பந்த லிட்டு பந்தி விரித்தாள் - தா.கவிசெல்வி.

மலை மகள்


 


நீண்டு வளர்ந்த


மலைமுக ராணியே


மீண்டு உயர்ந்த


கவி யுக தோணியே


 


மலை யேற்றம்


மது வேற்றமா?


 


உனைத் தீண்டும்


சுகம் மூண்டு -உன்


அகம் பூண்டு


தரிசனம் காண்டு


 


மலையடி நீண்டு


வழித்தடம் போந்து


உயிர்த்  தடம்


மீண்டோர் பலர்


 


மலை யேற்றம்


மது வேற்றமா?


 


வழித் தடம்


தாண்டையிலே


உயிர்க் குடம் சீண்டையிலே


மெய் தடம்


மாண்டோரோ


இன்னும் பலர்!


 


என்ன தான்


எத்தளிக்குது உன்னில்!


அதைத் திண்ணதான்


தத்தளிக்குது எம்மில்?


 


பச்சை முக


மேனி யில்


இச்சை சுக


காணி நீ!


 


நீலம்


சொட்டு தே! நீ


எனை வீழக்


கொட்டும் தேனீ


 


மண் ணிற


முன் னகமோ


எனைப் பின்னிடும்


சுண் ணகமோ!


 


கல் லாய் 


நீ நின்று


சொல் லாய்


நிதம் வந்து


கவியை செய்தாய்


பண் ணில்


 


பிள் ளாய்


என வந்து


வில் லாய்


வளை வித்து


அம் பாய்


மொய் தாய்


என்னில்!


 


அண் ணாந்து


பார்த் தே


அக மாய்ந்து


போ னேன்


 


எண் ணார்ந்த


கற்பனை யில்


எனில் ஆய்ந்து


போனேன்


 


வெட்ட வெளி


வான் உடன் - நீ


தொட்ட துளி


சாலப் பொருத்தம்


 


மழைக் கொட்டும்


விண் ணின்


வீழ்ச்சி யில்


அலை முட்டும்


உன் னின்


புணர்ச்சி யோ


அழகு நிறுத்தம்


 


இது 


அடுத்த பொருத்தம்!


 


பருவ நிலை


சூதா ட - உன்


உருவ நிலை


வாதா ட - அந்த


அருவ நிலை


பந் தாட 


கவி யின்


துருவ நிலை


இங்கே தானாட!


 


பனி மேகம்


வாகா க


உனை சூழ


லேசா க


கம் பளியாய்


அது வாக-அக்


கதப் பினில்


அழ காக


எனை சேர்ப்பாயா


மெது வாக?


 


கனிச் சுளையாய்


அருவிக் குலைகள்!


மலை மகளின்


பருவச் சிலைகள்!


 


பந்த லிட்டு


பந்தி விரித்தாள்


சன்ன மிட்டு


முந்தி முடிப்போமா?


 


செல்லக் 


குழந்தைகள்-உன் 


தொட்டிலில் தான்


எத்தனை?


எத்தனை?


 


பச்சை


மரக் காடுகள்


கச்சை


உயிர் மேடுகள்


 


கீச் சிடும்


புல் லினம்


நீரில்


பீய்ச் சிடும்


புள் ளினம்!


 


அனைத் திற்கும்


நீர் பாய்ச்சிடும்


மெல்லினம் நீ


 


அர வணைப்பில்


சீர் வாய்ச்சிடும்


வல்லினம் நீ


 


அதன் இணைப்பில்


கார் சுழிச்சிடும்


இடையினம் நீ


 


இருந் தும்


உனக் கில்லை 


பிறரை ஏய்ச்சிடும்


தலை கனம்!


 


உயிர் களைப்


பெற்றாய்


பயிர் களாய்


பேணி 


வளர்த்தாய்!


 


இதயத்தின்


அக ராதி!


இமயத்தின்


அந்தாதி!


நானும் 


உன் சாதி..


மானுடத் தில்


பெண் சாதி


 


இதுவே 


நான் சுவைத்து 


எழுதும் முதல் 


      'சாதி'!


 


இவள்



கவிதாயினி தா. கவிசெல்வி


M.A(his&eng).,B.A(Hindi).,B.ed., M.phil(his).


பட்டதாரி ஆசிரியர்


ஊ.ஒ.ந.நி.பள்ளி.,


மருதவல்லிப்பாளையம்


அணைக்கட்டு வட்டம்


வேலூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.