வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா...

வேலூரில் அமையப்பெற்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா மற்றும் ஆற்காடு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா  ஆகிய இரண்டு விழாக்களும்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்  ஏ.பி.சாஹி அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக  நடைபெற்றது. தலைமை நீதியரசர் அமரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்.



அவ்வுரையில் கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் கீழமை நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதியரசர் எம் சத்தியநாராயணன் வேலூர் மாவட்ட நீதிபதி நீதியரசர் எஸ்எம் சுப்பிரமணியம் வேலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மாண்புமிகு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும்  நீதியரசர் எம் டி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



இவ் விழாவில்  செல்வசுந்தரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வேலூர் மாவட்டம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அயிராதரசு ராஜசேகரன் கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பு பொதுப்பணித்துறை அவர்கள் ஆற்காடு நீதிமன்ற கட்டிடம் சார்ந்த திட்ட அறிக்கையை வாசித்தார்.
விழாவில் வேலூர் சரக டிஜஜி  என்.காமினி வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ. சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதரிஷினி 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவனருள், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.உலகநாதன் தலைவர் பார் அசோசியேஷன் வேலூர் பி.தினகரன் தலைவர் அட்வகேட் அசோசியேசன் வேலூர் ஜே.காஞ்சனா அறிவழகன் தலைவர் பெண்கள் பார் அசோசியேஷன் வேலூர் மற்றும் பி.நந்தகுமார் தலைவர் பார் அசோசியேஷன் ஆற்காடு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வேலூர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் விழாவில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக ஆனந்தன் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வேலூர் மாவட்டம் நன்றி உரையாற்றினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். (9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.