ஹிட் அடித்த முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிரிக்க முடியாதது, தீபாவளியும், புதுப்படமும் என சொல்லலாம்... தீபாவளி புது படங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு  அளவே இருக்காது ஆனால், இந்த வருடம் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாவது சந்தேகமே... 


 

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதுப்பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களையும் மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் சிவாஜி, கமலின் பாபநாசம், அஜித்தின் விஸ்வாசம், விஜயின் மெர்சல், தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களும் தீபாவளி சிறப்பாக மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளது.

 

இதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, துல்கர் சல்மானின் கண்ணும், கண்ணு​ம் கொள்ளையடித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் நாளை முதல் திரையிடப்பட உள்ளன. 

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.