முதன் முறையாக நமது முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம்...
நமது முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம் முதன் முறையாக 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டது அன்று முதல் இன்று வரை வீர நடை போட்டு வருகின்றது பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளை நேரில் அனுகியும் கடிதங்கள் மூலமாகவும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னையில் தமிழக அரசின் மூலமாக 2015 ஆம் ஆண்டு 28 ஏக்கர் நிலம் பெறப்பட்டுSector Head quarter (SHQ B. S. F) தளம் அமைக்கப்பட்டது. இந்த கேன்டீன் வாயிலாக தமிழகத்தின் அனைத்து B. S. F. படையினரும் அனைத்து மாவட்டங்களில் இருந்து பயன்பெற்று வருகின்றனர்.
சங்கத் தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து நமது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அணுகி மூன்று ஏக்கர் நிலம் பெற்று அதில் வீட்டுமனைகள் B.S.F. நகர் உருவாக்கப்பட்டது தமிழகத்திலேயே முதல் முறையாக நமது சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நமது நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு நமது பல்வேறு கோரிக்கைகளை பரிந்துரை செய்துள்ளார் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
20.02.2020 அன்று விதவைமார்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது அதன்மூலம் சில விதைவைமார்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துணை ராணுவ படை வீரர்களின் ஏக்கத்தினை போக்குவதற்காக இன்றைய தினம் நலவாரிய கேன்டினை திறந்து வைத்து துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைத்துள் ளார்.
இதன் மூலமாக வேலூர் மாவட்டத்தை சுற்றி உள்ள அனைத்து மாவட்டங்களை சார்ந்த சுமார் 10,000 துணை ராணுவப் படை வீரர்கள் பயன்பெறுவார்கள் இந்த பெருமை அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையே சாரும்.
இப்படிக்கு மாநில தலைவர் சீனிவாசன், தர்மன், கோவிந்தசாமி, காந்தராஜ், ஜெயராமன், பால் ரத்தினசாமி, கணேசன், விவேக் ராஜேந்திரன், வெங்கடேசன் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment