அன்று அது நியாயம் இன்று இது நியாயம் -தா.கவிசெல்வி.

 மாயக் கீர்த்தனைகள்


 


அன்று


அது நியாயம்!


இன்று


இது நியாயம்!


 


அன்று


அறுபதில் 


அந்நிய மாகி


வனத் தினில்


புண்ணிய மாதல்


வனப்பிரஸ்தம்-


நியாயம்!


 


இன்று


அறுபதில்


அந்நியப் படுத்தலே


அந்நியாயம்!


 


அங்கே


அறுபதில் துறவு


நியாயம்!


 


இங்கே


அறுபதில் உறவே


நியாயம்!


 


உணர்ச் 'சீ'களை


உதறிப் பார்க்க


மானுடம் முயலவில்லை!


உணர்வு களை


உருவிப் பார்க்க 


இன்னும் பயிலவில்லை!


 


அன்று


அது நியாயம்!


இன்று


இது நியாயம்!


 


ஞாலத் தின்


நியாயப் பரிவர்த்தனைகள்


காலத்தின்


மாயக் கீர்த்தனைகள்!


 


இது


கலி யுக


போர்க் கணைகள்!


 


நடுநிலை நழுவா


நம் வர்த்தனைகளே


சுழிநிலை உழலா


நேர் சுனைகள்!


வாழ்க்கைப் படகின் 


நேர் சுனைகள்!


 


வாழ்க்கை முறை


மாறலாம்


வாழும் முறைமை


மாற லாமா?


 


அன்று


அது நியாயம்!


இன்று


இது நியாயம்!


 


நேற்றோ 


நண்பனாய்..-


சொன்ன தெல்லாம்


நியாயம்


 


இன்றோ


எதிரி யாய்..-


செய்வ தெல்லாம்


அநியாயம்!


 


அன்று


அது நியாயம்!


இன்று


இது நியாயம்!


 


ஞாலத்தின் நியாயப்


பரிவர்த்தனைகள்!


காலத்தின் மாயக்


கீர்த்தனைகள்!


 


அன்று


உழைப் பில்லா 


மார்க்க ஊதியம் 


அநியாயம்


 


இன்று


உழைப் பில்லா


ஆக்க ஊதியம்


நியாயம்


 


அன்று


அது நியாயம்


இன்று


இது நியாயம்


 


அன்று


காலங்கடந்த நீதி


அநியாயம்!


 


இன்று


காலங்கடந்தாலும்


நீதி கிடந்தாலே


நியாயம்!


 


அன்று


அது நியாயம்


இன்று


இது நியாயம்


 


அன்று


உழைப்பவன்


உரிமைக்கு போராடல்


நியாயம்


 


இன்று


உரிமையில்லா


உழைப்பவன் வேரோடல்


நியாயம்


 


ஞாலத்தின் நியாயப்


பரிவர்த்தனைகள்


காலத்தின் மாயக்


கீர்த்தனைகள்!


 


பல நியாயங்கள்


அநியாயங் களாய்


பல அநியாயங்கள்


நியாயங் களாய்!


 


பகையும் 


போலி நடிப்பில் 


நடந்தால் நியாயம்


 


பாசமும் காலி


இருப்பில் கிடந்தால்


அநியாயம்!


 


அநியாயமும்


அழுது கனந்தால்


நியாயம்


 


நியாயமும்


நிமிர்ந்து சினந்தால்


அநியாயம்!


 


நடப்பில்


நடிப்பில் இருக்கா நியாயங்கள்


நிஜத்தில்


கிடப்பில் இருக்கும் அநியாயங்கள்


 


இது 


ஞாலத்தின் நியாயப்


பரிவர்த்தனைகள்


காலத்தின் மாயக்


கீர்த்தனைகள்!


 


ஆம்


காலத்தின் மாயக்


கீர்த்தனைகள்


கலியுக நியாயப்


போர்க் கணைகள்!


 


நடுநிலை நழுவா


நம் வர்த்தனைகளே


சுழி நிலை உழலா 


நேர் சுனைகள்!


வாழ்க்கைப் படகின்


நேர் சுனைகள்!


 


சுனைப் பாதையில்..



கவிதாயினி தா. கவிசெல்வி


M.A(his&eng).,B.A(Hindi).,B.ed., M.phil(his).


பட்டதாரி ஆசிரியர்


ஊ.ஒ.ந.நி.பள்ளி.,


மருதவல்லிப்பாளையம்


அணைக்கட்டு வட்டம்


வேலூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.