வாலாஜாபேட்டையில் வியாபாரிகள் நல அறக்கட்டளை புதிய கட்டிடம்...

ராணிப்பேட்டை மாவட்டம்



வாலாஜாபேட்டையில் வியாபாரிகள் நல அறக்கட்டளை புதிய கட்டிடம் மற்றும் வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தை மாநில வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் A.M. விக்ரமராஜா திறந்து வைத்து கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வியாபாரிகளுக்கு தல ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தார் மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட வாரியாக சங்க கொடி ஏற்றுதல் பெயர் பலகை திறப்பு விழா என பகுதிவாரியாக வணிகர் சங்கங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா தொற்று காரணமாக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 சங்கங்களை இணைத்து நிறைவு செய்துள்ளதாகவும் மேலும் அவர் கூறுகையில் வாலாஜாபேட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை இன்னும் திறக்கப்பட முடியாமல் வியாபாரிகள் பெரிதும் கஷ்டப்படுவதாக வாலாஜா மார்க்கெட்டில் காய்கறி கடைகளை நிபந்தனை இன்றி முழுமையாக உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவோம் என தெரிவித்தார் தொற்று காரணமாக பொது மக்களுக்கும் பாதுகாப்பு தேவை எங்களுக்கும் பாதுகாப்பு தேவை நாங்கள் உரிய பாதுகாப்புடன் அரசு அறிவித்துள்ள படி கடைபிடித்து வருவதாக கூறினார் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த வியாபாரிகளுக்கு  ஒரு குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் இந்த இழப்பீடு தொகையானது அரசு பணத்தில் இருந்து தர வேண்டாம் எனவும் கொரோனா காலகட்டத்தில் வியாபாரிகளிடமிருந்து அபராதத் தொகையாக பெற்ற பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அந்த பணத்திலிருந்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார் மருத்துவத் துறை காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் போன்று வியாபாரிகள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வியாபாரிகள் பெரும் உதவியாக இருந்துள்ளனர் தமிழக அரசு என்னென்ன திட்டங்கள் கொண்டு வருகிறதோ அதற்கு இந்த ஆறு மாத காலமாக முழு ஒத்துழைப்பு தந்து உள்ளோம் என தெரிவித்தார் இந்நிலையில் தமிழக அரசு வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கைகளை உடனே பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார் வேளாண்மை கொள்கையில் உருளைக்கிழங்கு வெங்காயம் பருப்பு எண்ணெய் வித்துக்கள் அத்தியாவசியப் பொருட்களில் இருந்து எடுத்துள்ளார்கள் அதை மீண்டும் அத்தியாவசிய பொருட்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார் பின்பு மாநில வணிகர் சங்க பேரமைப்பு பொருளாளர் A.M. சதக்கதுல்லா சங்கத்தின் கொடி ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் வேலூர் மண்டல வியாபாரிகள் சங்க தலைவர் ஆம்பூர் C. கிருஷ்ணன் தலைமையில் வாலாஜாபேட்டை வியாபாரிகள் நல அறக்கட்டளை தலைவர் Y.அக்பர்ஷரிப் அனைவரையும் வரவேற்றார் வாலாஜாபேட்டை வியாபாரிகள் நல அறக்கட்டளை செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.



ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.