திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவம்...
வரும் 16-ம் தேதி முதல் திருப்பதி மலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை மாட வீதிகளில் நடத்தவும், 300 ரூபாய் முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாட வீதிகளில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில், குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Comments
Post a Comment