வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் வீசும் 20,000 விதைபந்துகள்...
வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் பசுமையான சூழல் மற்றும் மழை பொழிவை அதிகரிக்கும் நோக்கில் 20,000 விதைபந்துகள் தயாரிக்கப்பட்டது.
அதனை மலைகளில் வீசும் நிகழ்ச்சியின் தொடக்கமாக வேலூர் பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வேலூர் மாவட்டம் முழுவதும் மலைகளில் 20,000 விதைபந்துகள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் சப்-கலெக்டர் திரு.ஷேக் மன்சூர், வேலூர் சப்-கலெக்டர் திரு.கணேஷ், வேலூர் தனி வட்டாச்சியர் திரு.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு மலைகளில் விதைபந்துகள் வீசி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment