல்கள்

ஒழுங்க லானால்

வாழ்வின் அத்திரம்!

மனிதா உன்

வாழ்க்கை பத்திரம்!!

 

நீதி சொல்ல

யாரு மில்லை

தீர்ப்பு எழுதும்

பேரு மில்லை

நாதி மேல

தேவை யில்லை

ஓதுவது வாகையில்லை

ஒழுகுவதோ என்

வகை யில்லை என

ஓடும் மனிதா

உண்மையில் உனக்கு

பதிலோ என்னிடமில்லை!!

 

நானும்

கண்ட தில்லை

நீதி சொல்பவனை,

 

நானும்

கேட்ட தில்லை

நல் தீர்ப்பு

பெற்ற வனை,

 

நானும்

விண்ட தில்லை

நாதி யுடனே

சென்ற வனை,

 

ஆனால்,

நான் அறிவேன்

நீ யறிவாய்

ஊர் அறியும்

உல கறியும்!

 

களை பிடுங்க

கை களுண்டு

என் பதனை!!!

 

மரணம் யாரிடமும்

மரணித்த தில்லை!

மரணம் வரும்

வழியி னமும்

யாருக்  கும்

புலனித்த தில்லை!!

 

எனில்

நீதி சொல்ல?

நல் தீர்ப்பு எழுத??

நாதிபேறு???

 

சிந்தி! - உன்

அறிவை சிந்தி

சிந்தி!

கிடைத் திடும்

விடையாக தந்தி!

 

ஒழுக்கம் பேணி

வாழ்ந்து பார்

ஒழுங் காகும்

உன் பாதை!

 

ஒழுக்கம் பேணி

வாழ்ந்து பார்

எச்சபை யுள்ளும்

மருந் தாகும்

உன் வார்த்தை!

 

ஒழுக்கம் பேணி

வாழ்ந்து பார்

தீச் சுவாலையிடும்

உன் பார்வை!

 

எரியும் தீ

நடுவே நீ

நின்றால்

எட்டிப் பிடிக்க

எவரும் முயலார்!

 

சுட்டு விடும் தீ!!??

உன்னை யல்ல,

சுற்றி வரும்

புழுதி களை!

 

சுண்டி விடும்

இத் தீ!

உன் மீதெறியும்

கணை களை!

கற் களை!

 

ஒழுக் கத்தில்

ஒழுகு வோருக்கு

ஜோதி யாம்

அத் தீ!

 

மழுப் பியே

நெருங்கு வோருக்கு

சுவாலை யாம்

அத் தீ!

 

சோதனை களும்

வேதனை களும்

உன் ஜோதி மேல்

மா கணைகள் வீசும்

சுடு நீர்சுனைகள்

வார்க் கும்!

 

நீரை சுண்டி

இழுக்கும் - தீச்

சுவாலை யாகு!

நீரில் மண்டி

இட்டிடும் - தீத்

திவலை யாகாதே.

 

கால மெனும்

கால னின்

மாயக் கானல் ஒழுக்கத்தின்

கரை களை

மறைக் கலாம்

குறைக் கலாம்

 

அதன்

கல் லறைக்கு

மணலை வாரி

இறைக் கலாம்!

ஆனால் அதன்

கரு வறையை

கரைக்க முடியாது!

 

கள்ள சாவிக்கும்

பூட்டு திறக்கும;

பூட்டுக் கென்றே

உள்ள சாவிக்கும்

பூட்டு திறக்கும்;

தன் தலைமேல்

கொல்லும் பாவிக்கும்

பூட்டு திறக்கும்;!!

 

விசயம்…,

திறந் தோம்

என்ப தல்ல

எப்படி திறந்தோம்

என்ப தே!!!

 

வாழ்க்கை

வாழ்ந் தோம்

என்ப தல்ல

எப்படி வாழ்ந்தோம்

என்ப தே!!!

 

பூட்டும் பத்திரம்

சாவியும் பத்திரம்!

வாழ்வும் பத்திரம்

வாழ்க்கையும் பத்திரம்!

இதுவே

நமக் கான அத்திரம்;

 

"நான்" வாழ

எனும் கை

பாவக் கை!

 

நீ வாழ

எனும் கை

தவக் கை!

 

நாம் வாழ

எனும் கை

புனிதக் கை!

 

நானும் வாழ

எனும் கை

மனிதக் கை!

 

புனிதக் கைகள்

புத்தகைக் குள்ளே

ஏறி டலாம்!

 

மா மனிதன்

ஆக லாம்!

மகா புனிதன்

ஆக லாம்!

புத்த கத்தில்

புதை யலாம்!

புத்த ராக

புழங் கலாம்!!

 

நாம்

அவ் வளவாய்

ஆக வேண்டாம்!

அணு வளவாய்

மாற லாகலாம்!

 

சக மனிதனாகலாம்

சந்ததிகள் வாழ

கணி தனாகலாம்!

நம் சந்த சுழிகளை

உட்புகுத்தி - ஒரு

இனித னாகலாம்!

 

நான் வாழ

என்பதா வாழ்க்கை?

நானும் வாழ

என்பதே உண்மை

யாக்கை!

அதுதான்  வாழ்வின்

தூண்டுகை!

அதுவே மனிதத்

தீண்டுகை!!

 

ஒழுக்க நீதி

பாதையை மனதில்

ஏற்போம்!

விழுப்ப மீதி

பாதையை துரிந்து

கடப்போம்!

 

அங்கே

ஆண் பெண்

பேதமில்லை

ஏழை பணக்காரன்

வாதமில்லை

தக்கார் தகவிலார் சேதமில்லை

இசையன் வசையன்

ஓத மில்லை

அதிகாரம் அடித்தளம்

ஏது மில்லை

 

வா, வாழலாம்

ஒழுக்க நீதிப்

பாதையில் ஏறலாம்!

 

இவள்











கவிதாயினி தா. கவிசெல்வி

M.A(his&eng).,B.A(Hindi).,B.ed., M.phil(his).

பட்டதாரி ஆசிரியர்

ஊ.ஒ.ந.நி.பள்ளி.,

மருதவல்லிப்பாளையம்

அணைக்கட்டு வட்டம்

வேலூர் மாவட்டம்.

 

 


 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.