பணிநிறைவு பெற்ற பெல் நண்பர்களுக்கு பாராட்டு...
இவ்விழாவிற்கு துணை பொது மேலாளர் எம்.தேசிகன் தலைமை தாங்கினார். முன்னதாக ஓய்வுபெற்ற துணை பொது மோலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி.ரத்தினம் வரவேற்று பேசினார்.
பெல் நண்பர்கள் சங்க தலைவர் சி.மனோஜ்குமார் முன்னிலை வகித்தார்.
மேற்பார்வையாளராக பணியாற்றி பணிநிறைவுபெற்ற ஆர்.கண்ணன், முதுநிலை பொறியாளர்கள் ஜி.ராஜகோபால், ஜெ.குப்பன், தொழில்நுட்ப வல்லுனர் ஜி.பஞ்சாட்சரம், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை ஜனார்த்தனன், கலச.ராமலிங்கம் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
பெல் துணை பொது மேலாளர் நாகராஜ், சுரேஷ்குமார், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.வி.கோபாலாச்சாரி, மக்கள் நெஞ்சம் ஆசிரியர் கலச.இராமலிங்கம், சந்திரசேகராச்சாரி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் ஆர்.ஜி.நாகலிங்கம் நன்றி கூறினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் ஜி.ரத்தினம் உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
தொகுப்பு: செ.நா.ஜனார்த்தனன், ஆலோசகர், 9443345667)
Comments
Post a Comment