80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு ...
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் - உமேஷ் சின்ஹா.
தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது.
உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.
ஒரேகட்டமாகதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும்.
வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்.
Comments
Post a Comment