வேலூர் மாநகராட்சி 18வது வார்டு- புதியதாக பொதுமக்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் டேங்க்...
வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் பகுதியில் பொதுமக்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் டேங்க் கடந்த இரண்டு வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருந்து வருகிறது.
இதனை புதியதாக மாற்றி கொடுக்க பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி புதியதாக தண்ணீர் தொட்டி, அதனுடன் பைப், குழாய், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி கொடுத்து மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பிரச்சனை அதிகம் நிலவும் இந்த பகுதியில் வசதி படைத்தவர்கள் மட்டும் சொந்தமாக மோட்டர் வைத்துள்ளனர்.
இதன் மூலம் இந்த பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவும்.
Comments
Post a Comment