ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா.
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், மாநில துணை தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 8 மாதமாக அன்னதானம் வழங்கி வந்த நிலையில் 9ம் மாத முதல் நிகழ்ச்சியாக காலை சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது. மரக்கன்றுகள், முககவசம் வழங்கபட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிரஸ்டின் கௌரவதலைவர் முத்துவேல், மாநில மகளிர் அணி தவைவி கீதாசுந்தர், மாநில துணை செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சி, மரக்கன்றுகள், முககவசம் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர். அதை தொடர்ந்து ஷர்மி கண் கிளினிக் மருத்துவர் பரத் அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினரால் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அதன் தொடர்ச்சியாக சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர். சீனிவாசன் அவர்களின் மகன் ஹரிஷ் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து என்.எஸ்.கீதா கிளினிக் மருத்துவர் பிரவீண்குமார் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினரும் மற்றும் மகாலட்சுமி மெடிக்கல் உரிமையாளர் சேட்டு அவர்களின் தலைமையில் மருந்தாளுனர் கொண்ட குழுவினரால் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பொதுநல சிகிச்சை முகாம் நடைபெற்றது. இறுதியில் டிரஸ்ட் நிர்வாகிகள் பூகடை பாபு, பூகடை பார்த்திபன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment