CMC மருத்துவமனையில் புதிய இருதய அறுவைசிகிச்சையை நிகழ்த்தி சாதனை...

கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின்  இருதய சிகிச்சை பிரிவு2, அறுவைசிகிச்சை அல்லாத தசைவழி சிகிச்சையின் மூலம், 54 வயதான புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய செயற்கை பல்மோனரி வால்வ் ஒன்றை பொருத்தி சாதனை நிகழ்த்தியுள்ளனர்.



புதிய இருதய வால்வ் ஒன்றை கழுப்பகுதியில் உள்ள இரத்த நாணல் வழியாக பொருத்தினர். இந்த பெண்மணி தனது 9 வது வயதில் இதே CMC மருத்துவமனையில் வேறு ஒரு இருதயக்கோளாறுக்கு இருதய அறுவைசிகிச்சை ( Open Heart Surgery) மேற்கொண்டுள்ளார்கள். சமீபத்தில் இந்த நபர் அதிக களைப்பு ஏற்படுவதாகவும், வீட்டு வேலைகளை செய்வதில் சிரமம் இருப்பதாகவும், பரிசோதனைக்காக வந்திருந்தார்கள். பரிசோதனையை மேற்கொண்ட இந்த நபரின் இருதயத்தில் உள்ள ஒரு வால்வ் பழுதப்பட்டிருப்பதையும், இதனால் இருதயத்திலிருந்து வெளியே உடலின் வேறு  பாகங்களுக்கு செல்லவேண்டிய இரத்தம் திரும்பவும் இருதயத்திற்க்கே பின்னிட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த இருதய கோளாறால், இருதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் இரத்தக்குழாய் வீக்கம் அடைந்திருந்தது. இந்த கோளாறை சரிபடுத்தாமல் போனால், இருதயத்தின் செயல்பாடு அதிகளவில் பாதிக்கப்படும் என்பதால், மருத்துவ குழு அதிக ஆலோசனைகளில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட நபருக்கு புதிய இருதய வால்வ் ஒன்றை பொருத்தியே ஆகவேண்டும் என்று தீர்மானித்தனர். ஏற்கனவே இவருக்கு இருதய அறுவைசிகிச்சை செய்திருந்ததால், மீண்டும் அறுவைசிகிச்சை மேட்கொள்வதால் அதிக ஆபத்து மட்டுமின்றி, அதிக நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபடவேண்டியதிருக்கும் என்பதை உணர்ந்தனர்.
சமீபத்திய சிகிச்சை முறை முன்னேற்றங்களின்படி, வால்வுகளை அறுவைசிகிச்சை இல்லாமல் பொறுத்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இந்த சிகிச்சை முறை சற்று புதிதானவைகளானாலும், CMC யில் கடந்த நான்காண்டுகளாக இத்தகைய 'அறுவைசிகிச்சையின்றி வால்வு பொருத்தும்' சிகிச்சைகளை செய்துவருகிறோம். இதனால் அதிக அளவில் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு, மருத்துவமனையில் தங்க வேண்டிய நேரமும் அதிகளவில் குறைக்கப்படுகிறது.
இந்த நோயாளிக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இருதய வால்வை பயன்படுத்தினோம். இந்த வால்வ் சமீபத்தில் அதிகளவில் ஐரோப்பா,ஜெர்மனி மற்றும் நெதர்லாண்ட்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நோயாளியின் பல்மொனரி வால்வ் அதிக வீக்கம் அடைந்திருந்ததால், இருப்பதிலேயே மிக பெரிய அளவு செயற்கை வால்வ் ( அளவு 32 ) குஜராத் மாநிலத்திலுள்ள  வாபி என்ற பகுதியில் வால்வ் தயாரிக்கும் தொழிட்சாலையிலிருந்து வரவைக்கப்பட்டது. நோயாளியும் அவர் குடும்பமும் ஒப்புதல் அளித்தபிறகு, CMC இருதயநோய் பிரிவு 2 ஐ சார்ந்த டாக்டர். ஜான் ஜோஸ், டாக்டர்.பால் வீ ஜார்ஜ் மற்றும் டாக்டர். ஹர்ஷா தேஜா அவர்களின் தலைமையிலான குழு மயக்கவியல் நிபுணர்களின் குழு டாக்டர். ராஜ், டாக்டர். பாலாஜி மற்றும் டாக்டர். கிருபாகரன் அவர்கலின் உதவியோடு  இந்த சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தினர். சிறப்பாக தேறிவந்த காரணத்தால், இந்த நோயாளி 72 மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்கள்.
ஜேர்மனி தேசத்தில் இத்தகைய சிகிச்சை முறையில் 2015ல் சிறப்பு பயிற்சி பெற்ற குழு தலைவர் டாக்டர். ஜான் ஜோஸ், 2019ல்லிருந்து இத்தகைய அறுவைசிகிச்சையற்ற சிகிச்சையை  அளித்து வருகிறார். இத்தகைய சிகிச்சைக்கென்று ஒரு பிரத்தியேக கிளினிக் ஒன்றை வேலூர் CMC ல் துவங்கியுள்ளார். இதுவே நம் நாட்டில் முதல் முதல் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய சிகிச்சைக்கான  மையமாகும்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.