கியாஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

அ.தி.மு.க.வினர் பதவியை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்று செயல்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு இந்தி திணிப்பு, நீட் தேர்வு கொண்டு வந்த போதும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த போதும் அதனை ஏற்று வரவேற்கின்றனர். மத்திய அரசை எதிர்த்து எழக்கூடிய முதல் குரல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரல்தான்.


மக்களுக்கு துரோகம்:

மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியது. அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள். எதையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாக மத்திய அரசு உள்ளது. அவர்களுக்கு அடிமைகளாக அ.தி.மு.க அரசு உள்ளது. 2 பேரும் போட்டி போட்டுக் கொண்டு நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் சம்பவம் ஆகியவற்றை மூடி மறைக்க துடிக்கும் முதல்-அமைச்சர்தான் தற்போது உள்ள முதல்-அமைச்சர். மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டு இருப்பவர்கள் தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.


போராட்டம் தொடரும்:

கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று சிந்திக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும்.


தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி் உருவாகும். அந்த ஆட்சி தலையாட்டி பொம்மையாக இருக்காது. 

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் விஜயகுமாரி, மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பேட்டி:

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் பிரசாரத்தை சேலம் தொகுதியில் தொடங்கினேன். தி.மு.க.வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. மக்கள் அ.தி.மு.க ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று காத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசு பொங்கல் பரிசு ரூ.2,500 அறிவித்து இருப்பது குறித்து பா.ஜனதா துணை தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது, அவர்கள் கூட்டணிக்குள் உள்ள விஷயம். அதற்குள் நாங்கள் போக விரும்பவில்லை. விலைவாசி அதிகரித்து உள்ளது. யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. ஊரடங்கால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பொங்கல் பரிசாக ரூ.2,500 மட்டுமே அ.தி.மு.க. அரசு அறிவித்து உள்ளது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குடும்பத்துக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

பா.ஜனதா கட்சி துணை தலைவர் அண்ணாமலை தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு தூங்குவதாக கூறுகிறார். முதலில் நாடாளுமன்றத்தை ஜனநாயக முறைப்படி நடத்த சொல்லுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.