தேர்வு மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு...
தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு
மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவராக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த செ.நா.ஜனார்த்தனன் தேர்தெடுக்கப்பட்டார். இவ்வமைப்பின் 34ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நாகை என்.ரவி வரவேற்று பேசினார்.
மாநில கௌரவத்தலைவர் த.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார்.
மாநிலப் பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயல்பாடுகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது… தமிழகத்தில் கடநத் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு புதியதாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை மேலும் கடந்த 10 ஆண்டுகளாக காலி ஏற்பட்டுள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை இதனால் மாணவர்கள் தொழிற்கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு தொழிற்கல்வி பாடங்களை தற்கால தேவைக்கேற்ப மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது எனவே அனைத்து மேனிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை கட்டாய பாடமாக்க வேண்டும். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக எந்தவிதமான பதவி உயர்வின்றி பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள பல இலட்சம் ஆசிரியர்கள் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு வழங்கி வருவதை போல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டுகின்றோம் என்றார். பணி நிறைவு பெற்ற மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன், பொருளாளர் எ.பி.குமணன், கௌரவ முனைவர் பெற்ற, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.
பின்னர் பின்வரும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கடலூர் ஜி.பாண்டியன், தஞ்சை எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் தேர்தல் அலுவலராக செயலாற்றி பின்வரும் நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்தனர்.
மாநிலத்தலைவராக செ.நா.ஜனார்த்தனன், வேலூர்
மாநில பொதுச்செயலாளராக என்.ரவி, நாகப்பட்டினம்
மாநிலப்பொருளாளராக வெ.சேரமான், கடலூர்….2
பக்கம்-2
மாநில ஒருங்கிணைப்பாளராக திருநாவுக்கரசு, திருவாரூர்
மாநில அமைப்புச்செயலாளராக எஸ்.துரைராஜ், விழுப்புரம்
மாநில செய்தித்தொடர்பாளராக என்.ரவி, கடலூர்
மாநில மகளிர் அணி செயலாளராக டி.வைஜெயந்தி, சென்னை
மாநில துணைத்தலைவர்களாக நட்பானந்தம், நாகப்பட்டினம்
முகமதுரபீக், திருவாரூர்
மாநில இணை செயலாளர்களாக எம்.பாண்டுரெங்கன், வேலூர், இராணிப்பேட்டை எஸ்.தினகரன், திருவாரூர் நாகராஜன், நாகை
மாநில தணிக்கையாளர்களாக எம்.வெள்ளியங்கிரி, திருப்பத்தூர் (வேலூர்) ராஜசேகர், விழுப்புரம் ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் பின்வரும் பொருள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1.சென்னை உயர்நீதிமன்ற தீர்பின்படியும் தமிழக அரசின் பல்வேறு அரசாணையின் படியும் 06.04.2018 என்ற நிபந்தனை நாளினை தளர்த்தி அனைவரும் பயன் பெறும் வகையில் தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கிட கோரியும்,
2. எந்த விதமான பதவி உயர்வின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றி வரும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுகின்றோம்.
3.வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்று இருந்தால் பிற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு அளிக்க கோரியும்
4. தற்கால தேவைக்கேற்ப தொழிற்கல்வி பாடதிட்டங்களை மேம்படுதப்பட்டு வருவதால் தற்போது உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்திட்டதை கட்டாயபாடமாக்கிட கோருகின்றோம்.
5.சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியருக்னையான ஊதியம் அளிக்க கோரியும்
6.அரசாணை எண்.35ல் விடுபட்டுள்ள மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றிவரும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோருதல்
7. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700 தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிறப்பிட கோருகின்றோம்.
8. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தீர்மானங்களின் படி புதிய கல்விக்கொள்கையினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
9. ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது வழங்கப்பட்ட 17பி குறிப்பாணைகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்
இவண்,
செ.நா.ஜனார்த்தனன், என்.ரவி, வி.சேரமான்,
மாநிலத்தலைவர் மாநிலப் பொதுச்செயலாளர் மாநில பொருளாளர்
9443345667 9443489280
Comments
Post a Comment