இராணிப்பேட்டை மாவட்டம். பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, ஏழை, எளிய மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பின் கனவை நனவாக்கி,மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் என மாணாக்கள் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, சீருடைகள், பாடபுத்தகம், நோட்டுகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட அனைத்தையும் விலையில்லாமல் வழங்கினார்கள் “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும். அதுபோல, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மருத...