Posts

Showing posts from November, 2020

2021-ல் அரசு வேலை கருடா பயிற்சி மையம்...

Image
 

நிவர் புயலால் சேண்பாக்கம் பகுதிகளில் 200 பேருக்கு தினேஷ் சரவணன் இரவு உணவு வழங்கினார் ...

Image
நிவர் புயலால் வேலூர் மாநகரம் சேண்பாக்கம் இந்திரா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் தங்கியிருக்கின்றனர்.  அங்குள்ள 200 பேருக்கும் இரவு உணவாக சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம் பரிமாறப்பட்டது. 

வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நட்ட பனை விதைகள்.

Image
 வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் நாங்கள் நட்ட பனை விதைகள் நன்கு வளர்ந்து வருவதை இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த பரிசாகவே கருதுகிறோம். கொரோனா சூழ்நிலையிலும் இந்த வருடம் மட்டும் 10,000 பனை விதைகள் வேலூர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் பலருக்கு அவர்களின் இடங்களில் பனை விதை நட விதைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு விருதை CMC மருத்துவமனைக்கு வழங்கியது.

Image
தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு TRANSTAN  இன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், 2019 -2020 ஆண்டிற்கான சிறந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான விருதை  CMC மருத்துவமனைக்கு வழங்கியது. இந்த நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மாத்யூ கலந்துகொண்டு விருதை பெற்றார்.

அமெரிக்காவின் ஸடான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலூர் CMC யை சார்ந்த மருத்துவர்கள்.

Image
  அமெரிக்காவின் ஸடான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலூர் CMC யை சார்ந்த மருத்துவர்கள். உலக அளவில் அவர்கள் ரான்கிங் குறிப்பிடப்பட்டுள்ளது

பாதுகாப்பு படையில் சேருவதற்கான சிறந்த பயிற்சி மையம்...

Image
மாணவ மாணவிகள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருடா பயிற்சி மையம் வெற்றியே எங்கள் லட்சியம்.

Image
 

முதன் முறையாக நமது முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம்...

Image
நமது முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம் முதன் முறையாக 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டது அன்று முதல் இன்று வரை வீர நடை போட்டு வருகின்றது பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளை நேரில் அனுகியும் கடிதங்கள் மூலமாகவும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னையில் தமிழக அரசின் மூலமாக 2015 ஆம் ஆண்டு 28 ஏக்கர் நிலம் பெறப்பட்டுSector Head quarter (SHQ B. S. F) தளம் அமைக்கப்பட்டது. இந்த கேன்டீன் வாயிலாக தமிழகத்தின் அனைத்து B. S. F. படையினரும் அனைத்து மாவட்டங்களில் இருந்து பயன்பெற்று வருகின்றனர். சங்கத் தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து நமது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அணுகி மூன்று ஏக்கர் நிலம் பெற்று அதில் வீட்டுமனைகள் B.S.F. நகர் உருவாக்கப்பட்டது தமிழகத்திலேயே முதல் முறையாக நமது சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நமது நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு நமது பல்வேறு கோரிக்கைகளை பரிந்துரை செய்துள்ளார் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. 20.02.2020 அன்று விதவைமார்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் நமது மாவட்ட ஆட...

திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில்...

Image
8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனிடையே கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் கள பணியாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

ஹிட் அடித்த முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Image
பிரிக்க முடியாதது, தீபாவளியும், புதுப்படமும் என சொல்லலாம்... தீபாவளி புது படங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு  அளவே இருக்காது ஆனால், இந்த வருடம் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாவது சந்தேகமே...    கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதுப்பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களையும் மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் சிவாஜி, கமலின் பாபநாசம், அஜித்தின் விஸ்வாசம், விஜயின் மெர்சல், தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களும் தீபாவளி சிறப்பாக மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளது.   இதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள...

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும்...

Image
மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறைகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. கல்லூரிகளுக்கு வருவதற்கு முன்பாக மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் வளாகத்தில்  உள்ள நீச்சல் குளத்தை திறக்கக்கூடாது என்றும் மாணவர்கள் கும்பலாக கூட கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், மாணவர்கள் 8445440632 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை அமல்படுத்துவது,  நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை என்பதால்  தமிழகத்தில் விடுதிகளை திறக்காமல் எப்படி கல்லூரிகளை  நடத்துவது என்பதில் உயர்கல்வித்துறை குழப்பம் அடைந்து இருக்கிறது. 

டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.

Image
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு. அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். 

நாடு முழுவதும் காற்று மாசு மோசமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை...

Image
காற்று மாசு ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் விளக்கமளித்திருந்த பட்டாசு வியாபாரிகள், பசுமைப்பட்டாசுகள் வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுவதாக நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தீர்ப்பளித்துள்ள பசுமை தீர்ப்பாயம், நாடு முழுவதும் காற்றுமாசு மோசமாக இருக்கும் இடங்களிலும், டெல்லி மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், காற்றுமாசு மிதமாகவும், அதற்கு கீழாகவும் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 2 மணி நேரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கிரானைட் குவாரி அமைப்பதற்கான டெண்டர்...

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் எம்.பி. செல்வக்குமார்,  கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்க துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அதை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட மாநில அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும், ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்க கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அமெரிக்க தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அதிபர் டொனால்டு டிரம்பை வலியுறுத்தி உள்ளார்.

Image
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வழக்கு தொடரும் டிரம்ப், ஜோ பைடன் தவறாக தன்னை வெற்றியாளர் என அடையாளம் காட்ட வேண்டாம் என கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே டிரம்பின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அவரை சமாதானம் அடைய செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியது. தற்போது மெலனியாயும், வெள்ளை மாளிகையில் டிரம்பை தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார் என தெரியவந்து உள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் வீசும் 20,000 விதைபந்துகள்...

Image
வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் பசுமையான சூழல் மற்றும் மழை பொழிவை அதிகரிக்கும் நோக்கில் 20,000 விதைபந்துகள் தயாரிக்கப்பட்டது. அதனை மலைகளில் வீசும் நிகழ்ச்சியின் தொடக்கமாக வேலூர் பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வேலூர் மாவட்டம் முழுவதும் மலைகளில் 20,000 விதைபந்துகள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் சப்-கலெக்டர் திரு.ஷேக் மன்சூர், வேலூர் சப்-கலெக்டர் திரு.கணேஷ், வேலூர் தனி வட்டாச்சியர் திரு.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு மலைகளில் விதைபந்துகள் வீசி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.