தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்...

மதுரை:

தென் மேற்கு ரெயில்வே, பயணிகளின் வசதிக்காக மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரெயில் சேவையை கால நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வ.எண்.06236) அடுத்த மாதம் 30-ந்தேதி வரையிலும், மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரெயில் (வ.எண்.06235) அடுத்த மாதம் 31-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ரெயில்களின் நேர அட்டவணையில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக 6.35 மணிக்கு புறப்படும். மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கு புறப்படும். விருதுநகரில் இருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், மணியாச்சியில் இருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக 10 மணிக்கும் புறப்படும். இந்த ரெயில் தூத்துக்குடிக்கு காலை 11.10 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும். மணியாச்சியில் இருந்து மாலை 5.02 மணிக்கும், கோவில்பட்டியில் இருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கும், விருதுநகரில் இருந்து மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும். திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும். எனவே, பயணிகள் நாளை முதல் மாற்றப்பட்டுள்ள நேரத்தை கணக்கிட்டு உரிய ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.