சுகாதார விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து கொரோனா பற்றிய விழிப்புணர்வு.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் சுகாதார விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து இன்று காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர் மேலும் காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினருக்கு கிருமிநாசினி, முக கவசம், கையுறை, வழங்கி பொது மக்களிடையே கொரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் இதில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சுகாதாரக் விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் வேலாயுதம், தன்வந்திரி சித்த மருத்துவம் டாக்டர் பாலமுரளி, கிருஷ்ணன், லயன்ஸ் மோகன், லயன்ஸ் தியாகு, பானாவரம் அரசு மருந்தாளர் தண்டபாணி, சுகாதார ஆய்வாளர் மோகன், மற்றும் திரளானோர் கலந்து கொண்டு காவேரிப்பாக்கம் முழுவதும் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை பஜார் வீதியாக சென்று நோட்டீஸ் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். (9150223444)
Comments
Post a Comment