Posts

Showing posts from January, 2021

ஒரு நிமிடத்தில் ஆயிரத்து நூறு மரக்கன்றுகள்...உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Image
  "My Di" என்கிற அமைப்பின் மூலம் உயிர் ஆயிரம் திட்டத்தின் கீழ் ஒரு நிமிடங்களில் 1152 மரக்கன்றுகள் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்த 570 தன்னார்வலர்கள் இணைய வழியில் இணைந்து நடப்பட்டது. ஒரே நிமிடத்தில் நடப்பட்டதால் இது சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட வன அதிகாரி திரு.பார்கதேவ் அவர்கள் துவக்கி வைத்தனர். ஈனோச்தாமஸ்  தலைமை  ஒருங்கிணைப்பாளர் உயிர் ஆயிரம்  இயக்குனர்  MYDI APP

வேலூர் ரெட்கிராஸ் சார்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...

Image
  வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் ரெட்கிராஸ் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.  இணை இயக்குனர் சுரேஷ்  பொது சுகாதாரம் அவர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் மாநகர நல அலுவலர் சித்திரசேனா அவர்கள்  உடன் இருந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி....

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில்  (18.01.2021) காவலர்கள் தங்களின் கட்டுடலை பேணிப்பாதுகாத்து உடற்பயிற்சி செய்யும் விதத்தில் வாலாஜா காவல் நிலைய காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் அவர்கள் துவக்கி வைத்தார்.  இவ்விழாவில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி K.T. பூரணி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் பாலு, காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக்கொண்டனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா.

Image
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 9ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், மாநில துணை தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 8 மாதமாக அன்னதானம் வழங்கி வந்த நிலையில் 9ம் மாத முதல் நிகழ்ச்சியாக  காலை சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.  மரக்கன்றுகள், முககவசம் வழங்கபட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிரஸ்டின் கௌரவதலைவர் முத்துவேல், மாநில மகளிர் அணி தவைவி கீதாசுந்தர், மாநில துணை செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சி,  மரக்கன்றுகள், முககவசம் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர். அதை தொடர்ந்து ஷர்மி கண் கிளினிக் மருத்துவர் பரத் அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினரால் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அதன் தொடர்ச்சியாக சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நி...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி ...

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் COVID-19 முதல் கட்ட தடுப்பூசி போடும்  நிகழ்வினை  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் நிமிலி வட்டம்  புன்னை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் COVID Shield Vaccine துவக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் அதிகப்படியாக 100 நபர்கள் வீதம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது 4300 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 750 வீதம் மூன்று இடங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது இதில் முதற்கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது தனியார் மருத்துவமனை மற்றும் இதர தனியார் சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசி போட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மொத்தம் 2200 சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் சுகாதார பணியாளர்கள் மருத்துவ பணியாளர் களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போட உள்ளது இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் COVIN செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் சரக "'டி.ஐ.ஜி, எஸ்பி.ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்பு.

Image
வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் அலுவலகம் முன்பு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி.காமினி இ.கா.ப அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்,இ.கா.பா, ஆகியோர் தலைமையில் பொங்கள் விழா நடைபெற்றது. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் மதிவாணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விநாயகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

வேலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம்.

Image
வேலூர் உட்கோட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் தலைமையில் சத்துவாச்சாரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செக்யூரிட்டிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் எஸ்.பி.கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.

Image
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்,இ.கா.ப. அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள்  மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுடனும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை  வெகுசிறப்பாக கொண்டானர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு தலா 2500 ரூபாய் வழங்கிய பொது எடுத்த படம்...

Image
தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி   தமிழக அரசு சரபாக குடும்ப அட்டைக்கு தலா  2500 ரூபாயும் கரும்பும் சக்கரையும் வழங்கிய வேலூர் மாவட்டம் அழுமேலுமங்காபுரம் ரேஷன் கடையில் குடுத்த பொது எடுத்த படம்.

வேலூரில் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் ச. இலக்குமிபதி அவர்களுக்கு பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

Image
தமிழக அரசு விருது பெற்ற வேலூர் கவிஞர் ச. இலக்குமிபதி  அய்யா அவர்களை வேலூர் நண்பன் சார்பாக  மேலும் பல விருதுகளை பெற்று வாழ வாழ்த்துகிறோம் .

மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம்

Image
வேலூர் நேத்தாஜ் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் மண்டலம். இரண்டாம் மண்டலத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்த தொகை ரூபாய் -3700.

இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்...

Image
இன்று காலை வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது, முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது, அபராதம் கட்டாத வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது...

Image
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் உத்தரவு பேரில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்று காலை  குரூப்-1 தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது, மேலும் தேர்வு எழுதப் படும் அறைகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, தேர்வு எழுத வரும் நபர்களை காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பப்பட்டது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு  முக கவசம் அணிந்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை.....கவிதாயினி தா. கவிசெல்வி.

Image
வா, வாழலாம்!   எப்படியும் வாழ புலன்கள் புலம்பும் உடல் கலன்கள் அலம்பும் மனம் தளும்பும் அறிவு மழுங்கும்   கிறுக்கல்கள் ஒழுங்க லானால் அழகு சித்திரம்   புலன் சறுக்கல்கள் ஒழுங்க லானால் வாழ்வின் அத்திரம்! மனிதா உன் வாழ்க்கை பத்திரம்!!   நீதி சொல்ல யாரு மில்லை தீர்ப்பு எழுதும் பேரு மில்லை நாதி மேல தேவை யில்லை ஓதுவது வாகையில்லை ஒழுகுவதோ என் வகை யில்லை என ஓடும் மனிதா உண்மையில் உனக்கு பதிலோ என்னிடமில்லை!!   நானும் கண்ட தில்லை நீதி சொல்பவனை,   நானும் கேட்ட தில்லை நல் தீர்ப்பு பெற்ற வனை,   நானும் விண்ட தில்லை நாதி யுடனே சென்ற வனை,   ஆனால், நான் அறிவேன் நீ யறிவாய் ஊர் அறியும் உல கறியும்!   களை பிடுங்க கை களுண்டு என் பதனை!!!   மரணம் யாரிடமும் மரணித்த தில்லை! மரணம் வரும் வழியி னமும் யாருக்   கும் புலனித்த தில்லை!!   எனில் நீதி சொல்ல? நல் தீர்ப்பு எழுத?? நாதிபேறு???   சிந்தி! - உன் அறிவை சிந்தி சிந்தி...