கிரானைட் குவாரி அமைப்பதற்கான டெண்டர்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் எம்.பி. செல்வக்குமார், கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்க துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அதை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட மாநில அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும், ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்க கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments
Post a Comment