விருட்ச தேவதையே சுபிட்ச மேதகையே....கவிதாயினி தா. கவிசெல்வி.
விருட்ச தேவதை
சிலை மேனி
சித்தி ரத்தில்
இலை தேனி
பத்தி ரத்தில்
உறங்கும்
உயிர் ஏணியே
உல காணியே!..
கிளை தாங்கி
எத் தணிக்க
உயிர் கூடு
தித் திணிக்க
உதவிய
உர மேடே
கர வீடே!..
காற் றோடு
கை சேர்த்து
பாட் டோடு
கிளை யாட
ஊற் றோடும்
உன் அன்பில்
உயிர் கூடு
ஊஞ் சலாட
பூக் கூட்டம்
அதி லாட
தேன் மூட்டம்
விழி மூட
வான் முட்டும்
வழி ஓட
கார் சொட்டும்
மொழி பாட!
குடை யாய்
விரிந் தாலும்
அடை யாய்
வரிந் தாலும்
ஒற்றை
சடை யாய்
நின் றாலும்
மடை யாய்
மன தினிலே
விருட்ச தேவதையே!
சுபிட்ச மேதகையே!..
பச்சை யிலே
உர மூட்டி
நீ
தச்ச இலை
தழை யாக
இச்சை யிலே
தேன் கூட்டி
நீ
வச்ச கனி
மிச்ச மாக
உயி ரின்
எச்ச மாக
மிச்ச தண்டு
கிளை யெல்லாம்
நிழலின் பட்சமாக
வகை யூட்ட
வீட்டில் சட்டமாக
தொகை கூட்ட
மொத்தத் தையும்
நீ தந்து
உலகின் விட்டமாக
நின்ற தென்ன?
சாலையிலே
இரு மருங்கும்
சோலை யென
இருந்த தென்ன?
நன்றி கெட்ட
கூழை யிலே
நட்டு வச்ச
செடி இப்போ
கன்றி கெட்ட
பாழை யாய்
ஒட்டு பிட்டு
போன தென்ன?
உச்சி முடி
போட்ட தென்னையும்
மெச்சி பூ
வேய்த்த பனையும்
கொத்து முடி
சேர்த்த மாவும்
ஒற்றை இலை
வார்த்த வாழையும்
வீடு தோறும்
நின்ற தெல்லாம்
விட்ட கதை
ஆயிடுச்சு!
மிச்ச கதை
போயிடுச்சு!
உம்மை
நிலந் தோறும்
கண்ட தெல்லாம்
நீர்த்த கதை
ஆயிடுச்சு!
நெஞ்சை
ஈர்த்த கதை
போயிடுச்சு!
கொத்து கொத்து
மயிற்கொன்றை
கொட்டி கொட்டி
ஆடை யிலே
கொக்கி போட்டு
இழுத்த தென்ன?
பூத்து பூத்து
புன்னை களும்
தட்டி தட்டி
அசைகை யிலே
சொக்கி சொங்கி
நாம்
இளைத்த தென்ன?
நிழலுக் குள்ளே
நின்று கொண்ட
அருகம் புல்லு
கூட்ட மெல்லாம்
அடை அடையாய்
பூத்துக் கொண்டு
சிரித்த கதை
என்னாச்சு?
துவி விட்ட
தூரிகை யின்
வண்ண மெல்லாம்
தூறி விட்ட
தாரகை யின்
புள்ளிகளாய்
அலங் கரிச்சு
அசைந்த அழகு
பூக்க ளெல்லாம்
அழிந்து போன
கதை யாகிடுச்சு!
முக்கிய நகரங்கூட
மூச்சு முட்டி
போகிற தாம்!!
கக்கிய நரகமெல்லாம்
வெச்சு செஞ்சு
பார்க் கிறதாம்!!!
வேம்பு சிகரங்களை
வெச்சு தட்டி
வளர்த் தாக்கா
மூச்ச கூட
தச்சுக் கலாம்
முடிச்சு போட்டு
வச்சுக் கலாம்!
வேலி போட்டு
நெய்ஞ்சுக்
கலாம்!
உயிரை பாத்தி
கட்டி நட்டுக்கலாம்
உரமாய் ஊற்று
கொட்டி மெச்சுக்கலாம்!
முற்றி நின்ற
புளிய மரமெல்லாம்
முட்டு தென்று
முறிச்சுட்
டாங்க!!
தார் மேட்டை
தரிச்சுட் டாங்க!
எத்தனையோ
வழி வச்சு
அத்தனையும்
வழிஞ் சிடுச்சு
வழிச் சுடுச்சு!
வாழும் வழி
மறிக் கையிலே
அந்த வழி
இந்த வழி
எந்த வழி
இருந் தென்ன?
வந்த வழி
மறந் தென்ன?
வீடு கட்ட நிலமா?
ஓரங் கட்டு
உயிர்க் கூடு
கட்ட நிலம்
வாங்க
தீரங் கட்டு
காணி நிலமா?
தோணி வீடும்
கேணி மரமுமாக
பேணி நின்றால்
காணியும் உலகின்
அச் சாணியாகுமே!
விருட்ச நிழலில் நிற்பவள்,
கவிதாயினி தா. கவிசெல்வி
M.A(his&eng).,B.A(Hindi).,B.ed., M.phil(his).
பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி.,
மருதவல்லிப்பாளையம்
அணைக்கட்டு வட்டம்
வேலூர் மாவட்டம்.
Comments
Post a Comment