Posts

Showing posts from October, 2020

ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா...

Image
ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா ஆற்காட்டில் நகரில் நடைபெற்றது இவ்விழாவிற்கு தேசிய தலைவர் வீர வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் வாலாஜா டோல்கேட் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் ஆற்காடு நகரில் அண்ணா சிலைக்கு தேசியத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்காடு நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் ராமு தேசிய அமைப்பு செயலாளர் சாது உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர் முனி வேல் இளைஞர் அணி மகளிர் அணி தேசிய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் தேசிய தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது நாங்கள் மதசார்பற்ற கட்சியை துவங்கியுள்ளோம் எங்களது இந்திய தேசிய ஜனநாயக கட்சி பெண்களுக்கும் முழு பாதுகாப்பும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் கட்சியாக...

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்கள்.

Image
 இந்த வரைவு வாக்குச்சாவடி  பட்டியலை அனைத்து  கட்சியினர்களும்  பெற்றுக்கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர். இளம்பகவத் அரக்கோணம் கோட்டாட்சியர். பேபிஇந்திரா,  தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) கோ.தாரகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தே. இளவரசி, (பொறுப்பு) தேர்தல் தனிவட்டாட்சியர். ஜெயக்குமார், இராணிப்பேட்டை அனைத்து வட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

தேர்வு மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு...

Image
தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவராக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த செ.நா.ஜனார்த்தனன் தேர்தெடுக்கப்பட்டார்.  இவ்வமைப்பின் 34ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில்  நடைபெற்றது.  மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நாகை என்.ரவி வரவேற்று பேசினார்.   மாநில கௌரவத்தலைவர் த.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயல்பாடுகளை விளக்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது… தமிழகத்தில் கடநத் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு புதியதாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை மேலும் கடந்த 10 ஆண்டுகளாக காலி ஏற்பட்டுள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை இதனால் மாணவர்கள் தொழிற்கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசு தொழிற்கல்வி பாடங்களை தற்கால தேவைக்கேற்ப மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது எனவே அனைத்து மேனிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை ...

அன்று அது நியாயம் இன்று இது நியாயம் -தா.கவிசெல்வி.

Image
 மாயக் கீர்த்தனைகள்   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   அன்று அறுபதில்  அந்நிய மாகி வனத் தினில் புண்ணிய மாதல் வனப்பிரஸ்தம்- நியாயம்!   இன்று அறுபதில் அந்நியப் படுத்தலே அந்நியாயம்!   அங்கே அறுபதில் துறவு நியாயம்!   இங்கே அறுபதில் உறவே நியாயம்!   உணர்ச் 'சீ'களை உதறிப் பார்க்க மானுடம் முயலவில்லை! உணர்வு களை உருவிப் பார்க்க  இன்னும் பயிலவில்லை!   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   ஞாலத் தின் நியாயப் பரிவர்த்தனைகள் காலத்தின் மாயக் கீர்த்தனைகள்!   இது கலி யுக போர்க் கணைகள்!   நடுநிலை நழுவா நம் வர்த்தனைகளே சுழிநிலை உழலா நேர் சுனைகள்! வாழ்க்கைப் படகின்  நேர் சுனைகள்!   வாழ்க்கை முறை மாறலாம் வாழும் முறைமை மாற லாமா?   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   நேற்றோ  நண்பனாய்..- சொன்ன தெல்லாம் நியாயம்   இன்றோ எதிரி யாய்..- செய்வ தெல்லாம் அநியாயம்!   அன்று அது நியாயம்! இன்று இது நியாயம்!   ஞாலத்தின் நியாயப் பரிவர்த்தனைகள்! காலத்தின் மாயக் கீர்த்தனைகள்!   அன்று உழைப் பில்லா  ம...

பந்த லிட்டு பந்தி விரித்தாள் - தா.கவிசெல்வி.

Image
மலை மகள்   நீண்டு வளர்ந்த மலைமுக ராணியே மீண்டு உயர்ந்த கவி யுக தோணியே   மலை யேற்றம் மது வேற்றமா?   உனைத் தீண்டும் சுகம் மூண்டு -உன் அகம் பூண்டு தரிசனம் காண்டு   மலையடி நீண்டு வழித்தடம் போந்து உயிர்த்  தடம் மீண்டோர் பலர்   மலை யேற்றம் மது வேற்றமா?   வழித் தடம் தாண்டையிலே உயிர்க் குடம் சீண்டையிலே மெய் தடம் மாண்டோரோ இன்னும் பலர்!   என்ன தான் எத்தளிக்குது உன்னில்! அதைத் திண்ணதான் தத்தளிக்குது எம்மில்?   பச்சை முக மேனி யில் இச்சை சுக காணி நீ!   நீலம் சொட்டு தே! நீ எனை வீழக் கொட்டும் தேனீ   மண் ணிற முன் னகமோ எனைப் பின்னிடும் சுண் ணகமோ!   கல் லாய்  நீ நின்று சொல் லாய் நிதம் வந்து கவியை செய்தாய் பண் ணில்   பிள் ளாய் என வந்து வில் லாய் வளை வித்து அம் பாய் மொய் தாய் என்னில்!   அண் ணாந்து பார்த் தே அக மாய்ந்து போ னேன்   எண் ணார்ந்த கற்பனை யில் எனில் ஆய்ந்து போனேன்   வெட்ட வெளி வான் உடன் - நீ தொட்ட துளி சாலப் பொருத்தம்   மழைக் கொட்டும் விண் ணின் வீழ்ச்சி யில் அலை முட்டும் உன் னின் புணர்ச்சி யோ அழகு நிறுத்தம் ...

வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா...

Image
வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா முன்னிட்டு மூன்றாம் நாளாம் இன்று திங்கட்கிழமை 19-10-20 ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம்நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் பகுதி கழக செயலாளர்கள் எம். ஏ. ஜெய்சங்கர் குப்புசாமி ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஏ. ஏ. தாஸ். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் வகுப்பறை...

Image
வேலூர் நடைபாறை அரசு ஆதி திராவிடர் நல ஆரம்ப பள்ளியின் சுமார்ட் வகுப்பறையை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் நேரில் வந்து திறந்து வைத்தார். முன்னதாக அடையாளமாக மரக்கன்று நடப்பட்டது.  மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் சுவர் முழுதும் வண்ண ஓவியங்கள், மேல்தளம் grid ceiling செய்யப்பட்டு, projector and projector screen, pen drive, two speakers, woofer center screen போன்ற வசதிகளுடன் உள்ளே நுழைந்ததும் தியேட்டர் உணர்வை கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி துணை ஆணையர், மண்டலம் 2 சுகாதார அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் இருந்தனர்.

பெண் காவலரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஆலங்குளம் காவல்துறையினர்.

Image
தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு. S.முருகன் IPS அவர்களின் உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினருக்கும் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி,அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று ஆலங்குளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் 2312 திருமதி. முருகேஸ்வரி அவர்களின் பிறந்தநாள் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னிவளவன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.காவல்துறையினரின் பணிச்சுமை களுக்கிடையே இவ்வாறு காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விடுமுறை அளிப்பது காவல்துறையினருக்கு மன மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக  தெரிவித்து வருகின்றனர்.

கடன் தவணை செலுத்துவதில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படாது ...

Image
உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாத தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும், வட்டிக்கான வட்டியை ரத்து செய்ய உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், 2 கோடிக்கும் குறைவான கடனுக்கு மட்டும் 6 மாத தவணை சலுகைக்கு வட்டி மீதான வட்டி ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடன் தவணை செலுத்த மேலும் காலஅவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதில் விலக்கு அளிப்பது தொடர்ந்தால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், பணப்பரிவர்தனையில் சுணக்கம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவம்...

Image
வரும் 16-ம் தேதி முதல் திருப்பதி மலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை மாட வீதிகளில் நடத்தவும், 300 ரூபாய் முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாட வீதிகளில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில், குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில்...

Image
விரைவில் 130 கி.மீ வேகமாகச் செல்லும் ரயில்களில் ஏசியில்லாத பெட்டிகள் கிடையாது - ரயில்வே அமைச்சகம் 130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேதுறையில் வரவுள்ள மாற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நரேன், ‘எல்லா ஏசியில்லாத ரயில்பெட்டிகளும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தற்போது, பெரும்பாலான வழித்தடங்களில் அதிகபட்ச வேகம் 110 கி.மீட்டராக இருந்துவருகிறது. சிறப்பு ரயில்களான ராஜதானிஸ், சதாப்தி, துரந்தோ ரயில்கள் மட்டுமே 120 கி.மீ வேகத்துக்கு இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சில ரயில்கள் 130 கி.மீட்டருக்கு மேல் வேகமாக இயக்குவதற்கு தகுதிவாய்ந்தவை. 130 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு ஏ.சி பெட்டிகள் அவசியமானவை. டிக்கெட் கட்டணம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும். ரயில்வே துறையை அதிவேகமாக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டுவருகிறது. 110 கி.மீட்டருக்கு குறைவான...

சேண்பாக்கம் ராகவேந்தர் மடத்தில் ஓமம் ஆரம்பம் ஆகி உள்ளது...

Image
சேண்பாக்கம் ராகவேந்தர் மடத்தில் உலக மக்களின் நன்மைவேண்டி  ஓமம் ஆரம்பம் ஆகி உள்ளது.

விவசாயிகளுக்கு சொத்து அட்டை...

Image

வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி...

Image
புதிய தண்ணீர் தொட்டி வைத்து, மோட்டார் பழுது சரி பார்த்து, புதிய குழாய்கள் மாட்டி, சிமெண்ட் மூலம் தொட்டியை சுவரில் நிரந்தரமாக பொருத்தி, எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து 2 வருடங்களாக பயனற்று இருந்த தண்ணீர் தொட்டியை 8 மணி நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.

வெங்காயத்தில் இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி ஒன்று கண்டறிந்துள்ளது.

Image
வெங்காயத்தில் வழக்கமான வெங்காயங்கள் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள வெங்காயங்கள் என இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி ஒன்று கண்டறிந்துள்ளது. தனது அங்காடியில் உள்ள வல்லா- வல்லா என்னும் ஒருவகை வெங்காயத்துக்கான விதைகள் குறித்து ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்த முயற்சி செய்தபோதே இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, வெங்காயத்தின் விதைகள் குறித்த விளம்பரம் "ஆபாசமாக" உள்ளதாக கூறி அதை ஃபேஸ்புக் நிராகரித்துள்ளது. இந்த நிலையில், தனது தானியங்கி தொழில்நுட்பம் செய்த இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் தானியங்கி தொழில்நுட்பத்தால் நிராகரிக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், அதிக எடை மற்றும் இனிப்பு சுவைக்காக அறியப்படும் வல்லா வல்லா வெங்காயங்கள் மரக்கூடையில் பல வெட்டப்படாமலும், சில வெட்டப்பட்ட நிலையிலும் உள்ளதை போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. தங்களது விளம்பரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிவதற்கு சிறிதுநேரம் பிடித்ததாக அந்த அங்காடியின் மேலாளர் ஜாக்சன் மெக்லீன் கூறுகிறார். அதன் ப...

வேலூர் மாநகராட்சி 18வது வார்டு- புதியதாக பொதுமக்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் டேங்க்...

Image
வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் பகுதியில் பொதுமக்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் டேங்க் கடந்த இரண்டு வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருந்து வருகிறது. இதனை புதியதாக மாற்றி கொடுக்க பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி புதியதாக தண்ணீர் தொட்டி, அதனுடன் பைப், குழாய், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி கொடுத்து மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.  தண்ணீர் பிரச்சனை அதிகம் நிலவும் இந்த பகுதியில் வசதி படைத்தவர்கள் மட்டும் சொந்தமாக மோட்டர் வைத்துள்ளனர். இதன் மூலம் இந்த பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவும்.

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

Image
உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி

SRK.அப்பு அவர்கள் தமிழக முதல்வருமான அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Image
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் விவசாயிகளின் விடிவெள்ளி  எங்கள் தங்கம் எடப்பாடியாரை 2021 சட்டமன்றத் தேர்தலில்  முதல்வர் வேட்பாளராகவும், கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் , மற்றும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அறிவித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் அண்ணன் OPS அவர்களையும், மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாரம்பரிய தமிழகத்தின் முதல் ரயில் நிலையத்தில்  சரக்கு ரயில் சேவையின் தொடங்க பணிகள் ஆய்வு.

Image
வாலாஜாரோட் ரயில் நிலையம். தொழில் நகரமான ராணிப்பேட்டை  சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யவும் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வாகன போக்குவரத்து முதன்மையாக உள்ளது சரக்கு ரயில் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏதுவாக இருக்கும் என்பதால் கிடப்பில் உள்ள திண்டிவனம் நகரி ரயில் பாதை மூலம் சரக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதன்படி சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய சரக்கு ரயில் போக்குவரத்து சேவையின் தொடங்க பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.. வாலாஜா ரோட்டில் அனைத்து ரயில்களும் நின்று நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு அவர் கூறியதாவது... வாலாஜாரோட் முதல் கட்டமாக  ரயில் நிலையம் வர...

வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  பறிமுதல்.

Image
வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் தலைமையில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அவர்கள் முன்னிலையிலும் சுண்ணாம்பு கார தெருவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும், மேலும் கடை உரிமையாளருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, இரண்டாம் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் மூன்றாம் மண்டல காதார அலுவலர் லூர்துசாமி ஒன்றாம் மண்டலம் சுகாதார  ஆய்வாளர் இளையராஜா உடனிருந்தனர்.

CMC மருத்துவமனையில் புதிய இருதய அறுவைசிகிச்சையை நிகழ்த்தி சாதனை...

Image
கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின்  இருதய சிகிச்சை பிரிவு2, அறுவைசிகிச்சை அல்லாத தசைவழி சிகிச்சையின் மூலம், 54 வயதான புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய செயற்கை பல்மோனரி வால்வ் ஒன்றை பொருத்தி சாதனை நிகழ்த்தியுள்ளனர். புதிய இருதய வால்வ் ஒன்றை கழுப்பகுதியில் உள்ள இரத்த நாணல் வழியாக பொருத்தினர். இந்த பெண்மணி தனது 9 வது வயதில் இதே CMC மருத்துவமனையில் வேறு ஒரு இருதயக்கோளாறுக்கு இருதய அறுவைசிகிச்சை ( Open Heart Surgery) மேற்கொண்டுள்ளார்கள். சமீபத்தில் இந்த நபர் அதிக களைப்பு ஏற்படுவதாகவும், வீட்டு வேலைகளை செய்வதில் சிரமம் இருப்பதாகவும், பரிசோதனைக்காக வந்திருந்தார்கள். பரிசோதனையை மேற்கொண்ட இந்த நபரின் இருதயத்தில் உள்ள ஒரு வால்வ் பழுதப்பட்டிருப்பதையும், இதனால் இருதயத்திலிருந்து வெளியே உடலின் வேறு  பாகங்களுக்கு செல்லவேண்டிய இரத்தம் திரும்பவும் இருதயத்திற்க்கே பின்னிட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த இருதய கோளாறால், இருதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் இரத்தக்குழாய் வீக்கம் அடைந்திருந்தது. இந்த கோளாறை சரிபடுத்தாமல் போனால், இருதயத்தின் செயல்பாடு அதிகளவில் பாதிக்கப்படும் எ...

அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவசமாக நோட்டுபுத்தகம் வழங்கிய தினேஷ் சரவணன்.

Image
வேலூர் செங்காநத்தம் மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு எழுதி பயிற்சி செய்ய இலவசமாக நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது. 

நிலத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

Image
இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களிடம் நேரடியாக பொருட்களை பெற்று வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நம் சந்தை குழுவின் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.  நிலத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில் நம் சந்தை குழு சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம்முடைய பங்களிப்பாக 50 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மற்றும் 50 மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு. ராஜேஷ் மயில்வேலன்.

பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர்...

Image
பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பேரிலும் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தல் பேரிலும் பழைய பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் 500 பேருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி

வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு...

Image
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வசுந்தரி தலைமை தாங்கினார். குடும்பநல நீதிபதி லதா, மக்கள் நீதிமன்ற தலைவர் அருணாசலம், போக்சோ சிறப்பு நீதிபதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நில மோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன், கூடுதல் தொழிலாளர் நல தலைமை அதிகாரி மணிவண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனிதா ஆனந்த், நிர்வாக அலுவலர் சதீஷ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 390 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மூலம் ரூ.2 கோடியே 34 லட்சத்து 27 ஆயிரத்து 80 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. மக்...

குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கிய தினேஷ் சரவணன்.

Image
வேலூரில் சாலையோரம் கூடாரம் அமைத்து வசிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 10 குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் இலவசமாக வழங்கப்பட்டது. புதிய ஆடைகள் அணிந்த பிறகு குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2000 பனை விதைகளை நட்டுள்ளார் தினேஷ் சரவணன்.

Image
கல்வி தந்தை காமராசர் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் உள்ள மூன்று குளங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 2000 பனை விதைகள், 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடக்கமாக நாங்கள் சீரமைத்த ஏறியூர் குளத்தில் வேலூர் தனி வட்டாச்சியர் திரு.விஜயன் மற்றும் வேலூரில் வசிக்கும் மாதனூர் BDO திரு.நலங்கிள்ளி நிகழ்வை தொடங்கி வைத்தனர். 

சுகாதார விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து கொரோனா  பற்றிய விழிப்புணர்வு.

Image
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் சுகாதார விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து இன்று காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர் மேலும் காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினருக்கு கிருமிநாசினி, முக கவசம், கையுறை, வழங்கி பொது மக்களிடையே  கொரோனா  தாக்கத்தை குறைக்க வேண்டி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் இதில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சுகாதாரக் விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் வேலாயுதம், தன்வந்திரி சித்த மருத்துவம் டாக்டர் பாலமுரளி, கிருஷ்ணன், லயன்ஸ் மோகன், லயன்ஸ் தியாகு,  பானாவரம் அரசு மருந்தாளர் தண்டபாணி, சுகாதார ஆய்வாளர் மோகன், மற்றும் திரளானோர் கலந்து கொண்டு காவேரிப்பாக்கம் முழுவதும் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை பஜார் வீதியாக சென்று நோட்டீஸ் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். (91502234...

வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள்...

Image
  கடந்த ஆகஸ்ட் மாதம் வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள் நட்டதையடுத்து பனை விதை நடுதலில் அடுத்தகட்டமாக வேலூரில் உள்ள பல்வேறு குளங்களை சுற்றி பனை விதை நட இருக்கிறோம். இன்று முதற்கட்டமாக 1000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது . -தினேஷ் சரவணன்.

10 வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த ஏறியூர் புதிய பொலிவுடன் காட்சி...

Image
10 வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த வேலூர் ஏறியூர் காரிய மேடை அருகில் உள்ள குளத்தை அந்த பகுதி இளைஞர்கள் சீரமைத்து தர கோரிக்கை வைத்ததையடுத்து முற்றிலும் சீரமைத்து புதிய பொலிவுடன் காட்சி தருகிறது. இந்த இடத்தில் இப்படி ஒரு குளம் இருப்பது அந்த தெருவில் இருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாதவாறு சிதிலமடைந்து இருந்தது. தற்போது சீரமைத்த பிறகு அனைவரும் வந்து பார்த்து செல்கின்றார். அரசு இந்த குளத்தை மேலும் பராமரிக்க அன்போடு கேட்டு கொள்கிறேன். - தினேஷ் சரவணன்.

வாலாஜாபேட்டையில் வியாபாரிகள் நல அறக்கட்டளை புதிய கட்டிடம்...

Image
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வியாபாரிகள் நல அறக்கட்டளை புதிய கட்டிடம் மற்றும் வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தை மாநில வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் A.M. விக்ரமராஜா திறந்து வைத்து கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வியாபாரிகளுக்கு தல ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தார் மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட வாரியாக சங்க கொடி ஏற்றுதல் பெயர் பலகை திறப்பு விழா என பகுதிவாரியாக வணிகர் சங்கங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா தொற்று காரணமாக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 சங்கங்களை இணைத்து நிறைவு செய்துள்ளதாகவும் மேலும் அவர் கூறுகையில் வாலாஜாபேட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை இன்னும் திறக்கப்பட முடியாமல் வியாபாரிகள் பெரிதும் கஷ்டப்படுவதாக வாலாஜா மார்க்கெட்டில் காய்கறி கடைகளை நிபந்தனை இன்றி முழுமையாக உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவோம் என தெரிவித்தார் தொற்று காரணமாக பொத...

ராணிப்பேட்டை மாவட்ட மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய செயல் முறை அறிமுகம்.

Image
மூத்த குடிமக்கள்  பாதுகாப்புக்காக நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல்முறை அறிமுகம் தமிழகத்தில் முதல் முறை ராணிப்பேட்டை மாவட்டத்தில்.. ராணிப்பேட்டை மாவட்ட மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமகன்கள் இன் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல் முறையை அறிமுக படுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 162 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களிலிருந்து புத்தகம்( PattaBook)வைக்கப்பட்டு காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அவர்கள் வீட்டிற்கு சென்று பட்டா புத்தகத்தில் கையொப்பமிடும் இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் (Qrcode) செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தட...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைப்பு...பொதுமக்கள் மகிழ்ச்சி காவல்துறையை வெகுவாக பாராட்டினர்.

Image
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் Cybercell உதவி ஆய்வாளர் சரவணன், காவலர்கள் ராஜ்குமார் (PC-239),ராதிகா (WGRI -1743),விஜய் (PC-1671),.ஐஸ்வர்யா (WPC-714)  ஆகியோரால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன சுமார் 6,47,500 /- மதிப்புள்ள 50 செல்போன்கள்  கண்டறியப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்.பூரணி மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...