நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீடு இராணிப்பேட்டை மாணாக்கள் முதல்வருக்கு புகழாரம்...
இராணிப்பேட்டை மாவட்டம்.
பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, ஏழை, எளிய மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பின் கனவை நனவாக்கி,மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் என மாணாக்கள் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, சீருடைகள், பாடபுத்தகம், நோட்டுகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட அனைத்தையும் விலையில்லாமல் வழங்கினார்கள்
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.
அதுபோல, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவபிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையை 29 அக்டோபர் 2020 அன்று வெளியிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் மருத்துவ படிப்பிற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு ஆணையின்படி, அரசு பள்ளியில் படித்த கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேபிவு - நீட் - கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவபிகளுக்கு போதுமான மருத்துவ கல்விக்கு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் 6-ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேபிவில் தேபிச்சி பெற்ற மாணவபிகளுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடபி நலப் பள்ளிகள், பழங்குடியினபி நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக கருதப்படும். பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழே தனியாபி பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தவபிகளும் அரசுப் பள்ளியில் படித்தவபிகளாகக் கருதப்படுவார்கள்.
இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும்.
இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவபிகள் போட்டியிடலாம் என்றும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டின் அரசு பள்ளி ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாகும் வகையில் அமைந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டையை சேர்ந்த மாணவி ஆர்.கிருத்திகா, தெரிவித்ததாவது.
என் சிறு வயதிலேயே எனது அப்பா காலமாகிவிட்டார்கள். எனது அம்மா ஒரு மாற்றுத்திறனாளி. என் தாத்தா தான் என்னை படிக்க வைத்தார்கள். எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்து வந்தது. ஆனால் மருத்துவ படிப்பு என்பது நம்மை போன்ற ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு வெறும் கனவு தான் என்று தெரிவித்தார்கள்.
என்னை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு நீட்தேர்விற்கான புத்தகங்களையும், படிப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார்கள். அவர்களின் உதவியுடன் 12-ம் வகுப்பு முடித்தவுடன், தொடர்ந்து நீட் தேர்வு எழுதினேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை. தற்பொழுது நான் நீட் தேர்வில் 474 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். இருந்தாலும் எனக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சம் இருந்தது.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேபிவில் தேர்ச்சி பெற்ற மாணக்களுக்கு எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டார்கள்.
என்னைப் போன்ற மருத்துவ சேவைபுரிய ஆர்வமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில், இதுபோன்ற திட்டங்களை வழங்கி, எங்களின் எதிர்காலத்தை வளமாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஜெ.நர்மதா, தெரிவித்ததாவது,
நான் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்றேன். எனது அப்பா நெசவு தொழில் செய்து வருகிறார். எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். ஏழ்மையான குடும்பம் என்பதால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறுமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேபிவு - நீட் - கட்டாயமாக்கப்பட்ட நிலையில், எனது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும், எனது அம்மா மற்றும் தோழிகள் அளித்த ஊக்கத்தினாலும், தேர்வு எழுதினேன். தற்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி, நீட் தேர்வில் 212 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எங்களை போன்ற ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் என்ற மிகப்பெரிய கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஏ.மாலதி, தெரிவித்ததாவது,
நான் கலவையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்றேன். என் அப்பா, அம்மா கூலி வேலை செய்து வருகிறார்கள். எனக்கு சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. எங்களின் குடும்ப சூழ்நிலையினாலும் மருத்துவ படிப்பு என்பது எனக்கு எட்டாக்கனியாக இருந்தது.
தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
எங்களை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு ஆணையினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றிகடன்பட்டவராக இருப்பேன் என தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களும் சிறந்த கல்வியாளர்களாகவும், வல்லுநர்களாகவும் திகழ எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவ, மாணவியர்கள் என்றென்றும் நன்றிகடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் அய்ய்யமில்லை.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment